search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanatana Dharma"

    • சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியது என்றார் உதயநிதி
    • கஜேந்திர சிங் ஷெகாவத் மத்திய கேபினெட் அமைச்சராக உள்ளார்

    சில தினங்களுக்கு முன், தமிழக அமைச்சரவையின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, ஒரு விழாவில் பேசும் போது, "சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல, ஒழிக்கப்பட வேண்டியது" என கருத்து தெரிவித்தார். இக்கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் இந்தியாவெங்கும் பலர் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.

    உதயநிதியின் கருத்து பெரும் சர்ச்சையை நாடு முழுவதும் உண்டாக்கியிருக்கிறது.

    இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர், கஜேந்திர சிங் ஷெகாவத் (55). மத்திய 'ஜல் சக்தி' மந்திரியாக இருக்கும் இவர், கேபினெட் அமைச்சராக பதவி வகிப்பவர்.

    நேற்று ஷெகாவத், பா.ஜ.க. சார்பாக ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் நடைபெற்ற பரிவர்த்தன் யாத்திரையில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அப்போது அதில் அவர் கூறியதாவது:-

    உயிரை தியாகம் செய்து நமது முன்னோர்கள் கட்டி காத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் அழிக்க நினைக்கின்றனர். அவர்களை இனியும் சகித்து கொள்ள முடியாது. சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

    நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கை பிடுங்கி விடுவோம். எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது.

    இவ்வாறு கஜேந்திர சிங் தெரிவித்தார்.

    உதயநிதியின் சனாதனம் தர்மம் குறித்த கருத்து விவகாரம் தற்போது சற்று ஓய்ந்த நிலையில், பா.ஜ.க.வின் கேபினெட் அந்தஸ்திலுள்ள அமைச்சர் இவ்வாறு கடுமையாக கருத்தை தெரிவித்துள்ளார்.

    • யார் வேண்டுமானாலும் இயற்கையினுடைய நியதிகளுக்கு உட்பட்டு நமது வாழ்க்கை வாழலாம் என்பதே சனாதன தர்மம்.
    • தமிழகத்தில் தி.மு.க. வந்த பிறகு தான் ஜாதி அரசியல் வந்தது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சனாதன ஒழிப்பு என்ற பெயரில் வேலையற்றவர்கள் சிலர் ஏற்பாடு செய்த சனாதன ஒழிப்பு கூட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, இந்து மதமும் சனாதன தர்மமும் ஒன்று என்று கூறினார்.

    அதன் பிறகு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசுகிறார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கின்ற சேகர்பாபு, இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    அமைச்சர் உதயநிதியின் பொறுப்பற்ற பேச்சுக்கு, அனைத்து மதத்தைச் சார்ந்த மக்களும் கண்டனம் தெரிவித்த பிறகு, மக்களின் கண்டனத்தைக் கண்டு பயந்து, முதலமைச்சர் ஸ்டாலின் சனாதன தர்மம் வேறு, இந்து மதம் வேறு என்று மடைமாற்ற முயற்சிக்கிறார்.

    சனாதன தர்மம் எப்பொழுதும், எந்த காலத்திலும் யாருக்கும் எதிரானதாக இருந்ததல்ல. சனாதன தர்மம் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவத்துக்கும் எதிரானதாக இருந்திருந்தால், நமது நாட்டில் எப்படி இஸ்லாமும், கிறிஸ்துவமும் வளர்ந்திருக்க முடியும்? உண்மையான பிரச்சினைகளை திசை திருப்ப, தி.மு.க. மத வெறுப்பைத் தூண்ட முயற்சிக்கிறது.

    சனாதன தர்மம், எந்தக் காலத்திலும் சீர்திருத்தங்களை அனுமதித்தே வந்திருக்கிறது. எல்லா சீர்திருத்தங்களையும் தாங்கள்தான் கொண்டு வந்தோம் என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    அவர் படிப்பதும் கிடையாது, படித்தவர்களிடம் பேசுவதும் கிடையாது. தெரியாத விஷயங்களைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வதும் கிடையாது. சனாதன தர்மத்தில் இல்லாத, தனி நபர்கள் உருவாக்கிய வழக்கங்கள் சிலவற்றை நீக்கப் பாடுபட்டவர்களும் சனாதன தர்மத்தைப் பின்பற்றியவர்கள்தான்.

