என் மலர்

  தொழில்நுட்பம்

  ஜியோ டி.வி. செயலியில் பி.ஐ.பி. மோட்
  X

  ஜியோ டி.வி. செயலியில் பி.ஐ.பி. மோட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ டி.வி. செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி வழங்கப்படுகிறது. #JioTV  ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ டி.வி. ஆப் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மீடியா செயலிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்றாக பி.ஐ.பி. மோட் இருக்கிறது. இந்த ஆப்ஷன் கொண்டு வீடியோ பார்த்து கொண்டே மற்ற செயலிகளை பயன்படுத்த முடியும்.

  ஜியோ டி.வி. செயலி ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்ட சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும். மேம்படுத்தப்பட்ட ஜியோ டி.வி. ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. பிக்சர் இன் பிக்சர் மோட் கொண்டு வீடியோக்களை சிறிய திரையில் பார்த்து கொண்டே ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களை இயக்கலாம்.  ஜியோ டி.வி. ஆண்ட்ராய்டு வெர்ஷனின் சேஞ்ச்லாகில் புதிய அம்சம் பற்றி எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. ஜியோ டி.வி. செயலியில் நேரலை தொலைகாட்சி நிகழ்சிகளை பார்த்து ரசிக்கலாம். இந்த செயலியில் சுமார் 600-க்கும் அதிக தொலைகாட்சி சேனல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

  இத்துடன் நிகழ்சிகளை பதிவு செய்யும் வசதி, வீடியோக்களை பாஸ் (pause) செய்து பார்க்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயனர்கள் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடா, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, போஜ்பூரி, பஞ்சாபி, மலையாளம், அசாமீஸ், ஒடியா, உருது உள்ளிட்ட மொழிகளில் நிகழ்சிகளை கொண்டிருக்கிறது.

  தற்சமயம் ஜியோ டி.வி. ஆப் ரிலையன்ஸ் ஜியோ சந்தாதாரர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் கிடைக்கிறது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கிறது. விரைவில் இந்த செயலி கணினிகளில் பயன்படுத்தக்கூடிய வடிவில் வெளியாகும் என ஜியோ தெரிவித்துள்ளது.
  Next Story
  ×