என் மலர்

  நீங்கள் தேடியது "JioPhone"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய டெலிகாம் சந்தையை தொடர்ந்து மொபைல் போன் சந்தையிலும் ரிலையன்ஸ் ஜியோ ஆதிக்கம் செலுத்துகிறது. #RelianceJio  இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபோனினை அறிமுகம் செய்தது. ஜியோபோன் வழக்கமான ஃபீச்சர்போன் வடிவமைப்பில் 4ஜி வோல்ட்இ வசதி மற்றும் 22 இந்திய மொழிகளில் இயக்கும் வசதி கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஜியோபோனின் மேம்பட்ட மாடல் ஜியோபோன் 2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

  இரண்டாம் தலைமுறை ஜியோபோன் 2 மாடலில் குவெர்ட்டி கீபோர்டு வழங்கப்பட்டது. இந்த மொபைல் போன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்த இரண்டு ஜியோபோன்களின் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதன் காரணமாக இந்திய ஃபீச்சர்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ முன்னணி நிறுவனமாகி இருக்கிறது.

  கவுண்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையின்படி ரிலையன்ஸ் ஜியோபோன் 30 சதவகித பங்குகளுடன் இந்திய மொபைல் போன் சந்தையில் 2019 முதல் காலாண்டில் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் 15 சதவிகித பங்குகளுடன் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது.  இருநிறுவனங்களை தொடர்ந்து லாவா நிறுவனம் 13 சதவிகித பங்குகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மூன்று நிறுவனங்களை தொடர்ந்து நோக்கியா நிறுவனம் 8 சதவிகித பங்குகளுடன் நான்காவது இடத்திலும், ஐடெல் 7 சதவிகித பங்குகளுடன் ஐந்தாவது இடமும் பிடித்திருக்கின்றன.

  இதுதவிர உலகம் முழுக்க சுமார் 40 கோடி ஃபீச்சர் போன்கள் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் சந்தையை போன்று இல்லாமல் ஃபீச்சர் போன் சந்தை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

  சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2018-19 நான்காவது காலாண்டு காலத்தில் ரூ.840 கோடி லாபம் ஈட்டியதாக அறிவித்தது. இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 30.6 கோடியாக அதிகரித்தது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மீடியாடெக் மற்றும் கை ஓ.எஸ். இணைந்து மலிவு விலையில் 3ஜி / 4ஜி ஸ்மார்ட் ஃபீச்சர்போன்களை உருவாக்க ஒன்றிணைந்து இருக்கின்றன. #JioPhone #MediaTek  இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிகளவு ஸ்மார்ட் ஃபீச்சர் போன்களை உற்பத்தி செய்யும் நோக்கில் மீடியாடெக் மற்றும் கை ஓ.எஸ். டெக்னாலஜீஸ் நிறுவனங்கள் ஒன்றிணைந்து இருக்கின்றன. கை ஓ.எஸ். டெக்னாலஜீஸ் நிறுவனம் ஜியோபோனிற்கு கை ஓ.எஸ். இயங்குதளத்தை வழங்கி வருகிறது. 

  இதுகுறித்து இருநிறுவனங்கள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஸ்மார்ட் ஃபீச்சர் போன் சாதனங்களில் 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பத்தை இயங்க வைக்கும் நோக்கில் புதிதாக மீடியாடெக் சிப்செட்களை உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளன. 

  இந்த ஒப்பந்தத்தின் படி கை ஓ.எஸ். இயங்குதளம் இனி 3G MT6572 மற்றும் MT6731  தளங்களில் இயங்கும்ய இத்துடன் டூயல் 4ஜி சிம் கார்டுகளை சப்போர்ட் செய்யும் புதிய தளம் ஒன்று உருவாக்கப்பட இருக்கின்றன. கை ஓ.எஸ். சார்ந்த MT6572 மற்றும் MT6731 3ஜி/4ஜி சிப்செட்களை கொண்ட முதல் ஸ்மார்ட் ஃபீச்சர் போன்கள் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு சமயத்தில் அறிமுகமாகிறது.   உலகம் முழுக்க சுமார் 100 நாடுகளில் இதுவரை எட்டு கோடி சாதனங்களை விற்பனை செய்திருப்பதாக கை ஓ.எஸ். தெரிவித்துள்ளது. இந்த இயங்குதளம் HTML5 பிளாட்ஃபார்ம் மற்றும் இதர இணைய தொழில்நுட்பங்களை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது 3ஜி, 4ஜி எல்.டி.இ., வைபை, ஜி.பி.எஸ். மற்றும் என்.எஃப்.சி. உள்ளிட்டவற்றை சப்போர்ட் செய்யும்.