    அன்னியர் படையெடுப்பில் தங்கள் வீட்டுப் பெண்களைக் கைது செய்யவிடாமல் காப்பாற்றும் நோக்கில் உருவான உடன்கட்டை ஏறும் வழக்கத்தை எதிர்த்து, அந்த வழக்கத்தை நீக்கச் சட்டம் கொண்டு வந்தவர் சனாதன தர்மத்தைப் பின் பற்றிய ராஜாராம் மோகன்ராய் தான்.

    குழந்தைத் திருமணங்களை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் குஜராத்தைச் சேர்ந்த சனாதன தர்மத்தைப் பின்பற்றிய மலபாரி என்பவர்தான்.

    விதவைகள் மறுமணச் சட்டத்தைக் கொண்டு வரப் போராடியது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஈஸ்வர சந்திர வித்யாசாகர் என்ற சனாதன தர்மத்தைச் சார்ந்தவர்தான்.

    யார் வேண்டுமானாலும் இயற்கையினுடைய நியதிகளுக்கு உட்பட்டு நமது வாழ்க்கை வாழலாம் என்பதே சனாதன தர்மம்.

    இவையெல்லாம் நடந்தேறிய போது, தமிழகத்தில், தி.மு.க. இருந்ததா? திராவிடர் கழகம் இருந்ததா? இல்லை. ஈ.வெ.ரா. பெரியார் பிறந்திருக்கவே இல்லை. ஆனால், தமிழகத்தில் 1967-க்கு பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பாடப் புத்தகங்களில் இவர்கள் பெயர் எதுவும் இல்லை. வரலாற்றையே மக்களுக்குத் தெரியாமல் மறைத்திருக்கிறார்கள். சனாதன தர்மத் தில் முதலமைச்சர் சொல்லுகின்ற குறைபாடுகளை சனாதன தர்மம் உருவாக்கவில்லை. தனி மனிதர்களைச் சார்ந்தவை. சில தனி மனிதர்கள் உருவாக்கினார்கள்.

    முதலமைச்சரின் அறிக்கையில் இதற்காகத் தான் திராவிடர் கழகம் பிறந்தது, இதற்காகத்தான் நீதிக் கட்சி பிறந்தது, இதற்காகத்தான் ராமசாமி நாயக்கர் பிறந்தார் என்று சொல்லுகின்ற பொய்யை வேண்டுமானால் உங்கள் குடும்பத்துக்குள்ளேயே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருங்கள். தி.மு.க. கட்சி ஏன் தொடங்கப்பட்டது என்ற உண்மை வரலாறு மக்களுக்குத் தெரியும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து முதல் ஆண்டில், சனாதன தர்மத்தை எதிர்ப்போம் என்பார்கள். இரண்டாவது ஆண்டில் சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்பார்கள். மூன்றாம் ஆண்டில் சனாதன தர்மத்தை முழுவதுமாக வேரறுப்போம் என்பார்கள். நான்காவது ஆண்டில், எங்கள் கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் என்று மண்டியிடுவார்கள். ஐந்தாவது ஆண்டு முருகப் பெருமானின் வேலை கையில் தூக்கிக் கொண்டு வீரவேல் வெற்றிவேல் என்று காவடி எடுப்பார்கள்.

    இதைத்தான் 25 ஆண்டுகளாக தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. வந்த பிறகு தான் ஜாதி அரசியல் வந்தது. தமிழகத்தில் 37 மாவட்டங்கள், 335 கிராமங்களில் ஜாதி வன்முறைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

    கடந்த 30 நாட்களில், தென் தமிழகத்தில் 23 படுகொலைகள் நடந்துள்ளது. இதுதான் தி.மு.க.வின் ஜாதி ஒழிப்பு.

    தமிழகத்தில் 1000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியிருப்பதாக அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்கள் எண்ணிக்கை 44,000. அறநிலையத்துறை சாராத மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.

    இவற்றில், எங்கு கும்பாபிஷேகம் நடந்தாலும், தி.மு.க. தன் கணக்கில் சேர்த்துக் கொள்கிறார்கள். தமிழக அரசு, இது தொடர்பான வெள்ளை அறிக்கை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் பதில் இல்லை.

    தேர்தல் வாக்குறுதியில் இந்து கோவில்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதாக கூறினார்கள். ஆனால் இரண்டு ஆண்டில் 55 கோடி தான் ஒதுக்கி இருக்கிறார்கள். 1986-ம் ஆண்டு, நீதிமன்றத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 5.25 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாகக் கூறினார்கள். தற்போது, 2023-ல், அது 4.76 லட்சம் ஏக்கர் நிலமாக மாறி இருக்கிறது. 47 ஆயிரம் ஏக்கர் நிலம் எங்கே போனது?

