search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sankarankovil"

    • ரெங்கநாதபுரம் துரைச்சாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • சங்கரன்கோவில் -சுரண்டை வழித்தடத்தில் 36 டீ என்ற புதிய பஸ் வழித்தடம் உருவாக்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றியம் குலசேகரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட, ரெங்கநாதபுரம் கிராமத்தில் அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் -சுரண்டை வழித்தடத்தில் குலசேகரமங்கலம், ரெங்கநாதபுரம் துரைச்சாமிபுரம் ஆகிய கிராமங்களில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

    புதியவழித்தடத்தில் இயக்கம்

    அதனை தொடர்ந்து அந்த வழித்தடங்களில் பஸ்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    தற்போது சங்கரன்கோவில் முதல் சுரண்டை வழித்தடத்தில் இந்த கிராமங்களை இணைத்து 36 டீ என்ற புதிய பஸ் வழித்தடம் உருவாக்கப்பட்டு அந்த வழித்தடத்தில் பஸ் சேவை தொடங்கப்பட்டது.

    அதனை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கொடி அசைத்து பஸ் சேவையை தொடங்கி வைத்தார். அப்போது தங்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த ராஜா எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் சங்கரன்கோ வில் போக்குவரத்து பணிமனை மேலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பெரியதுரை ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரிவினோ, வினுசக்கரவர்த்தி, ஊராட்சி தலைவர் வெள்ளத்துரை, தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அருள்ராஜ், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய வாறுகால் அமைக்கும் பணியை துரிதப்படுத்த கோரி பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, இது குறித்து கமிஷனரிடம் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி சங்குபுரம் தெருவில் புதிய வாறுகால் அமைக்கும் பணியை துரிதப்படுத்த கோரி தெருவில் உள்ள பெண்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்மனிடம் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சேர்மன் உமா மகேஸ்வரி, இது குறித்து நகராட்சி கமிஷனரிடம் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வாறுகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு விரைவில் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • கரிவலம்வந்தநல்லூரில் வருகிற 27-ந் தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
    • பொது தேர்வுகளில் முதல் 3 இடங்கள் பிடித்தவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியம் கரிவலம்வந்தநல்லூரில் வருகிற 27-ந் தேதி தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., பங்கேற்கும் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    ஆலோசனை கூட்டம்

    இது தொடர்பான ஆலோசனை கூட்டம் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் பத்மநாபன், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சங்கரன்கோவில் வடக்கு ஒன்றியத்திற்கு வரும் கனிமொழி எம்.பி.க்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் வடக்கு ஒன்றியத்தில் உள்ள கிளை கழகங்களில் கட்சி கொடி ஏற்றவும், போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும்.

    ஊக்கத் தொகை

    கரிவலம்வந்தநல்லூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொது தேர்வுகளில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவது, பொதுக்கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி.யிடம் அனுமதி வாங்கித் தந்த ராஜா எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் தேவா என்ற தேவதாஸ் மற்றும் மாவட்ட பிரதிநிதி அழகையா, ரவி, தேவன், ஒன்றிய துணை செயலாளர்கள் முருகேசன், மாரியப்பன், சண்முகத்தாய், வடிவேல்முருகன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தினேஷ், சரவணபெருமாள், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் மாரியப்பன், முத்துகிருஷ்ணன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் மணி, ஒன்றிய இளைஞரணி யோகேஷ்குமார், கலவை மாரிமுத்து, அய்யனார், ஒன்றிய பிரதிநிதி ஈஸ்வரன், தங்கவேல், சுந்தரமகாலிங்கம் என்ற ரவி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் பிரபாவதி, ஒன்றிய மகளிரணி கோமதி, பிரேமா, தங்கமாடத்தி, பரமேஸ்வரி, தெய்வானை,