  கை.ஓ.எஸ். இன் மற்றொரு முக்கிய அம்சம் இது குறைந்தளவு மெமரியை எடுத்துக் கொள்ளும். கூகுள் அசிஸ்டண்ட், யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை ஃபீச்சர்போன் மாடல்களான ஜியோபோன் மற்றும் நோக்கியா 8110 4ஜி-யில் வழங்கி வருகிறது.

  மீடியாடெக் சிப்செட்களில் கை ஓ.எஸ். இயங்குதளம் வழங்குவதன் மூலம் ஃபீச்சர் போன்களில் 3ஜி மற்றும் 4ஜி வசதியை 256 எம்.பி. அல்லது 512 எம்.பி. மெமரி கொண்ட சாதனங்களிலும் வழங்க முடியும் என இருநிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்களில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #jiorail #Apps  இந்திய சந்தையில் ஜியோபோன் அதிக வெற்றி பெற்றிருக்கிறது. ஜியோவின் மலிவு விலை சலுகைகளே ஜியோபோன் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஜியோபோனை தொடர்ந்து ஜியோபோன் 2 சற்றே மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமானது.

  ஜியோபோன் 2 மாடலில் க்வெர்டி கீபோர்டு கொண்டிருக்கும் நிலையில் வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும் வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், கை ஓ.எஸ். இயங்குதளம் அதிக பிரபலமாகி வருவதை தொடர்ந்து ஜியோ தனது ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்களுக்கு ஜியோரெயில் எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

  ஜியோஸ்டோரில் கிடைக்கும் புதிய ஜியோரெயில் ஆப் கொண்டு வாடிக்கையாளர்கள் ரெயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதோடு, பி.என்.ஆர். விவரம் மற்றும் இதர சேவைகளை ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்களில் பயன்படுத்த முடியும். மற்ற அம்சங்களை பொருத்தவரை ரெயில் நேரங்களை சரிபார்க்கவும், இருக்கை எண்ணிக்கை மற்றும் பல்வேறு வசதிகள் பயன்படுத்தலாம்.  இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. செயலியை போன்று ஜியோரெயில் செயலியிலும் தட்கல் முறையில் டிக்கெட்களை கடைசி நேரத்திலும் முன்பதிவு செய்யலாம். ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய கிரெடிட், டிபெட் போன்ற கார்டுகளும், இ-வாலெட் சேவைகளை பயன்படுத்தியும் பணம் செலுத்தலாம்.

  தற்சமயம் இந்த அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், எதிர்கால அப்டேட்களில் பி.என்.ஆர். ஸ்டேட்டஸ் மாற்றும் வசதி, ரெயில் இருக்கும் இடம் மற்றும் உணவு வகைகளை முன்பதிவு செய்யும் வசதிகள் வழங்கப்பட இருக்கிறது. புதிய வசதி படிப்படியாக வழங்கப்படுகிறது. இதனால் ஜியோஸ்டோரில் இவை கிடைக்க சில காலம் ஆகும் என கூறப்படுகிறது.

  ஜியோபோன் 2 மாடலில் 1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் பிராசஸர், 512 எம்.பி. ரேம், 4 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 2 எம்.பி. பிரைமரி கேமரா, 0.3 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. #jiorail #Apps
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரிலையன்ஸ் ஜியோ நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் இரண்டு புதிய சலுகைகளை நீண்ட வேலிடிட்டியுடன் அறிவித்துள்ளது. #reliancejio #offers  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது விலை குறைந்த சலுகையை ரூ.49 விலையில் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த சலுகை ஜியோபோன் பயனர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டது. 

  இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ தற்சமயம் நீண்ட வேலிடிட்டி கொண்ட இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.594 மற்றும் ரூ.297 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள இரு சலுகைகளும் ஜியோபோன் பயன்படுத்துவோருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.   ரூ.594 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜி.பி. அதிவேக டேட்டா (டேட்டா தீர்ந்ததும் வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்), 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 168 நாட்கள் ஆகும்.