    தமிழகத்தில் அறநிலையத்துறை மூலம் வரும் வருமானம் ரூ. 400 கோடியை தாண்டியது இல்லை. முறையாக நிர்வாகம், செய்தால் 5 ஆயிரம் கோடி வருமானம் வந்திருக்க வேண்டும். தமிழகத்திற்கு அறநிலையத்துறை தேவையா? என்கிற கேள்வியை பா.ஜ.க. கேட்க தொடங்கியுள்ளது.

    பிரதமர் மோடி இந்திய கலாச்சாரத்தை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மத ரீதியாக மக்களைப் பிரிக்கிறார். அனைத்து மதத்திற்கும் சமமாக இருங்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பொய் செய்தியாக பரப்பி, தற்போது ஒட்டு மொத்த இந்தியாவும் அதைப்பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறது
    • அவர்களின் 9 வருட ஆட்சி காலத்தில் செய்தது ஏதும் கிடையாது

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நெல்லையில் நடைபெற்ற விழாவில் பேசும்போது கூறியதாவது:-

    நான் சென்னையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பேசினேன். அது ஒருநாள் செய்தியாக போயிருக்கும். ஆனால், அந்த செய்தியை எடுத்து பொய் செய்தியாக பரப்பி, தற்போது ஒட்டு மொத்த இந்தியாவும் அதைப்பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறது.

    சனாதனம் என்றால் என்ன?. எதுவுமே நிலையானது. எதுவுமே மாற்றக் கூடாது. எதையும் கேள்வி கேட்டக் கூடாது என்பதுதான் சனாதனம். இதை நான் சொல்லவில்லை. அவர்கள் சொல்வது. எல்லாவற்றையும் மாற்றிக் காண்பிப்போம், எல்லாவற்றையும் கேள்வி கேட்போம் என ஆரம்பிக்கப்பட்டதுதான் திராவிட முன்னேற்ற கழகம்.

    அம்பேத்கர் சொன்னதைத்தான் நான் சொன்னேன். தந்தை பெரியார் எதற்காக போராடினாரோ, அதைத்தான் நான் பேசினேன். தி.மு.க. எதற்காக தொடங்கப்பட்டதோ, அதற்காகத்தான் நான் குரல் கொடுத்தேன்.

    சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறினேன். ஆனால், இனப்படுகொலை செய்யச் சொன்னதாக பொய்ச் செய்தியை பா.ஜனதாவினர் பரப்பி விட்டனர். மோடி வறுமையை ஒழிப்பேன் என்ற பொய் கூறினாரே?. வறுமையை ஒழிப்பது என்றால் ஊரில் உள்ள பணக்காரர்களை கொலை செய்வதா?.

    சமீபத்தில் சென்னையில் திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. திராவிட ஒழிப்பு என்றால், திமுக-வினரை அழைத்து கொலை செய்வதா?.

    அறிவில்லாத பா.ஜனதாவினர் என்னுடைய பேச்சை திரித்து, அமித் ஷா, நட்டா என பேசாத ஆளே கிடையாது. இதற்கு மேல் நான் பேசப்போவதில்லை. நீங்கள் பேச வேண்டும். தமிழ்நாடு மக்கள் பேச வேண்டும். கொள்கைகளை பேசக்கூடிய கூட்டம் என்பதை இளைஞரணி நிரூபித்து காட்ட வேண்டும். சனாதனம் ஒழியும் வரை என்னுடைய குரல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

    என்னுடைய தலைக்கு 10 கோடி ரூபாய் விலை விதித்த சாமியாருக்கு 500 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் உண்மையான சாமியார் இல்லை. பொய் சாமியார். இந்த போலி சாமியார்களை அடித்து விரட்டுவதற்காகத்தான் இந்த சனாதன ஒழிப்பு கூட்டம். எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளார்கள். நீங்கள் போதாதா? (இளைஞரணி தொண்டர்களை பார்த்து கை காண்பித்தார்).

    அவர்களின் 9 வருட ஆட்சி காலத்தில் செய்தது ஏதும் கிடையாது. பேசுவதற்கு ஒன்னும் கிடையாது. முழுக்க முழுக்க கலவரத்தை தூண்டி விடுவது.

