search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்-ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

     புதிய வழித்தட பஸ் சேவையை ராஜா எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    சங்கரன்கோவில் அருகே புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்-ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • ரெங்கநாதபுரம் துரைச்சாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • சங்கரன்கோவில் -சுரண்டை வழித்தடத்தில் 36 டீ என்ற புதிய பஸ் வழித்தடம் உருவாக்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றியம் குலசேகரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட, ரெங்கநாதபுரம் கிராமத்தில் அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் -சுரண்டை வழித்தடத்தில் குலசேகரமங்கலம், ரெங்கநாதபுரம் துரைச்சாமிபுரம் ஆகிய கிராமங்களில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

    புதியவழித்தடத்தில் இயக்கம்

    அதனை தொடர்ந்து அந்த வழித்தடங்களில் பஸ்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    தற்போது சங்கரன்கோவில் முதல் சுரண்டை வழித்தடத்தில் இந்த கிராமங்களை இணைத்து 36 டீ என்ற புதிய பஸ் வழித்தடம் உருவாக்கப்பட்டு அந்த வழித்தடத்தில் பஸ் சேவை தொடங்கப்பட்டது.

    அதனை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கொடி அசைத்து பஸ் சேவையை தொடங்கி வைத்தார். அப்போது தங்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த ராஜா எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் சங்கரன்கோ வில் போக்குவரத்து பணிமனை மேலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பெரியதுரை ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரிவினோ, வினுசக்கரவர்த்தி, ஊராட்சி தலைவர் வெள்ளத்துரை, தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அருள்ராஜ், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×