search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஜியோபோனில் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்யலாம்
    X

    ஜியோபோனில் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்யலாம்

    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோனில் வாட்ஸ்அப் செயலி வசதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பயனர்கள் ஜியோபோன் 2ல் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். #jiophone



    ஜியோபோனிற்கு வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் செயலிகளை பயன்படுத்தும் வசதியை வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருந்தது. ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

    முன்னதாக யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் செயலிகளை பயன்படுத்தும் வசதி ஜியோபோனில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்ட நிலையில், வாட்ஸ்அப் வசதி மட்டும் வழங்கப்படாமல் இருந்து, தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது. 

    வாட்ஸ்அப் பயன்படுத்துவதற்கான அறிவிப்பு ரிலைன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. ஜியோபோனில் வாட்ஸ்அப் செயலியை டவுன்லோடு செய்ய ஜியோஸ்டோர் சென்று இன்ஸ்டால் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்ததும் சில நொடிகளில் செயலி டவுன்லோடு ஆகி, இன்ஸ்டால் ஆகும். செயலியை பயன்படுத்த ஜியோபோனின் மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும். இதற்கு செட்டிங்ஸ் -- டிவைஸ் -- சாஃப்ட்வேர் அப்டேட் ஆப்ஷன்களுக்கு செல்ல வேண்டும். 



    ஜியோபோனில் வாட்ஸ்அப் செட்டப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது மொபைல் நம்பருக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். ஒ.டி.பி. மூலம் உங்களது மொபைல் நம்பரை உறுதிப்படுத்தியதும் வாட்ஸ்அப் பயன்படுத்த துவங்கலாம்.

    ஜியோபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்த குறிப்பிட்ட ஐ.எம்.இ.ஐ. நம்பர் லாக் செய்யப்படவில்லை. இதனால் ஜியோபோனில் எந்த ஜியோ சிம் கார்டு நம்பரை கொண்டும் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்.

    ஜியோபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது எழுத்துக்கள், புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள முடியும் என்றாலும் ஆன்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ். தளங்களில் இருப்பதை போன்று ஜியோபோனில் பயன்படுத்த முடியாது. கை ஓ.எஸ்.-இல் இயங்கும் ஜியோபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

    ஜியோபோனில் வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ளவோ, போட்டோ ஸ்டேட்டஸ்களை பார்க்க முடியாது. மேலும் லொகேஷன் ஷேரிங் ஆப்ஷன், சாட் பேக்கப் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியாது.
    Next Story
    ×