    இவ்வாறு தெரிவித்தார்.

    • சனாதன விவகாரம் நாடு முழுக்க பேசுபொருளாகி இருக்கிறது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, சாமியார் தீயிட்டு கொளுத்தும் வீடியோ வைரல்.

    சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

    சனாதன விவகாரம் நாடு முழுக்க பேசுபொருளாகி இருக்கும் நிலையில், உ.பி மாநிலம், அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவுபவர்களுக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவித்து இருக்கிறார். இதோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, அதனை அந்த சாமியார் தீயிட்டு கொளுத்தும் வீடியோ வெளியாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இந்நிலையில், சாமியாரின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

    இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "என் தலைக்கு எதற்கு ரூ.10 கோடி ? ஒரு சீப்பு தந்தால் நானே என் தலையை சீவி கொள்வேன்.

    இப்படித்தான் தலைவர் கருணாநிதியை சாமியார் ஒருவர் மிரட்டினார். கருணாநிதி தலையை சீவினால் ரூ.1 கோடி பரிசு கொடுப்பதாக கூறியிருந்தார். அதற்கு கருணாநிதி, " நானே என் தலையை சீவியது இல்லை. இதில் இன்னொருவன் வந்து சீவுகிறானா " என்றார்.

    தலைவர் கருணாநிதி வழியில் வந்தவன் நான். இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன்" என்றார்.

    • உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
    • தமிழ் கலாசாரம் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு.

    சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்களுக்கு நாடு முழுக்க கண்டனங்களும், எதிர்ப்பு குரலும் வலுத்து வருகிறது. இது தொடர்பாக சமூக வலைதள பதிவுகள் ஒருபக்கம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் டாக்டர் கரண் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் அவற்றை துளியும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

     

    இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "நாட்டில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் சனாதன தர்மத்தை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். உலகின் தலைசிறந்த சனாதன தர்ம கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளது. தஞ்சாவூர், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, சிதம்பரம், சுசீந்திரம், ராமேஸ்வரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தலைசதிறந்த கோவில்கள் உள்ளன."

    "பொறுப்புள்ள அரசியல்வாதியாக, இதுபோன்று துளியும் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களை தெரிவிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் கலாசாரம் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு, ஆனால் திரு உதயநிதி தெரிவித்த கருத்துக்களுக்கு நான் எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்து இருக்கிறார்.  

    • உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவல் நிலையங்களில் புகார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவிப்பு.

    சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. சனாதன விவகாரம் நாடு முழுக்க பேசுபொருளாகி இருக்கும் நிலையில், அயோத்தியை சேர்ந்த துறவியின் அறிவிப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

     

    அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவித்து இருக்கிறார். இதோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, அதனை அந்த சாமியார் தீயிட்டு கொளுத்தும் வீடியோ வெளியாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    முன்னதாக இதே சாமியார் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அறிவிக்கவில்லை என்றால், ஜல சமாதி (நீரில் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்வது) அடைவேன் என்று 2021-ம் ஆண்டு அறிவித்து இருந்தார். ஆனால், இவர் அவ்வாறு செய்யவில்லை. அந்த வகையில், இவர் விளம்பரத்திற்காகவே இவ்வாறு செய்து இருப்பார் என்று கூறப்படுகிறது. 

    • தி.க. தலைவர் வீரமணி, இந்து மதமும் சனாதன தர்மமும் வேறுவேறல்ல, இரண்டும் ஒன்றுதான் என்றார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

    சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பேசிய பேச்சு இந்திய அளவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இவரின் கருத்துக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறும் போது, "சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, இந்து மதமும் சனாதன தர்மமும் வேறுவேறல்ல, இரண்டும் ஒன்றுதான். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இவர்களது நோக்கம் என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை."

    "இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் பேசிய அதே கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு பி.கே. சேகர்பாபு கலந்து கொண்டதும், இவர்கள் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததும் அதிர்ச்சியளிக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை அவர் இழந்து விட்டார்."

    "இன்னும் ஒரு வார காலத்தில், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், தனது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து திரு பி.கே. சேகர்பாபு அவர்கள் பதவி விலக வேண்டும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை?"

    "வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், பி.கே. சேகர்பாபு அவர்கள் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகவில்லை என்றால், செப்டம்பர் 11 ஆம் தேதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்கள் முற்றுகை இடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.

    ×