search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reliance Jio"

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை திடீரென உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது. தற்போதைய  விலை உயர்வை தொடர்ந்தும் ரிலையன்ஸ் ஜியோ கட்டணங்கள் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா கட்டணங்களை விட குறைவாகவே இருக்கிறது. 

    புதிய விலை உயர்வை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் சலுகை துவக்க விலை ரூ. 91 ஆக மாறி இருக்கிறது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் சலுகை விலை 21.3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மற்ற சலுகை விலை 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

     ஜியோ சலுகை விலை

    ரிலையன்ஸ் ஜியோ ரூ. 155 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவன சலுகை விலை ரூ. 179 என துவங்குகிறது. இந்த பிரீபெயிட் சலுகைகள் சந்தையில் சிறப்பான அனுபவத்தை வழங்கும் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்து இருக்கிறது. புதிய விலை டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய லேப்டாப் அறிமுக விவரங்கள் வெளியாகி உள்ளது.


    ரிலையன்ஸ் ஜியோபுக் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் மீண்டும் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்ட லேப்டாப் பிரிவில் ஜியோ களமிறங்குகிறது. முந்தைய ஜியோபோன் நெக்ஸ்ட் போன்றே ஜியோபுக் மாடலும் குறைந்த விலையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஜியோபுக் மாடல் எண்ட்ரி-லெவல் அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. முன்னதாக இந்த லேப்டாப் அம்சங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. அதன்படி புதிய ஜியோபுக் என்.பி.112எம்.எம். எனும் குறியீட்டு பெயர் கொண்டு உருவாகி வருகிறது. இந்த லேப்டாப் மீடியாடெக் எம்.டி.8788 பிராசஸர் கொண்டிருக்கிறது.

     கோப்புப்படம்

    மேலும் இந்த லேப்டாப் புல் ஹெச்.டி. ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு சார்ந்த ஜியோ ஓ.எஸ்., டூயல் பேண்ட் வைபை, 4ஜி எல்.டி.இ. போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஜியோபுக் அம்சங்கள் சார்பில் இதுவரை அந்நிறுவனம் எந்த தகவலையும் வழங்கவில்லை. 
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 சலுகையை இலவசமாக வழங்குவதாக வாட்ஸ்அப் செயலியில் தகவல் பரவி வருகிறது.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை வைத்து பல்வேறு ஊழல்கள் அரங்கேறி இருக்கின்றன. முன்னதாக ஜியோ மொபைல் டவர் ஊழல் மற்றும் ஜியோ டி.டி.ஹெச். இணைப்பு உள்ளிட்டவை சார்ந்து வெளியான போலி தகவல்களால் இந்தியா முழுக்க பலர் பாதிக்கப்பட்டனர். 

    அந்த வரிசையில் தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 விலை சலுகையை இலவசமாக வழங்குவதாக வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல் வேகமாக பகிரப்படுகிறது.

    இவ்வாறு பகிரப்படும் குறுந்தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ பெயர் பயன்படுத்தப்பட்டு, அதில் ரூ.399 சலுகை பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. குறுந்தகவல்களின் படி இலவச சலுகை ஐ.பி.எல். 2019 போட்டி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும் இச்சலுகை 20,000 ஜியோ பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



    போலி குறுந்தகவலின் படி பயனர் முதலில் தங்களது பெயர் மற்றும் ஜியோ மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். பின் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேனர் இடம்பெற்றிருக்கும் வலைப்பக்கம் ஒன்று திறக்கிறது. இந்த பக்கத்தி்ல் குறுந்தகவலை வாட்ஸ்அப் செயலியில் பத்து பேருக்கு ஃபார்வேர்டு செய்யக் கோருகிறது. இவ்வாறு செய்யும் பட்சத்தில் பயனர் தங்களது விவரங்களை போலி தளத்திற்கு பறிக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். 

