

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சி சங்குபுரம் தெருவில் புதிய வாறுகால் அமைக்கும் பணியை துரிதப்படுத்த கோரி தெருவில் உள்ள பெண்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்மனிடம் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சேர்மன் உமா மகேஸ்வரி, இது குறித்து நகராட்சி கமிஷனரிடம் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வாறுகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு விரைவில் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.