search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையத்தில் மது-புகையிலை விற்ற 10 பேர் கைது
    X

    ராஜபாளையத்தில் மது-புகையிலை விற்ற 10 பேர் கைது

    ராஜபாளையத்தில் மது-புகையிலை விற்ற 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரிலும், ராஜபாளையம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் ஆலோசனையின் பேரிலும் ராஜபாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது-புகையிலை பொருட்கள் விற்பதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    நேற்று ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக பூபால்பட்டி தெருவைச் சேர்ந்த அக்னி (வயது 40), சின்ன சுரைக்காய்பட்டியைச் சேர்ந்த பழனிசெல்வம் (42), டி.பி.மில்ஸ் ரோடு ராதாகிருஷ்ணன் (45), சுந்தரநாச்சியாபுரம் பீட்டர் பால்ராஜ் (46), சத்திரபட்டி சீனிவாசன் (35), வி.புதூர் தங்கபாக்கியம் (36), அய்யனாபுரம் தண்டாயுதபாணி (39) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1,150 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராஜபாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் லிங்குசாமி (தெற்கு), அய்யாத்துரை பாண்டியன் (தளவாய்புரம்) மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் (சேத்தூர்) ஆகியோர் ரோந்து சென்றனர்.

    அப்போது மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ற மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கென்னடி (55), வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (42), இனாம் கோவில்பட்டியைச் சேர்ந்த அன்பு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×