    இதனால் இலவசம் என்ற பெயரில் பரவும் போலி குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பதே நல்லது. பொதுவாக பெரும் நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்படும் சலுகைகள் மற்றும் தள்ளுபடி போன்றவை அந்நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் அறிவிக்கப்படும். 

    இதனால் இதுபோன்ற குறுந்தகவல்களை எதிர்கொள்ளும் போது சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் வலைதளங்களில் சென்று சலுகை மற்றும் இதர விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதவிர நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகளை தொடர்பு கொண்டும் சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.
    ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் வழங்கி வரும் சிறப்பு சலுகையை அந்நிறுநனம் மீண்டும் நீட்டித்து இருக்கிறது.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் பிரைம் சந்தாவை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து இருக்கிறது. ஜியோ பிரைம் சந்தா பெற்றிருக்கும் அனைவருக்கும் இச்சலுகை நீட்டிக்கப்படுகிறது. 

    ஜியோ வழங்கும் பிரைம் சந்தாவில் பயனர்கள் ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் மற்றும் ஜியோ டி.வி. என அனைத்து ரிலையன்ஸ் ஜியோ செயலிகளையும் இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ சிறப்பு சலுகைகளை பயன்படுத்தும் வசதியும் பிரைம் சந்தாவில் கிடைக்கிறது.

    ஏற்கனவே ஜியோ பிரைம் சந்தாவை ரிலையன்ஸ் ஜியோ நீட்டித்து இருக்கிறது. ஜியோ பிரைம் சந்தா நீட்டிப்பு பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பயனர்கள் மைஜியோ செயலியில் மை பிளான்ஸ் பகுதியில் பார்க்கலாம். இங்கு ஜியோ பிரைம் சந்தாவை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பது பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.



    புதிய அறிவிப்பின் பிடி, ஜியோ பிரைம் சந்தாவை இழக்க இருந்தவர்களுக்கு மேலும் ஒரு ஆண்டிற்கு பிரைம் சந்தாவை இலவசமாக பெற முடியும். எனினும், புதிய ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் பிரைம் சந்தா பெற ரூ.99 ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

    ஏற்கனவே பிரைம் சந்தா பெற்றிருப்போருக்கு இலவச பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. முன்னதாக இதோபோன்ற சூழலில் பிரைம் சந்தாவை இலவசமாக நீட்டிக்க பயனர்கள் தரப்பில் இருந்து கோரிக்கையை எழுப்ப வேண்டிய நிலை இருந்தது. இம்முறை இந்த வழக்கம் மாற்ற்பட்டு ஜியோ தரப்பில் தானாகவே பிரைம் சந்தா நீட்டிக்கப்படுகிறது.
    இந்திய டெலிகாம் சந்தையை தொடர்ந்து மொபைல் போன் சந்தையிலும் ரிலையன்ஸ் ஜியோ ஆதிக்கம் செலுத்துகிறது. #RelianceJio



    இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபோனினை அறிமுகம் செய்தது. ஜியோபோன் வழக்கமான ஃபீச்சர்போன் வடிவமைப்பில் 4ஜி வோல்ட்இ வசதி மற்றும் 22 இந்திய மொழிகளில் இயக்கும் வசதி கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஜியோபோனின் மேம்பட்ட மாடல் ஜியோபோன் 2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இரண்டாம் தலைமுறை ஜியோபோன் 2 மாடலில் குவெர்ட்டி கீபோர்டு வழங்கப்பட்டது. இந்த மொபைல் போன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்த இரண்டு ஜியோபோன்களின் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதன் காரணமாக இந்திய ஃபீச்சர்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ முன்னணி நிறுவனமாகி இருக்கிறது.

    கவுண்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையின்படி ரிலையன்ஸ் ஜியோபோன் 30 சதவகித பங்குகளுடன் இந்திய மொபைல் போன் சந்தையில் 2019 முதல் காலாண்டில் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் 15 சதவிகித பங்குகளுடன் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது.