    ஒன்றிய பொருளாளர் ரமேஷ் பாண்டியன், ஒன்றிய மாணவர் அணி ராஜேஷ் பிரபாகரன், பால்வண்ணன், உதயசூரியன், மாங்குடி கார்த்திக், மாங்குடி கவுன்சிலர் சமுத்திரம், பனையூர் கவுன்சிலர் அமுதாராமசாமி, சுப்புலாபுரம் கவுன்சிலர் பார்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் மேன்மை சேமிப்பு திட்டம் மகளிர் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
    • 2 வருடம் கழித்து 7.5 சதவீதம் வட்டியுடன் பணம் திரும்ப கிடைக்கும்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை அஞ்சலக அதிகாரி முத்துமாரி தலைமை தாங்கினார். உதவி தலைமை அஞ்சலக அதிகாரிகள் மகேஸ்வரன், கோமதிசங்கர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி கலந்து கொண்டு மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரங்களை வழங்கினார்.

    இது குறித்து அஞ்சலக அதிகாரிகள் கூறுகையில், இந்த திட்டமானது மகளிர் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இதில் 2 வருடங்களுக்கு ரூ. 1000 முதல் ரூ. 2 லட்சம் வரை டெபாசிட் செய்தால் 2 வருடம் கழித்து 7.5 சதவீதம் வட்டியுடன் பணம் திரும்ப கிடைக்கும். ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். முதல் கணக்கு தொடங்கி 3 மாதம் ஆன பின்னர் தான் அடுத்த கணக்கு தொடங்க முடியும்.

    இந்த சேமிப்பில் ஒரு வருடம் கழித்து 40 சதவீதம் பணத்தை எடுத்து கொள்ளலாம். கணக்கு தொடங்கப்பட்டு 6 மாத காலத்தில் கணக்கை முதிர்வு செய்தால் வட்டி குறைத்து 5.5 சதவிகிதம் வழங்கப்படும். கணக்கு வைத்து இருப்பவர்கள் இறந்தாலோ அல்லது அவர்களது பாதுகாவலர்கள் இறந்தாலோ கணக்கு வைத்திருப்பவர்கள் நோய்வாய்ப் பட்டாலோ உரிய ஆவணங்களை கொடுத்து 7.5 சதவீத வட்டியுடன் பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என தெரிவித்தனர். இதில் நகராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ், மாரிசாமி, இளைஞரணி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இளையரசனேந்தலில் பொதுக்கூட்டம் நடந்தது.
    • தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்ந்து வருகின்றது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி குருவிகுளம் கிழக்கு ஒன்றியம் சார்பில் இளையரசனேந்தலில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடந்தது.

    மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் செந்தில்வேல், கடற்கரை, கனகராஜ், மாயகிருஷ்ணன் முத்தையா, மனோகரன், பொன்சீனி, முத்துசாமி, கணேசன், முத்துலட்சுமி, செல்வி, மணிமாலா, கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குருவிகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிறிஸ்டோபர் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.,தென்காசி எம்.பி. தனுஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தை பொறுத்த வரை கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் எந்தவித மக்கள் முன்னேற்ற திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. தற்போது இந்தியாவை வியக்கும் வகையில் ஆட்சி நடத்திவரும் நமது முதல்- அமைச்சரின் சீரிய ஆட்சியில் 2 ஆண்டுகளில் வளர்ச்சி பாதையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்ந்து வருகின்றது.

    சங்கரன்கோவில் தொகுதியை பொறுத்தவரை 32 ஆண்டுகள் அ.தி.மு.க. வசம் இருந்தும், அதில் சுமார் 16 ஆண்டுகள் அமைச்சர் அந்தஸ்தில் இருந்தும் முன்னேற்றம் என்பது ஒரு துளி கூட நடைபெறவில்லை.

    கலைஞர் ஆட்சியில் தான் இந்த பகுதி மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்தத் திட்டம் தான் இன்று வரை இந்த பகுதி மக்களுக்கு மிகப் பிரதான குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    மேலும் தற்பொழுதும் கலைஞர் வழியில் ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தாமிரபரணி திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு சீரான குடிநீர் விநியோகம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சங்கரன்கோவில் தொகுதியில் பல்வேறு முன்னேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக முதல்- அமைச்சரின் சீரிய ஆட்சியில் தமிழ்நாடு எல்லா வகையிலும் முன்னேறி வருகிறது என்பது உண்மை என்றார்.

