search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL offer"

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 சலுகையை இலவசமாக வழங்குவதாக வாட்ஸ்அப் செயலியில் தகவல் பரவி வருகிறது.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை வைத்து பல்வேறு ஊழல்கள் அரங்கேறி இருக்கின்றன. முன்னதாக ஜியோ மொபைல் டவர் ஊழல் மற்றும் ஜியோ டி.டி.ஹெச். இணைப்பு உள்ளிட்டவை சார்ந்து வெளியான போலி தகவல்களால் இந்தியா முழுக்க பலர் பாதிக்கப்பட்டனர். 

    அந்த வரிசையில் தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 விலை சலுகையை இலவசமாக வழங்குவதாக வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல் வேகமாக பகிரப்படுகிறது.

    இவ்வாறு பகிரப்படும் குறுந்தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ பெயர் பயன்படுத்தப்பட்டு, அதில் ரூ.399 சலுகை பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. குறுந்தகவல்களின் படி இலவச சலுகை ஐ.பி.எல். 2019 போட்டி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும் இச்சலுகை 20,000 ஜியோ பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



    போலி குறுந்தகவலின் படி பயனர் முதலில் தங்களது பெயர் மற்றும் ஜியோ மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். பின் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேனர் இடம்பெற்றிருக்கும் வலைப்பக்கம் ஒன்று திறக்கிறது. இந்த பக்கத்தி்ல் குறுந்தகவலை வாட்ஸ்அப் செயலியில் பத்து பேருக்கு ஃபார்வேர்டு செய்யக் கோருகிறது. இவ்வாறு செய்யும் பட்சத்தில் பயனர் தங்களது விவரங்களை போலி தளத்திற்கு பறிக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். 

    இதனால் இலவசம் என்ற பெயரில் பரவும் போலி குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பதே நல்லது. பொதுவாக பெரும் நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்படும் சலுகைகள் மற்றும் தள்ளுபடி போன்றவை அந்நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் அறிவிக்கப்படும். 

    இதனால் இதுபோன்ற குறுந்தகவல்களை எதிர்கொள்ளும் போது சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் வலைதளங்களில் சென்று சலுகை மற்றும் இதர விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதவிர நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகளை தொடர்பு கொண்டும் சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.
    ×