    இருநிறுவனங்களை தொடர்ந்து லாவா நிறுவனம் 13 சதவிகித பங்குகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மூன்று நிறுவனங்களை தொடர்ந்து நோக்கியா நிறுவனம் 8 சதவிகித பங்குகளுடன் நான்காவது இடத்திலும், ஐடெல் 7 சதவிகித பங்குகளுடன் ஐந்தாவது இடமும் பிடித்திருக்கின்றன.

    இதுதவிர உலகம் முழுக்க சுமார் 40 கோடி ஃபீச்சர் போன்கள் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் சந்தையை போன்று இல்லாமல் ஃபீச்சர் போன் சந்தை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

    சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2018-19 நான்காவது காலாண்டு காலத்தில் ரூ.840 கோடி லாபம் ஈட்டியதாக அறிவித்தது. இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 30.6 கோடியாக அதிகரித்தது.
    ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் சேவையின் கீழ் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. என மூன்று சேவைகளுக்கு ஒரே கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. #RelianceJio



    ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் சேவையுடன் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகள் ஒரே கட்டணத்தில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.600 எனும் மாத கட்டணத்தில் ஜியோ இத்தனை சேவைகளை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    ஜியோ ஜிகாஃபைபர் சேவையில் அதிகபட்சம் 40 சாதனங்களை ஸ்மார்ட் ஹோம் நெட்வொர்க்கில் ரூ.1,000 கட்டணத்தில் இணைக்க முடியும் என கூறப்படுகிறது. ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வெளியிடப்பட்டது.

    தற்சமயம் இந்த சேவை தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டும் கிடைக்கிறது. இதனை பயன்படுத்த பயனர்கள் ரூ.4,500 எனும் ஒருமுறை பாதுகாப்பு கட்டணமாக செலுத்த வேண்டும்.



    ஜியோ ஜிகாஃபைபர் சேவை தற்சமயம் பிரீவியூ சலுகையாக வழங்கப்படுகிறது. இதில் அவர்களுக்கு மாதம் 100 ஜி.பி. டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. ஜியோ ஜிகாஃபைபருடன் பிராட்பேண்ட்-லேண்ட்லைன்-டி.வி. என மூன்று சேவைகளை ரூ.600 கட்டணத்தில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 600 தொலைகாட்சி சேனல்கள் மற்றும் 100Mbps வேகத்தில் டேட்டா உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜியோ ஜிகாஃபைபர் பயன்படுத்துவோருக்கு லேண்ட்லைன் மற்றும் தொலைகாட்சி சேவைகள் அடுத்த மூன்று மாதங்களில் வழங்கப்படும் என்றும் இவை அடுத்த ஒரு ஆண்டிற்கு இலவசமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    காம்போ சேவைகளை இயக்க ரிலையன்ஸ் ஜியோ ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் ரவுட்டரை பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரவுட்டர் கொண்டு 40 முதல் 45 சாதனங்கள், மொபைல் போன்கள், ஸ்மார்ட் டி.வி.க்கள், லேப்டாப்கள் மற்றும் கனெக்ட்டெட் சாதனங்களை இணைக்க முடியும் என கூறப்படுகிறது.
    இந்திய டெலிகாம் சந்தையில் அதிவேக 4ஜி டவுன்லோடு வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதலிடம் பிடித்திருக்கிறது. #RelianceJio



    இந்திய டெலிகாம் சந்தையில் மார்ச் 2019 இல் சராசரியாக 22.2Mbps வேகத்தில் இணைய வசதியை வழங்கி ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் புதிய அறிக்கையில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 2019 இல் ரிலையன்ஸ் ஜியோ 20.9Mbps வேகத்தில் இணைய வசதியை வழங்கியிருந்த நிலையில் மார்ச் மாதத்தில் இணைய வேகம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 4ஜி வேகம் வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முன்னணி இடம் பிடித்து வருகிறது. 