    தொடர்ந்து நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மாற்றுக் கட்சியில் இருந்து தி.மு.க.வில் இணைத்து கொண்ட நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட துணை செயலாளர்கள் ராஜதுரை, புனிதா, பொதுக்குழு உறுப்பினர் பராசக்தி, நகர செயலாளர் புளியங்குடி அந்தோணிசாமி, பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்ரமணியம் ,கிளை செயலாளர்கள் ராமச்சந்திரன், பாலமுருகன், ராமசாமி, ஞானசெல்லப்பா, ராமமூர்த்தி, வேலுச்சாமி, கருப்பசாமி, ஆண்ட்ரூஸ், தங்கராஜ், முருகன், ராஜேந்திரன், கந்தவேல், கருப்பசாமி, சீதாராமன், மாரிசாமி, மாயகிருஷ்ணன் மற்றும் சூரப்பா, சகாயராஜ், பரமசிவன், சிகாமணி, ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை நக்க முத்தலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் செய்திருந்தார். முடிவில் அருண் நன்றி கூறினார்.

    • ஆறுமுகம் பாண்டியன் மதுரை செல்லும் ரெயிலில் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் ஏறி உள்ளார்.
    • பலத்த காயமடைந்த ஆறுமுகம் பாண்டியனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே இளவன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் பாண்டியன். விவசாயி. இவர் நேற்று முன்தினம் மதுரை செல்வதற்காக தென்காசியில் இருந்து மதுரை செல்லும் ரெயிலில் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் ஏறி உள்ளார். ரெயில் சிறிது தூரம் சென்ற நிலையில் படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த ஆறுமுக பாண்டியன் ரெயிலில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார்.

    பலத்த காயமடைந்த அவரை மீட்டு சங்கரன் கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேளாண் அடுக்கு திட்டம் தொடர்பாக வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் எடுத்து கூறினார்.
    • மேலநீலிதநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஞான தீபா கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து பேசினார்.

    சங்கரன்கோவில்:

    மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுரையின்படி, வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலமாக வேளாண் பொறியியல் துறை சார்பில் பண்ணை எந்திரமயமாக்கல் மற்றும் புதிய எந்திரங்களை பிரபலப்படுத்துதல் பற்றி விவசாயிகள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் தலைமை தாங்கி விவசாயிகளிடையே உரையாற்றினார். வேளாண் அடுக்கு திட்டம் தொடர்பாக விவசாயிகளிடையே எடுத்து கூறினார். கிராம நிர்வாக அலுவலர் தங்களுடைய ஆவணங்களை கொடுத்து வலைதளத்தில் பதிவேற்றம் செய்து 13 துறை திட்டங்களின் பயன்களைப் பெற பயனுள்ளதாக இருக்கும் என்றும், வேளாண் உழவர் நலத்துறை சம்பந்தமான திட்டங்கள் பற்றியும், பயிர் காப்பீடு செய்வதன் அவசியம் பற்றியும் எடுத்துக்கூறினார். மேலநீலிதநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஞான தீபா கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். வேளாண் பொறியாளர் திருப்பதி பேசுகையில், மானிய விலையில் சோலார் பம்ப்செட் அமைப்பது மற்றும் டிராக்டர் மானிய விலையில் பெறுவது, பண்ணை குட்டை அமைப்பது மற்றும் பல புதிய பண்ணை எந்திரங்களை மானிய விலையில் பெற முடியும் என்பதை பற்றி விவசாயிகளிடையே தெளிவாக எடுத்துக் கூறினார். வேளாண்மை அலுவலர் மகேஷ் திட்டங்கள் மானிய விவரங்கள் பற்றி பேசினார். பயிற்சியில் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் திருமலை குமார் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தன், பயிர் அறுவடை பரிசோதகர் மகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்ட நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய கோரிக்கை
    • ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தேரடி திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்ட நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் அபுதாஹீர் தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொதுச்செயலாளர் சிக்கந்தர், 20-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஷேக் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இணைச் செயலாளர் அப்துல் நசீர் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் யாசர்கான், ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் சவுக்கத் அலி உஸ்மானி, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் வழக்கறிஞர் லுக்மான் ஹக்கீம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் ஷேக் முகம்மது நன்றி கூறினார்.

