search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem district collector"

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மனு நீதிநாள் முகாமில் வீட்டை விட்டு மகன் விரட்டியதால் மூதாட்டி கலெக்டர் ரோகிணி காலில் விழுந்து கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சேலம்:

    சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 70). மனு நீதி நாளான இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சரஸ்வதி திடீரென கலெக்டர் காலில் விழுந்து கதறினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    நான் கருங்கல்பட்டியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். எனது கணவர் இறந்து விட்ட நிலையில் எனது மகனும், மருமகளும் வீட்டை விட்டு துரத்தி விட்டனர்.

    நான் எந்த ஆதரவும் இல்லாமல் அனாதையாக இருக்கிறேன். இது குறித்து எனது மகன், மருமகளிடம் விசாரித்J விட்டு என்னை ஒரு ஆதரவற்ற இல்லத்தில் சேர்த்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.
    சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபா கூட்டம் நாளை காந்தி பிறந்த தினத்தன்று நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபா கூட்டம் நாளை (செவ்வாய்க் கிழமை) காந்தி பிறந்த தினத்தன்று நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய, மாநில அரசின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் நாளை கிராமசபா நடைபெற உள்ளது. கூட்டத்தில், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்படுத்த தடை செய்தல், திறந்தவெளி மலம் கழிக்கப்படாத ஊராட்சிகளாக அறிவித்தல், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல், கழிப்பறை இல்லாதோர் விவரப்பட்டியல் தெரிவித்தல், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தல்,

    ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள் பயன்படுத்தப்படுத்துவது குறித்து விவாதித்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கிராம வளர்ச்சித்திட்டம் குறித்து விவாதம் செய்தல் குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்துதல்,

    கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், திட்ட அறிக்கை, முதல் அமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் 2018-19, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் திட்ட அறிக்கை முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்குதல் மற்றும் அரசின் முக்கிய திட்டங்கள் குறித்த விளக்க உரையும் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறி உள்ளார்.
    ×