    அந்த வகையில் மார்ச் மாதத்தில் ஜியோ வழங்கிய டேட்டா வேகம் பாரதி ஏர்டெல் நிறுவனத்தை விட இருமடங்கு அதிகமாகும். இத்துடன் 2018 ஆம் ஆண்டு முழுக்க வேகமான 4ஜி டவுன்லோடு வழங்கிய நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருந்தது. 



    பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி டவுன்லோடு வேகம் பிப்ரவரியில் 9.4Mbps ஆக இருந்தது. மார்ச் மாதத்தில் டேட்டா வேகம் 9.3Mbps ஆக இருந்தது என டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட்ட போதும், டிராய் இருநிறுவனங்களின் விவரங்களை தனியாகவே வெளியிட்டிருக்கிறது. 

    வோடபோனின் சராசரி 4ஜி டவுன்லோடு வேகம் மார்ச் மாதத்தில் 7Mbps ஆக இருந்தது. ஐடியா நிறுவனம் மார்ச் மாதத்தில் 5.6Mbps வேகம் வழங்கியிருக்கிறது. இருநிறுவனங்களும் பிப்ரவரி மாதத்தில் முறையே 6.8Mbps மற்றும் 5.7Mbps வேகம் வழங்கியிருக்கின்றன.

    வோடபோன் நிறுவனம் 4ஜி அப்லோட்களில் முதலிடம் பிடித்திருக்கிறது. மார்ச் மாதத்தில் வோடபோன் அப்லோடு வேகம் 6Mbps ஆக இருந்தது. ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் அப்லோடு வேகம் முறையே 5.5Mbps மற்றும் 3.6Mbps ஆக இருந்தது. ஜியோவின் அப்லோடு வேகம் 4.6Mbps ஆக இருந்தது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2018-19 நான்காவது நிதியாண்டில் மட்டும் ரூ.840 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. #RelianceJio



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2018-19 நான்காவது நிதியாண்டு காலக்கட்டத்தில் மட்டும் ரூ.11,106 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 7 சதவிகிதம், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 55.8 சதவிகிதம் அதிகம் ஆகும். இதில் நிகர லாபம் மட்டும் ரூ.840 என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.

    இதுதவிர மார்ச் 31, 2018 வரையிலான காலக்கட்டத்தில் ஜியோ சேவையை சுமார் 30.67 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். முந்தைய காலாண்டில் ஜியோ பயனர் எண்ணிக்கை 28.01 கோடியாக இருந்தது. இதன் மூலம் உலகில் அதிவேகமாக 30 கோடி பயனர்களை கடந்த முதல் நிறுவனமாக ஜியோ இருக்கிறது.

    இந்த காலாண்டில் மட்டும் ஜியோ சேவையை பயன்படுத்துவோரிடம் இருந்து மாதம் ரூ.126.2 வருவாயை ஜியோ பெற்றிருக்கிறது. இதே காலக்கட்டத்தில் மொத்த வயர்லெஸ் டேட்டா பயன்பாடு 956 கோடி ஜி.பி.யாகும். இதில் வாய்ஸ் கால் மட்டும் தினமும் 72,414 கோடி நிமிடங்களும், ஒரு பயனர் மாதம் 823 நிமிடங்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். வீடியோ தரவு பயன்படுத்துவோர் மாதம் 500 கோடி மணி நேரங்களும், பயனர் ஒரு மாதத்தில் சராசரியாக 10.9 ஜி.பி. டேட்டா பயன்படுத்தி இருக்கின்றனர்.



    ஜியோ தனது ஜியோஜிகாஃபைபர் சேவைகளை கடந்த ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி அறிவித்தது. இந்தியா முழுக்க 1600 நகரங்களில் ஜியோஜிகாஃபைபர் சேவைகள் ஹோம் பிராட்பேண்ட், என்டர்டெயின்மென்ட், ஸ்மார்ட் ஹோம், வயர்லைன் மற்றும் வர்த்தக சேவைகள் அறிவிக்கப்பட்டன. 

