search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "civilians dead"

    ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொன்று குவிக்கப்பட்ட பரிதாபம் அரங்கேறி உள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.

    இதுபற்றி அந்தப் பகுதியை சேர்ந்த எம்.பி. முகமது ஹாசிம் அல்கோஜாய் கூறும்போது, “ஒரு வான்தாக்குதலில் 13 பேர் பலியாகினர். மற்றொரு வான்தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இவ்விரு தாக்குதல்களும் 8-ந் தேதி இரவு நடந்துள்ளது” என குறிப்பிட்டார்.

    ஜம்மு காஷ்மீரில் வீடு புகுந்து ஒருவரை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள், அவரை சுட்டுக்கொன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. #JKMilitants #JKCivilionShotDead
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. காவல்துறை மற்றும் ராணுவத்தினர் மட்டுமின்றி அப்பாவி மக்களையும் கொன்று குவிக்கின்றனர்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் முர்ரன் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நேற்று புகுந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த குலசார் அகமது பட் என்பவரை கடத்திச் சென்றனர். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் அருகில் உள்ள வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் செயல்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    தெற்கு காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை போலீஸ், துணை ராணுவத்தினர் உள்ளிட்ட 6 பேரை பயங்கரவாதிகள் கடத்தி கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JKMilitants #JKCivilionShotDead
    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. #SyriaBombing #SyriaRebel
    பெய்ரூட்:

    சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படையும் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவின் வடமேற்கில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அரசுப் படைகள் சமீபகாலமாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன.

    இட்லிப் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் கடந்த வியாழக்கிழமை ராக்கெட் வெடிகுண்டுகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்த நாளான நேற்றும் சற்று கிழக்கை நோக்கி முன்னேறி சென்று வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.



    அலெப்போவிற்கு அருகில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த  தாக்குதல்களில் பொதுமக்கள் சுமார் 30 பேர் பலியானதாக சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.

    கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இட்லிப் மாகாணம்தான் தனது அடுத்த இலக்கு என அதிபர் பஷார் அல் ஆசாத் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த உக்கிரமான தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. #SyriaBombing #SyriaRebel

    ×