search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pulwama"

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வீடு திரும்பிய சப் இன்ஸ்பெக்டரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Pulwama #MilitantsShooting
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் செவா காலன் பகுதியில் குண்டுகள் துளைத்த நிலையில் போலீஸ்காரர் ஒருவரது உடல் கிடப்பதை அப்பகுதி மக்கள் இன்று கண்டனர். இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    விசாரணையில் அவர் ஸ்ரீநகர் சிஐடி பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் இம்தியாஸ் அகமது மிர் என்பதும்,  அவர் பணி முடிந்து வீடு திரும்பியபோது பயங்கரவாதிகள் அவரை சுட்டு கொன்றதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #Pulwama #MilitantsShooting
    ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் உள்ள சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் உள்ள மிடுரா என்ற இடத்தில் சிஆர்பிஎப் முகாம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று இரவு சுமார் 8.30 மணியளவில் அந்த பகுதியில் நுழைந்த பயங்கரவாதிகள் அந்த முகாம் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு பணியில் இருந்த விஜயகுமார் என்ற  காவலர் படுகாயம் அடைந்தார்.

    சக வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து டிரால் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #MilitantsAttack
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று மாலை துப்பாக்கி சண்டை நடைபெற்றது. #PulwamaEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பதான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து, பதான் பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கினர்.

    பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் சேத விவரங்கள் வெளியாகவில்லை. தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #PulwamaEncounter
    ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையில் சப்-இன்பெக்டராக பணியாற்றும் முகம்மது அஷார்ப் தார், ஈத் பண்டிகைக்காக வீட்டுக்கு வந்த நிலையில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். #Kashmir #Pulwama
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் சப்-இன்பெக்டராக பணியாற்றும் முகம்மது அஷார்ப் தார், ஈத் பண்டிகைக்காக புல்வாமாவில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில், அவரது வீட்டுக்குள் புகுந்துள்ள பயங்கரவாதிகள் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

    குல்காம் பகுதியில் பயிற்சி காவலர் சுட்டுக்கொல்லப்பட்டு சில மணி நேரங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    ஜம்மு காஷ்மீரில் வீடு புகுந்து ஒருவரை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள், அவரை சுட்டுக்கொன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. #JKMilitants #JKCivilionShotDead
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. காவல்துறை மற்றும் ராணுவத்தினர் மட்டுமின்றி அப்பாவி மக்களையும் கொன்று குவிக்கின்றனர்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் முர்ரன் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நேற்று புகுந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த குலசார் அகமது பட் என்பவரை கடத்திச் சென்றனர். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் அருகில் உள்ள வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் செயல்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    தெற்கு காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை போலீஸ், துணை ராணுவத்தினர் உள்ளிட்ட 6 பேரை பயங்கரவாதிகள் கடத்தி கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JKMilitants #JKCivilionShotDead
    தெற்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர் பரிதாபமாக மரணம் அடைந்தார். #MilitantAttack #CRPF
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள புல்வாமா மாவட்டத்தின் நைரா கிராமத்தை சேர்ந்தவர் நசீர் அகமது. சி.ஆர்.பி.எப். வீரரான இவர் நேற்று தனது வீட்டின் அருகில் சென்றபோது, பயங்கரவாதிகள் சிலர் இவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.



    காஷ்மீரில் தாயாரின் கோரிக்கையை ஏற்று சிறப்பு போலீஸ் அதிகாரியை விடுவித்த 24 மணிநேரத்தில், பயங்கரவாதிகள் சி.ஆர்.பி.எப். வீரரை சுட்டுக் கொன்றது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #MilitantAttack #CRPF

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சிறப்பு போலீஸ் அதிகாரி இன்று பத்திரமாக வீடு திரும்பினார். #Kashmir
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ட்ரால் பகுதியில் செய்னாத்தர் கிராமத்தை சேர்ந்தவர் முடாசீர் அகமது. இவர் சிறப்பு போலீஸ் அதிகாரி ஆக பணியாற்றுகிறார்.

    இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். அவரை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இந்நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சிறப்பு போலீஸ் அதிகாரி நேற்று இரவு பத்திரமாக வீடு திரும்பினார் என காஷ்மீர் எஸ் பி பானி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், போலீஸ் அதிகாரியை கடத்திய பயங்கரவாதிகளே அவரை விடுவித்து விட்டனர். அவரிடம் விசாரித்து வருகிறோம் என தெரிவித்தார். #kashmir
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் மூன்று உள்ளூர் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JammuKashmir #Pulwama #Encounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சிலர் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.



    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் உள்ளூர் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #JammuKashmir #Pulwama #Encounter
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் போலீசார் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் பலியானார். #JammuKashmir #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தில் போலீசார் வாகனம் ஒன்று ரோந்து சென்று கொண்டிருந்தது.

    இதையடுத்து அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசார் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 போலீசார் படுகாயம் அடைந்தனர். அதன்பின் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இதைத்தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் காயமடைந்த போலீசாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் ஒரு போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். #JammuKashmir #MilitantsAttack
    ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JammuKashmir #MilitantstAttack #SecutiryForceEncounter
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட ஹயுனா டிரால் என்ற பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து, அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியானது. 

    இந்நிலையில், அதே பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்றாவது பயங்கரவாதி உடல் சிக்கியது. இதையடுத்து, பாதுகாப்பு படையினருடனான என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எண்ணிக்கை 3 ஆனது. இத்துடன் அங்கு துப்பாக்கி சண்டை முடிவடைந்தது. விசாரணையில் அவர்கள் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

    இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #Kashmir #Kashmirencounter #Pulwamaencounter #Terrorists killed
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு பின் சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்துக்கு ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #Bipin Rawat #JammuandKashmir #Aurangzeb
    ஸ்ரீநகர் :

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய படைப்பிரிவில் பணியாற்றி வந்தவர் அவுரங்சீப். காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தை சேர்ந்தவரான அவுரங்சீப் பல பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் ஆவார். அம்மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பின் தளபதி சமீர் டைகர் என்பவரை என்கவுண்டரில் வீழ்த்திய ராணுவ குழுவில் அவுரங்கசீப்பும் ஒருவர்.

    இந்நிலையில், அவுரங்கசீப் ரம்ஜான் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அவுரங்சீப்பின் உடலை புல்வாமா மாவட்டத்தின் குசோ பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து, அவுரங்கசீப்பை கடத்தியது ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.



    இந்நிலையில், புல்வாமாவுக்கு இன்று சென்ற ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பயங்கரவாதிகளால் கடத்தி சுட்டுக்கொல்லப்பட்ட அவுரங்கசீப்பின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.. #Bipin Rawat #JammuandKashmir #Aurangzeb
    காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் விடுமுறையை ஒட்டி வீட்டுக்கு சென்ற போது பயங்கரவாதிகளால் கடத்தி சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ வீரர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. #JammuandKashmir #Aurangzeb #Armymanabducted

    ஸ்ரீநகர் :

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய படைப்பிரிவில் பணியாற்றி வந்தவர் அவுரங்சீப். காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தை சேர்ந்தவரான அவுரங்சீப் பல பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அம்மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பின் தளபதி சமீர் டைகர் என்பவன், ராணுவ என்கவுண்டர் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த என்கவுன்டரை நடத்தியவர்களில் கடத்தப்பட்ட்ட அவுரங்கசீப்பும் ஒருவர். 

    விடுமுறைக்காக வீட்டிற்கு சென்ற இவரை நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிமுனையில் கடத்தி சென்றனர். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அவுரங்சீப்பின் உடலை புல்வாமா மாவட்டத்தின் குசோ பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், அவரை சுட்டுக்கொல்வதற்கு முன்பாக எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், அவுரங்சீப் பங்குபெற்ற பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடத்தி சென்றவர்கள் விசாரித்துள்ளனர். 



    1.15 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது. அவுரங்கசீப்பை கடத்தி சென்றவர்கள் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. #JammuandKashmir #Aurangzeb #Armymanabducted
    ×