search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fusion Phone"

    இந்திய மொபைல் போன் விற்பனையில் ஜியோபோன் முதலிடம் பெற்றிருப்பதாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #jiophone


    இந்திய மொபைல் போன் சந்தையில் ஜியோபோன் மட்டும் 27% விற்பனையாகி இருக்கிறது. ஃபீச்சர்போன், ஃபியூஷன் போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் ஒட்டுமொத்த விற்பனையில் ஜியோபோன் விற்பனை முன்னணி இடத்தில் இருப்பது சமீபத்திய சி.எம்.ஆர். அறிகக்கையில் தெரியவந்துள்ளது. 

    அந்த வகையில் இந்தியாவில் கடந்த வாரம் விற்பனையான நான்கு மொபைல்களில் ஒன்று ஜியோபோன் ஆகும். இந்திய சந்தையில் பட்ஜெட் மற்றும் ஃபீச்சர் போன் சார்ந்ததாக இருக்கிறது. இங்கு ஸ்மார்ட்போன் விற்பனை முன்னணி நிறுவனங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக இல்லை. இந்தியாவில் ஜியோபோன் விலை ரூ.1500 என நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது அதன் வரவேற்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

    இத்துடன் ஜியோபோன் வாங்குவோருக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள், எஸ்.எம்.எஸ். ஜியோ வீடியோ மற்றும் ஆடியோ ஸ்ட்ரீமிங் சேவைகளை பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சமீபத்தில் ஜியோபோனில் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டது.

    ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி 17% வரை அதிகரித்திருக்கிறது, இதே காலகட்டத்தில் ஃபீச்சர்போன் விற்பனை சரிந்திருக்கிறது. ஜியோபோனும் ஃபீச்சர்போனாக கருத முடியும் என்றாலும், அறிக்கையில் இது ஃபியூஷன் போன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் ஸ்மார்ட்போன் போன்று இருப்பதால் இவ்வாறு குறிப்பிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சமீபத்தில் ஜியோபோன் 2 அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், ஜியோபோன் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் பிரிவில் ஹூவாய் ஹானர், ஒப்போ ரியல்மி மற்றும் விவோ மாடல்கள் அதிகளவு விற்பனைக்கு வித்திட்டன. 

    இத்துடன் சாம்சங் தனது முதலிடத்தை இழந்து சியோமி முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் 30 கோடி யூனிட்கள் விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சி.எம்.ஆர். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #jiophone #MobilePhones
    ×