  ரூ.297 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஜியோ சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜி.பி. அதிவேக டேட்டா (டேட்டா தீர்ந்ததும் வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்), 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

  முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டிசம்பர் 31, 2018 வரையிலான மூன்றாவது காலாண்டு வருவாய் அறிக்கை வெளியானது. அதில் ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த வருவாய் ரூ.10,383 கோடியாக அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோனில் வாட்ஸ்அப் செயலி வசதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பயனர்கள் ஜியோபோன் 2ல் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். #jiophone  ஜியோபோனிற்கு வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் செயலிகளை பயன்படுத்தும் வசதியை வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருந்தது. ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

  முன்னதாக யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் செயலிகளை பயன்படுத்தும் வசதி ஜியோபோனில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்ட நிலையில், வாட்ஸ்அப் வசதி மட்டும் வழங்கப்படாமல் இருந்து, தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது. 

  வாட்ஸ்அப் பயன்படுத்துவதற்கான அறிவிப்பு ரிலைன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. ஜியோபோனில் வாட்ஸ்அப் செயலியை டவுன்லோடு செய்ய ஜியோஸ்டோர் சென்று இன்ஸ்டால் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

  இவ்வாறு செய்ததும் சில நொடிகளில் செயலி டவுன்லோடு ஆகி, இன்ஸ்டால் ஆகும். செயலியை பயன்படுத்த ஜியோபோனின் மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும். இதற்கு செட்டிங்ஸ் -- டிவைஸ் -- சாஃப்ட்வேர் அப்டேட் ஆப்ஷன்களுக்கு செல்ல வேண்டும்.   ஜியோபோனில் வாட்ஸ்அப் செட்டப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது மொபைல் நம்பருக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். ஒ.டி.பி. மூலம் உங்களது மொபைல் நம்பரை உறுதிப்படுத்தியதும் வாட்ஸ்அப் பயன்படுத்த துவங்கலாம்.

  ஜியோபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்த குறிப்பிட்ட ஐ.எம்.இ.ஐ. நம்பர் லாக் செய்யப்படவில்லை. இதனால் ஜியோபோனில் எந்த ஜியோ சிம் கார்டு நம்பரை கொண்டும் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்.

  ஜியோபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது எழுத்துக்கள், புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள முடியும் என்றாலும் ஆன்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ். தளங்களில் இருப்பதை போன்று ஜியோபோனில் பயன்படுத்த முடியாது. கை ஓ.எஸ்.-இல் இயங்கும் ஜியோபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

  ஜியோபோனில் வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ளவோ, போட்டோ ஸ்டேட்டஸ்களை பார்க்க முடியாது. மேலும் லொகேஷன் ஷேரிங் ஆப்ஷன், சாட் பேக்கப் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியாது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோனில் வாட்ஸ்அப், மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் செயலிகளை தொடர்ந்து யூடியூப் ஆப் அப்டேட் வழங்கப்படுகிறது. #JioPhone2 #YouTube  ஜியோஸ்டோரில் யூடியூப் செயலி கிடைக்கும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. அந்த வகையில் ஜியோபோன் 2 மற்றும்  ஜியோ 1 மாடல்களை பயன்படுத்துவோர் இனி யூடியூப் செயலியை பயன்படுத்தலாம்.

  கைஓ.எஸ்.-க்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கும் யூடியூப் செயலி ஜியோபோனில் பயன்படுத்த சிறப்பான அனுபவத்தை வழங்கும். ஜியோபோன்களில் வாட்ஸ்அப் வசதி சமீபத்தில் வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் யூடியூப் செயலிக்கான அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

  யூடியூப், வாட்ஸ்அப் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் ஆப் உள்ளிட்டவை ஜியோபோன்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி வழங்கப்பட்டு விட்டது என ரிலையன்ஸ் ஜியோ தலைவர் தெரிவித்தார்.

  ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்களுக்கான யூடியூப் ஆப் ஜியோ ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. செயலியை டவுன்லோடு செய்து வீடியோக்களை சீராக பார்த்து ரசிக்கலாம். கைஓ.எஸ். தளம் என்றாலும், ஆன்ட்ராய்டில் உள்ளதை போன்றே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜியோபோன் சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. கை ஓ.எஸ். மூலம் இயங்கும் ஜியோபோனிற்கு ஏற்ப வாட்ஸ்அப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. #WhatsApp #JioPhone  கை ஓ.எஸ். மூலம் இயங்கும் ஜியோபோன்களுக்கு வாட்ஸ்அப் வசதி சேர்க்கப்படுகிறது. ஜூலை மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோபோனிற்கு வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் செயலிகள் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

  ஒருமாத தாமதத்திற்கு பின் வாட்ஸ்அப் வசதி தற்சமயம் சேர்க்கப்பட்டுள்ளது. கை ஓ.எஸ்.-க்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. 