    தற்சமயம் ஜியோ தனது சேவைகளை பல்வேறு தளங்களில் சீராக இயங்க வைக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறது. இந்தியாவில் ஃபிக்சட் பிராட்பேண்ட் சந்தையை உருவாக்கும் பணிகளில் ஜியோ தீவி்ரப்படுத்தியிருக்கிறது. இதே ஆண்டில் ரிலையன்ஸ் ரீடெயில் இந்தியா முழுக்க 76 புதிய டிஜிட்டல் ஸ்டோர்களையும், 2219 ஜியோ ஸ்டோர்களை திறந்திருக்கிறது.
    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ டி.வி. செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி வழங்கப்படுகிறது. #JioTV



    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ டி.வி. ஆப் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மீடியா செயலிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்றாக பி.ஐ.பி. மோட் இருக்கிறது. இந்த ஆப்ஷன் கொண்டு வீடியோ பார்த்து கொண்டே மற்ற செயலிகளை பயன்படுத்த முடியும்.

    ஜியோ டி.வி. செயலி ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்ட சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும். மேம்படுத்தப்பட்ட ஜியோ டி.வி. ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. பிக்சர் இன் பிக்சர் மோட் கொண்டு வீடியோக்களை சிறிய திரையில் பார்த்து கொண்டே ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களை இயக்கலாம்.



    ஜியோ டி.வி. ஆண்ட்ராய்டு வெர்ஷனின் சேஞ்ச்லாகில் புதிய அம்சம் பற்றி எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. ஜியோ டி.வி. செயலியில் நேரலை தொலைகாட்சி நிகழ்சிகளை பார்த்து ரசிக்கலாம். இந்த செயலியில் சுமார் 600-க்கும் அதிக தொலைகாட்சி சேனல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

    இத்துடன் நிகழ்சிகளை பதிவு செய்யும் வசதி, வீடியோக்களை பாஸ் (pause) செய்து பார்க்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயனர்கள் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடா, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, போஜ்பூரி, பஞ்சாபி, மலையாளம், அசாமீஸ், ஒடியா, உருது உள்ளிட்ட மொழிகளில் நிகழ்சிகளை கொண்டிருக்கிறது.

    தற்சமயம் ஜியோ டி.வி. ஆப் ரிலையன்ஸ் ஜியோ சந்தாதாரர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் கிடைக்கிறது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கிறது. விரைவில் இந்த செயலி கணினிகளில் பயன்படுத்தக்கூடிய வடிவில் வெளியாகும் என ஜியோ தெரிவித்துள்ளது.
    ஏர்டெல் நிறுவன சேவையை தேர்வு செய்யும் முதல் முறை வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #Airtel



    ஏர்டெல் நிறுவன சேவையை தேர்வு செய்யும் முதல் முறை வாடிக்கையாளர்களுக்கு ரூ.248 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.229 சலுகைக்கு மாற்றாக அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    தற்சமயம் ஏர்டெல் சேவையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.76, ரூ.179, ரூ.248 மற்றும் ரூ.495 விலையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. ரூ.229 சலுகைக்கு மாற்றாக அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.248 சலுகையில் தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    தினசரி டேட்டாவுடன் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ரோமிங் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய அறிமுக சலுகை இந்தியா முழுக்க அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ரூ.248 சலுகையை போன்று ரூ.495 விலையில் சலுகையை ஏர்டெல் வழங்குகிறது.



