என் மலர்

  தொழில்நுட்பம்

  ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் நீட்டிக்கப்படும் சலுகை
  X

  ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் நீட்டிக்கப்படும் சலுகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் வழங்கி வரும் சிறப்பு சலுகையை அந்நிறுநனம் மீண்டும் நீட்டித்து இருக்கிறது.  ரிலையன்ஸ் ஜியோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் பிரைம் சந்தாவை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து இருக்கிறது. ஜியோ பிரைம் சந்தா பெற்றிருக்கும் அனைவருக்கும் இச்சலுகை நீட்டிக்கப்படுகிறது. 

  ஜியோ வழங்கும் பிரைம் சந்தாவில் பயனர்கள் ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் மற்றும் ஜியோ டி.வி. என அனைத்து ரிலையன்ஸ் ஜியோ செயலிகளையும் இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ சிறப்பு சலுகைகளை பயன்படுத்தும் வசதியும் பிரைம் சந்தாவில் கிடைக்கிறது.

  ஏற்கனவே ஜியோ பிரைம் சந்தாவை ரிலையன்ஸ் ஜியோ நீட்டித்து இருக்கிறது. ஜியோ பிரைம் சந்தா நீட்டிப்பு பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பயனர்கள் மைஜியோ செயலியில் மை பிளான்ஸ் பகுதியில் பார்க்கலாம். இங்கு ஜியோ பிரைம் சந்தாவை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பது பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.  புதிய அறிவிப்பின் பிடி, ஜியோ பிரைம் சந்தாவை இழக்க இருந்தவர்களுக்கு மேலும் ஒரு ஆண்டிற்கு பிரைம் சந்தாவை இலவசமாக பெற முடியும். எனினும், புதிய ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் பிரைம் சந்தா பெற ரூ.99 ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

  ஏற்கனவே பிரைம் சந்தா பெற்றிருப்போருக்கு இலவச பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. முன்னதாக இதோபோன்ற சூழலில் பிரைம் சந்தாவை இலவசமாக நீட்டிக்க பயனர்கள் தரப்பில் இருந்து கோரிக்கையை எழுப்ப வேண்டிய நிலை இருந்தது. இம்முறை இந்த வழக்கம் மாற்ற்பட்டு ஜியோ தரப்பில் தானாகவே பிரைம் சந்தா நீட்டிக்கப்படுகிறது.
  Next Story
  ×