  இதனால் ஜியோபோனில் வாட்ஸ்அப் சேவை சீராக பயன்படுத்த முடியும். ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்களுக்கு வாட்ஸ்அப் செயலியை ஜியோ ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ள முடியும். 

  செப்டம்பர் 20-ம் தேதி முதல் அனைத்து ஜியோபோன்களுக்கும் வாட்ஸ்அப் செயலி வழங்கப்படுகிறது. ஒரு முறை டவுன்லோடு செய்து விட்டால், பயனர்கள் தங்களது மொபைல் போன் நம்பரை ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

  மொபைல் நம்பரை வாட்ஸ்அப் செயலியில் உறுதிப்படுத்தியதும் விரும்பியவர்களுடன் சாட் செய்யலாம். ஜியோபோனில் வாட்ஸ்அப் வழங்கப்படுவதைத் தொடர்ந்து கை ஓ.எஸ். மூலம் இயங்கும் நோக்கியா 8110 4ஜி மொபைலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய மொபைல் போன் விற்பனையில் ஜியோபோன் முதலிடம் பெற்றிருப்பதாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #jiophone


  இந்திய மொபைல் போன் சந்தையில் ஜியோபோன் மட்டும் 27% விற்பனையாகி இருக்கிறது. ஃபீச்சர்போன், ஃபியூஷன் போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் ஒட்டுமொத்த விற்பனையில் ஜியோபோன் விற்பனை முன்னணி இடத்தில் இருப்பது சமீபத்திய சி.எம்.ஆர். அறிகக்கையில் தெரியவந்துள்ளது. 

  அந்த வகையில் இந்தியாவில் கடந்த வாரம் விற்பனையான நான்கு மொபைல்களில் ஒன்று ஜியோபோன் ஆகும். இந்திய சந்தையில் பட்ஜெட் மற்றும் ஃபீச்சர் போன் சார்ந்ததாக இருக்கிறது. இங்கு ஸ்மார்ட்போன் விற்பனை முன்னணி நிறுவனங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக இல்லை. இந்தியாவில் ஜியோபோன் விலை ரூ.1500 என நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது அதன் வரவேற்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

  இத்துடன் ஜியோபோன் வாங்குவோருக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள், எஸ்.எம்.எஸ். ஜியோ வீடியோ மற்றும் ஆடியோ ஸ்ட்ரீமிங் சேவைகளை பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சமீபத்தில் ஜியோபோனில் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டது.

  ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி 17% வரை அதிகரித்திருக்கிறது, இதே காலகட்டத்தில் ஃபீச்சர்போன் விற்பனை சரிந்திருக்கிறது. ஜியோபோனும் ஃபீச்சர்போனாக கருத முடியும் என்றாலும், அறிக்கையில் இது ஃபியூஷன் போன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் ஸ்மார்ட்போன் போன்று இருப்பதால் இவ்வாறு குறிப்பிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  சமீபத்தில் ஜியோபோன் 2 அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், ஜியோபோன் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் பிரிவில் ஹூவாய் ஹானர், ஒப்போ ரியல்மி மற்றும் விவோ மாடல்கள் அதிகளவு விற்பனைக்கு வித்திட்டன. 

  இத்துடன் சாம்சங் தனது முதலிடத்தை இழந்து சியோமி முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் 30 கோடி யூனிட்கள் விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சி.எம்.ஆர். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #jiophone #MobilePhones
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் மான்சூன் ஹங்காமா எனும் புதிய சலுகையில் ரூ.501 விலையில் ஜியோபோன் விற்பனை செய்யப்படுகிறது. #JioPhone #offers  ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மான்சூன் ஹங்காமா (Monsoon Hungama) எனும் சலுகையை அறிவித்தார்.