    ரூ.495 சலுகையில் தினமும் 1.4 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.76 விலையிலும் ஏர்டெல் சலுகை கிடைக்கிறது. இச்சலுகையில் பயனர்களுக்கு 100 எம்.பி. டேட்டா, அழைப்புகள் நிமிடத்திற்கு 60 பைசா கட்டணத்தில் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

    இதுமட்டுமின்றி ரூ.178 விலையிலும் ஏர்டெல் சலுகை வழங்கப்படுகிறது. இதில் வாடி்க்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 1 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டிருக்கும் சலுகைகள் முதல் முறை ஏர்டெல் பிரீபெயிட் சேவையில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் இணைந்திருக்கின்றனர். #RelianceJio



    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில், 2019 ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையை சுமார் 29 கோடி பேர் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியா முழுக்க வயர்லெஸ் சந்தாததாரர்கள் எண்ணிக்கை 118.19 கோடியாக இருக்கிறது.

    டிசம்பர் 2018 வரை வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 117.6 கோடியில் இருந்து ஜனவரி 2019 இல் 118.19 கோடியாக அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் ஒரே மாதத்தில் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் 0.51 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருப்பதாக டிராய் தெரிவித்திருக்கிறது.



    மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களில் 102.25 கோடி பேர் சேவையை தொடர்ந்து பயன்படுத்துவதாக டிராய் தெரிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஜனவரியில் 9.83 லட்சம் புதிய இணைப்புகளை பெற்றிருக்கிறது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 11.53 கோடியாக அதிகரித்துள்ளது.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் 1.03 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்திருக்கிறது. இதன் மூலம் ஜனவரி 2019 வரையிலான காலக்கட்டத்தில் ஏர்டெல் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 34.04 கோடியாக இருக்கிறது. வோடபோன் ஐடியா நிறுவன சேவையை 41.52 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.
    வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் மீண்டும் 100 சதவிகித கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது. #Vodafone



    வோடபோன் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்து, இதனை டிசம்பர் 2018 வரை மட்டுமே வழங்கியது. 

    இந்நிலையில், 100 சதவிகித கேஷ்பேக் சலுகையை மீண்டும் வழங்குவதாக வோடபோன் அறிவித்துள்ளது. 100 சதவிகிதம் கேஷ்பேக் சலுகை தேர்வு செய்யப்பட்ட அன்லிமிட்டெட் சலுகைகளுக்கு வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, இந்த சலுகை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது.

    இதனை ஆக்டிவேட் செய்ய மைவோடபோன் செயலி மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும். முன்னதாக 100 சதவிகிதம் கேஷ்பேக் சலுகை மூன்று அன்லிமிட்டெட் சலுகைகளுக்கு வழங்கப்பட்டது. இம்முறை கூடுதலாக ஒரு சலுகைக்கும் சேர்த்து மொத்தம் நான்கு அன்லிமிட்டெட் சலுகைகளுக்கு வழங்கப்படுகிறது.



    வோடபோன் ரூ.199, ரூ.399, ரூ.458 மற்றும் ரூ.509 உள்ளிட்ட சலுகைகளுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தொகையை வோடபோன் ரூ.50 மதிப்புள்ள வவுச்சர்களின் வடிவில் வழங்குகிறது. இதனால் ரூ.199 செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது ரூ.50 மதிப்புள்ள நான்கு வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை அடுத்தடுத்த ரீசார்ஜ்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இதேபோன்று ரூ.509 செலுத்தும் போது ரூ.50 மதிப்புள்ள பத்து வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. இதன்பின் மேற்கொள்ளும் ரீசார்ஜ்களில் 25 சதவிகிதம் தள்ளுபடி பெற முடியும். 

    கேஷ்பேக் வழங்கப்படும் அன்லிமிட்டெட் சலுகைகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. ரூ.199 சலுகையில் 28 நாட்கள் வேலிடிட்டி, 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 

    ரூ.399 சலுகையில் 84 நாட்கள் வேலிடிட்டி, 1 ஜி.பி. டேட்டாவும், ரூ.458 சலுகையில் 1.5 ஜி.பி. டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ரூ.504 சலுகையில் 1.5 ஜி.பி. டேட்டா, 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. டேட்டா அளவு தீர்ந்ததும், கூடுதல் டேட்டாவிற்கான கட்டணம் செலுத்த வேண்டும்.
    ×