    சங்கரன்கோவிலில் இலவச யோக பயிற்சி முகாம் நடைபெற்றது.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் கோடை விடுமுறையை குழந்தைகள் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்று தனியார் யோகா அறக்கட்டளை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு 20 நாட்களாக 250 குழந்தைகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் தினந்தோறும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்றுடன் யோகா பயிற்சி முடிவடைந்த நிலையில் குழந்தைகளுக்கு சான்றிதழ்கள், பரிசுப்பொருட்களை சங்கரன்கோவில் தாசில்தார் பாபு, இன்ஸ்பெக்டர்கள் மாதவன், பவுல்யோசுதாஸ் ஆகியோர் வழங்கி குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.

    இதில் பெற்றோர்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர். இதில் இன்ஸ்பெக்டர்  பவுல் யோசுதாஸ் பேசும்போது உங்கள் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி கொடுக்கும் போது செல்போன் கலாச்சாரம் அதிகரித்து உறவுகள் குறைய ஆரம்பிக்கிறது.

    எனவே உங்கள் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி கொடுக்காமல் உறவுகளை சொல்லி கொடுத்து வளர்க்க கற்றுகொடுங்கள் என கூறினார்.
    சங்கரன்கோவிலில் பெற்றோர் திட்டியதால் வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள நகரம் உரக்கடை தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் பிரமுத்து(வயது 21). இவர் 9-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, கட்டிட வேலைக்கு சென்றுவந்தார். கடந்த 23-ந்தேதி அவர் திடீரென விஷம் குடித்தார். நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் நேற்று இறந்தார்.

    இதுதொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், கடந்த சில நாட்களாக பிரமுத்து வேலைக்கு சென்றுவிட்டு இரவில் மிகவும் தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது தாயார் மாரியம்மாள் கண்டித்ததாக கூறப்படுகிறது.

     இதனால் பிரமுத்து யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி அவசர கூட்டம் சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் ரவிசந்திரன், நகராட்சி பொறியாளர் ஜெயப்பிரியா முன்னிலை வகித்தனர்.

     இதில் வருகிற ஆகஸ்ட் மாதம் சங்கரன் கோவிலில் நடைபெற உள்ள முக்கிய திருவிழாவான ஆடித்தபசு திருவிழாவை நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை அடிப்படை வசதிகள் குறித்து உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தினர்.  கோரிக்கையை ஏற்ற சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

    இதில் சுகாதார அலுவலர் பாலச்சந்தர், நகராட்சி மேலாளர் மாரியம்மாள், தேர்தல் பிரிவு உதவியாளர் முருகன், கவுன்சிலர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
    சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் மனோ கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி உள்ளது. 2000 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் தற்போது 650 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். 

    22 ஆண்டுகளுக்கு பிறகு இக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் அப்துல்காதிர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார் வாழ்த்திப் பேசினார்.

    இதைத்தொடர்ந்து கல்லூரியில் பயின்ற 195 மாணவ- மாணவிகளுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வாணையர் சுருளியாண்டி பட்டங்களை வழங்கி கவுரவித்தார். 

    அவர் பேசும்போது மாணவர்கள் தன்னம்பிக்கையோடு நேர்முக தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும், தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

    இதில் 130 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் முனைவர்கள் கணேசன், மேனகா, வினோத், வின்சென்ட் ராஜேஷ், அருள்மனோகரி, ஆ.கணபதி, நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் முத்துப்பாண்டி, 

    வல்லராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவ ஆனந்த், ம.தி.மு.க. பிரமுகர் நடுவை முருகன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×