  புதிய சலுகையின் கீழ் பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் பழைய மொபைல் போன்களை எக்சேஞ்ச் செய்து புத்தம் புதிய ஜியோபோனினை ரூ.501 விலையில் வாங்க முடியும். இந்தியாவில் ஜியோபோன் ரூ.1500 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் புதிய சலுகையின் கீழ் ரூ.501 விலையில் ஜியோபோன் விற்பனை செய்யப்படுகிறது.  ஜியோ அறிவித்திருக்கும் மான்சூன் ஹங்காமா சலுகையின் முழு விவரங்கள்:

  - மான்சூன் ஹங்காமா எக்சேஞ் சலுகையின் மூலம் ஜியோபோனினை ரூ.501 செலுத்தி வாங்க முடியும்.

  - மூன்று ஆண்டுகளில் திரும்ப வழங்கி ரூ.501 கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ள முடியும், அந்த வகையில் ஜியோபோன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

  - பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்திய வோல்ட்இ வசதியில்லாத பழைய 2ஜி, 3ஜி, 4ஜி மொபைல் போன்களை கொடுத்து ரூ.501 சலுகையை பெற முடியும்.

  - பயனர்கள் வழங்கும் பழைய மொபைல் போன் சீராக இயங்க வேண்டும் என்பதோடு, மொபைலுக்கு உரிய சார்ஜரை வழங்க வேண்டும்.

  - புதிய ஜியோ போன் வாங்கும் விற்பனை மையத்தில் பயனர்கள் தங்களின் பழைய மொபைல் போனை வழங்க வேண்டும்.

  - பயனர்கள் வழங்கும் பழைய மொபைல் போன் சீராக இயங்குவதோடு, அதன் பாகங்கள் உடையாமலும், மற்றபடி எதுவும் ஏற்பட்டிருக்க கூடாது. இத்துடன் பழைய மொபைல் போன் 2015, ஜனவரி 1-ம் தேதி மற்றும் அதற்கும் பின் வாங்கப்பட்டு இருக்க வேண்டும்.

  - ஜியோபோன் அல்லது சி.டி.எம்.ஏ. (CDMA) அல்லது ஆப்பரேட்டர் லாக் (குறிப்பிட்ட நிறுவன சிம் மட்டுமே வேலை செய்யக்கூடிய மொபைல்கள்) செய்யப்பட்ட சாதனங்களை ஜியோ மான்சூன் ஹங்காமா சலுகையின் கீழ் எக்சேஞ் செய்ய முடியாது.

  - பழைய மொபைல் போனுடன் பேட்டரி மற்றும் சார்ஜர் தவிர மற்ற உபகரணங்கள் அதாவது ஹெட்செட் போன்றவற்றை பயனர்கள் வழங்க வேண்டிய அவசியமில்லை.  மான்சூன் ஹங்காமா ஜியோபோன் சிறப்பு சலுகை:

  மான்சூன் ஹங்காமா சலுகை ஜியோபோனினை ரூ.501 விலையில் வழங்குவதோடு அன்லிமிட்டெட் வாய்ஸ் மற்றும் 90 ஜிபி டேட்டா (தினமும் 0.5 ஜிபி டேட்டா) 6 மாதங்களுக்கு வழங்குகிறது. இந்த சலுகையை பெற பயனர்கள் புதிய ஜியோபோனை ஆக்டிவேட் செய்யும் போது ரூ.594 செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

  கூடுதலாக ஜியோபோன் பயனர்கள் மான்சூன் ஹங்காமா சலுகையுடன் ரூ.101 கூடுதலாக செலுத்தினால் 6 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.99 விலையில் தனி சலுகை ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் தினமும் 0.5 ஜிபி டேட்டா, 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

  இன்று (ஜூலை 21-ம் தேதி) முதல் வழங்கப்படும் ஜியோபோன் மான்சூன் ஹங்காமா சலுகையின் மூலம் ஜியோபோன் பயனர்கள் தங்களது டெலிகாம் செலவில் கிட்டத்தட்ட 50% வரை சேமிக்க முடியும் என ஜியோ தெரிவித்துள்ளது. #JioPhone #offers
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேடிஎம் மால் தளத்தில் ஜியோபோன் வாங்குவோருக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #jiophone #paytm  பேடிஎம் மால் தளத்தில் ரிலையன்ஸ் ஜியோபோன் வாங்குவோருக்கு ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும் தள்ளுபடி தொகை கேஷ்பேக் வடிவில் வழங்கப்படுகிறது. பேடிஎம் மால் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக் பெற Monsoon500 எனும் கூப்பன் கோடினை பதிவு செய்து பெறலாம்.

