search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajapalayam"

    • செஸ் ஒலிம்பியாட்போட்டி சிவகாசி-குற்றாலத்திற்கு சைக்கிள் பேரணி சென்ற கல்லூரி மாணவர்களை ராஜபாளையத்தில் வரவேற்றனர்.
    • 240 கி.மீ. தூர சைக்கிள் பேரணியை தொடங்கினார்கள்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார்கல்லூரியின் உடற் கல்வியியல் துறை மாணவர்கள் 210 பேர் தமிழக அரசு சார்பாக மாமல்லபுரத்தில்நடந்து வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றியவிழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த திட்டமிட்டனர்.

    இதைத்தொடர்ந்து சிவகாசியில் இருந்து குற்றாலம் வரை 240 கி.மீ. தூர சைக்கிள் பேரணியை தொடங்கினார்கள். கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த சைக்கிள் பேரணி ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக ராஜபாளையம் வந்தடைந்தது.

    ராஜபாளையம் அன்ன ப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் வைத்து தாளாளர்

    என். ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா, தலைமை ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் உடற்கல்வி மாணவர்கள் வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் தளவாய்புரம், முகவூர், தேவதானம்

    • ராஜபாளையத்தில் இரட்டைமலை சீனிவாசன் உருவப்படம் திறக்கப்பட்டது.
    • மாநில தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-மதுரைரோட்டில் பழைய பஸ் நிலையம் அருகே சிவகுலத்தோர் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இரட்டைமலை சீனிவாசன் உருவப்பட திறப்பு விழா நடந்தது.

    மாநில தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சுகுநாதன் முன்னிலை வகித்தனர்.மாநில மகளிரணி தலைவி கலையரசி வரவேற்றார்.

    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசனின் உருவ படத்தை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட தலைவர் லட்சுமிகாந்தன், மாவட்டமகளிரணி தலைவி தமிழ்செல்வி, நகர செயலாளர் சரவணகுமார், ஒன்றிய செயலாளர் ராசுக்குட்டி, வனராஜ், முனியசாமி,இளைஞரணி முனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் குமரன் நன்றி கூறினார்.

    • ராஜபாளையம் பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
    • ராஜபாளையம் மின்வாரிய பகிர்மானம் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு அறிவிப்பு

     ராஜபாளையம்

    ராஜபாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (7-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பி.எஸ்.கே நகர், அழகைநகர், தெற்கு மலையடிபட்டி, சங்கரன்கோவில்முக்கு, தென்காசிரோடு, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ஜ.என்.டி.யு.சி.நகர், பாரதிநகர்,கே.ஆர்.நகர், சமுசிகாபுரம்,சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்காபுரம், கலங்காபேரி புதூர், மொட்டைமலை,வ.உ.சி நகர்,பி.ஆர்.ஆர் நகர், பொன்னகரம்,எம்.ஆர்.நகர், லட்சுமியாபுரம்,ராம்கோ நகர்,

    பி.டி.ஆர் நகர், நத்தம்பட்டி,வரகுணராமபுரம்,அம்மன்கோவில்பட்டி, போலீஸ்காலனி,ஸ்ரீபுரம், மீனாட்சிபுரம், ஆண்டாள்புரம், வேப்பம்ப ட்டி, சங்கரபாண்டியபுரம்ம ற்றும் தொட்டியபட்டி உப மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக புதுப்பட்டி, கோதைநாச்சியார்புரம், கொத்தன்குளம்,தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி,கலங்காபேரி, கலங்காபேரி புதூர், ராஜீவ்காந்தி நகர், இ.எஸ்.ஐ காலனி, வேட்டை பெருமாள்கோவில், விஷ்ணுநகர், ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை ராஜபாளையம் மின்வாரிய பகிர்மானம் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

    ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் புது தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 74). இவர் அதே பகுதியில் உள்ள பஸ் நிலையம் முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கணேசன் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சொக்கநாதன் புத்தூரை சேர்ந்த யோகராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ராஜபாளையத்தில் மது-புகையிலை விற்ற 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரிலும், ராஜபாளையம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் ஆலோசனையின் பேரிலும் ராஜபாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது-புகையிலை பொருட்கள் விற்பதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    நேற்று ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக பூபால்பட்டி தெருவைச் சேர்ந்த அக்னி (வயது 40), சின்ன சுரைக்காய்பட்டியைச் சேர்ந்த பழனிசெல்வம் (42), டி.பி.மில்ஸ் ரோடு ராதாகிருஷ்ணன் (45), சுந்தரநாச்சியாபுரம் பீட்டர் பால்ராஜ் (46), சத்திரபட்டி சீனிவாசன் (35), வி.புதூர் தங்கபாக்கியம் (36), அய்யனாபுரம் தண்டாயுதபாணி (39) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1,150 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராஜபாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் லிங்குசாமி (தெற்கு), அய்யாத்துரை பாண்டியன் (தளவாய்புரம்) மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் (சேத்தூர்) ஆகியோர் ரோந்து சென்றனர்.

    அப்போது மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ற மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கென்னடி (55), வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (42), இனாம் கோவில்பட்டியைச் சேர்ந்த அன்பு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ராஜபாளையம் அருகே வாலிபரை கொன்று கிணற்றில் உடலை வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்:

    ராஜபாளையம் அருகே உள்ள நக்கனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கி (வயது 34). இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.

    விசாரணையில், சம்பவத்தன்று இசக்கி குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (24), முனீஸ்வரன் (28) ஆகியோரும் மது குடித்துவிட்டு வந்து இசக்கியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் இசக்கியை, 2 பேரும் கொலை செய்து உடலை கிணற்றில் வீசியுள்ளனர் என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 மாத கைக் குழந்தையுடன் தாய் பலியானார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள ராயகிரி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் வேல் முருகன் (வயது 32). டயர் வல்கனைசிங் மற்றும் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி முனீசுவரி (30). இவர்களுக்கு அனுஷ்கா தேவி (7), அனுப்ரியா (5), தேவி ப்ரியா (2 மாத கை குழந்தை) உள்ளனர்.

    இன்று அதிகாலை இவர்கள் அனைவரும் காரில் தென்காசிக்கு புறப்பட்டனர். காரை வேல்முருகன் ஓட்டிச்சென்றார்.

    தேவிபட்டிணம் விலக்கில் சோதனைச்சாவடி அருகே அதிகாலை 3.30 மணிக்கு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது தென்காசியில் இருந்து மதுரைக்கு மரப்பாரம் ஏற்றி வந்த லாரி அங்கு நின்று கொண்டிருந்தது.

    லாரி நிற்பதை காரை ஓட்டிவந்த வேல் முருகன் சரியாக கவனிக்க வில்லை என தெரிகிறது. லாரி அருகே வந்ததும், சுதாரித்துக் கொண்ட அவர் காரை நிறுத்த முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதியது.

    இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. அதில் இருந்த முனீசுவரி, 2 மாத கைகுழந்தை தேவிபிரியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    சோதனைச்சாவடியில் இருந்த போலீசார் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். பலத்த காயத்துடன் காருக்குள் சிக்கிக் கொண்ட வேல் முருகன், அவரது மகள்கள் அனுஷ்கா தேவி, அனுப்பிரியா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து தொடர்பாக கோவில்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் ராமசுப்பு, சேத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்.இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் விவசாய பணிக்கு சென்ற 17 பெண்கள் பலத்த காயம் அடைந்தனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த 17 பெண்கள் விவசாய வேலைக்கு சென்றனர். சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேடகத்தில் வேலை பார்க்க அவர்கள் வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த ராஜகோபால் (வயது30) என்பவர் வேனை ஓட்டிச்சென்றார். ஜமீன் கொல்லம்கொண்டான் விலக்கு பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் வேனில் சென்ற 17 பெண்களும் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சேத்தூர் புறக்காவல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பணிகளை துரிதப்படுத்தினார்.

    இதில் பஞ்சனை, சின்னப் பொன்னு, லட்சுமி, பிச்சையம்மாள், மஞ்சு உள்பட சிலர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விபத்தில் சிக்கி சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    ராஜபாளையம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதியில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின்பேரில் ராஜபாளையம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி சேத்தூர் புறக்காவல் போலீசார் மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் மலைப்பகுதியில் உள்ள சின்னப்புல்பட்டி பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இயைடுத்து போலீசார் கள்ளச்சாராயம் காய்ச்சிய கிருஷ்ணன்கோவில் கணபதிசுந்தரநாச்சியார் புரத்தைச் சேர்ந்த பொன் இருளப்பன் (வயது30) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பேராசிரியர் பலியானார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சீனி. இவரது மகன் கிருஷ்ணராஜ் (வயது 28). சென்னையில் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார்.

    பொங்கல் விடுமுறைக்காக கிருஷ்ணராஜ் ஊருக்கு வந்தார். அவரை பார்க்க நண்பர் பிரதீப் (25) வீட்டுக்கு வந்தார்.

    பின்னர் பிரதீப்பை முறம்பு பகுதியில் உள்ள அவரது வீட்டில் விடுவதற்காக கிருஷ்ணராஜ் மோட்டார் சைக்கிளில் சென்றார். சங்கரன்கோவில் சாலையில் கோதைநாச்சியார்புரம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோதியது.

    இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். பிரதீப் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    விபத்து தொடர்பாக ராஜபாளையம் தெற்கு போலீசில் கிருஷ்ணராஜின் தந்தை சீனி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து காரை ஓட்டி வந்த தென்காசி அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த முருகேசன் (28) என்பவர் கைது செய்யப்பட்டார்.

    ராஜபாளையம் பகுதிகளில் சட்டவிரோதமாக மது மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன.

    இதையடுத்து போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின் றனர். அதன்படி சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது தேவதானம் குமரன்கோவில் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக கோவி லூரைச் சேர்ந்த பெரிய சாமி (வயது49) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ராஜபாளையம் முடங்கி யார் ரோடு முப்பிடாதி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் புகை யிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பதாக தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் அந்த தெருவில் அதிரடி சோதனை நடத்தினார்.

    அப்போது சமுத்திரக்கனி (53) என்பவரது வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 50 புகையிலை பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சமுத்திரக்கனியை கைது செய்தனர். # tamilnews
    ராஜபாளையம் அருகே விபத்தில் வெல்டிங் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சீதக்காதி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). வெல்டிங் தொழில் செய்து வந்தார். ஆறுமுகம் நேற்று மாலை ராஜபாளையம்-மதுரை ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அழகாபுரி விலக்கில் சென்று கொண்டிருந்த அவர் மீது அந்த வழியாக வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் மோதியது.

    இந்த விபத்தில் ஆறுமுகம் படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து ஆறுமுகத்தின் மனைவி ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் கோபாலகிருஷ்ணனை கைது செய்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

    ×