  கேஷ்பேக் சலுகை பேடிஎம் தளத்தின் மான்சூன் லாயல்டி கேஷ்பேக் மூலம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஜியோபோனை ரூ.1,099-க்கு பெற முடியும். பேடிஎம் சலுகைக்கும் ஜியோ சமீபத்தில் அறிவித்த மான்சூன் ஹங்காமா சலுகைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 

  ரிலையன்ஸ் ஜியோபோன் பயனர்களுக்கு மான்சூன் ஹங்காமா சலுகை ஜூலை 21-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிவித்தார்.  இத்துடன் பயனர்கள் தங்களின் பழைய ஃபீச்சர்போனினை எக்சேஞ்ச் செய்யும் போது ஜியோபோனை ரூ.501 விலையில் பெற முடியும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி பயனர்கள் ஜூலை 21-ம் தேதி முதல் தங்களது ஃபீச்சர்போனை எக்சேஞ்ச் செய்து ஜியோபோனை ரூ.501-க்கு பெற முடியும்.

  எனினும், ரூ.501 எக்சேஞ்ச் சலுகையில், ஜியோபோன் இலவசமாக பெற முடியாது. மான்சூன் ஹங்காமா சலுகையில் ஜியோபோன் வாங்கும் போது நீங்கள் செலுத்தும் கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது. ஜியோபோனை இலவசமாக வாங்க ரூ.1500 செலுத்த வேண்டும், இதற்கு எக்சேஞ்ச் சலுகை பொருந்தாது.  ஜியோபோன் சிறப்பம்சங்கள்:

  - 2.4 இன்ச் QVGA 240x320 பிக்சல் டிஸ்ப்ளே
  - 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் சிப்செட்
  - 512 எம்பி ரேம்
  - 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - 2 எம்பி பிரைமரி கேமரா
  - 2 எம்பி செல்ஃபி கேமரா
  - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  - 2000 எம்ஏஹெச் பேட்டரி

  ஜியோபோனில் ஜியோ அசிஸ்டண்ட் மூலம் இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது ஜியோபோனினை குரல் மூலமாகவே இயக்க முடியும். இத்துடன் புதிய அப்டேட் மூலம் ஜியோபோனில் வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #jiophone #paytm
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் சாதனத்தில் ஃபேஸ்புக் செயலியை தொடர்ந்து கூகுள் மேப்ஸ் செயலி புதிய அப்டேட் மூலம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. #jiophone #GoogleMaps  ஜியோபோனில் ஃபேஸ்புக் செயலி இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சேர்க்கப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் யூடியூப், வாட்ஸ்அப் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் செயலிகள் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

  ஆகஸ்டு 15-ம் தேதி முதல் இந்த செயலிகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய மென்பொருள் அப்டேட் மூலம் கூகுள் மேப்ஸ் செயலி ஜியோபோனில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த செயலி கை ஓ.எஸ். தளத்துக்கு ஏற்ற வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

  ஜியோபோன் பயனர்களுக்கு சீரான அனுபவத்தை வழங்கும் நோக்கில் செயலி உருவாக்கப்படுகின்றன. ஜியோபோன் 2 மாடல் வெளியாகும் போதே இந்த செயலிகள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோபோனினை அப்டேட் செய்ததும், ஜியோஸ்டோர் சென்று கூகுள் மேப்ஸ் செயலியை ஹோம் பேஜில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.   முதற்கட்டமாக கூகுள் மேப்ஸ் செயலியில் அடிப்படை அம்சங்களை பயன்படுத்த முடியும். அந்த வகையில் பயனர் தங்களுக்கு தெரியாத இடங்களுக்கு மேப் மூலம் சென்றடைய முடியும். இத்துடன் பைக் ரூட் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். 

  கூகுள் மேப்ஸ் தகவல்களை லேயர்கள் அல்லது பிரத்யேக மேப் வியூக்கள் மூலம் பார்க்க முடியும். குறிப்பிட்ட இடங்களை தேடவோ அல்லது நீங்கள் இருக்குமிடத்தை மேப்-இல் பார்க்க முடியும்.

  கை ஓ.எஸ். இயங்குதளத்துக்கான கூகுள் மேப்ஸ் செயலி வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், நோக்கியா 8110 4ஜி மொபைலிலும் இந்த செயலி விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo