search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public demand"

    • கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த விலைவாசி உயர்வை சரிசெய்ய முடியாமல் திண்டாடி வந்தனர்.
    • கடலூரில் 1 கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனை செய்ததும் அரங்கேறியது.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் சில நாட்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பாராத வகையில் கிடுகிடுவென அதிகரித்தது. இதனால் இல்லத்தரசிகள் அனைவரும் என்ன செய்வதென ெதரியாமல் திண்டாடி வந்தனர். இதனையடுத்து தக்காளி விலை உயர்வை தொடர்ந்து பழங்கள், காய்கறிகள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்தது. இதனால் குறிப்பாக கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த விலைவாசி உயர்வை சரிசெய்ய முடியாமல் திண்டாடி வந்தனர். தக்காளி விலையை கட்டுப்படுத்த கடலூரில் 1 கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனை செய்ததும் அரங்கேறியது. கடலூரில் மாவட்டத்தில் இன்று காய்கறிகளின் விலைபட்டியல் வருமாறு:-

    மிளகாய் ரூ. 80, வெங்காயம் ரூ. 24, தக்காளி ரூ. 88, உருளை ரூ.20, பல்லாரி ரூ.26, சின்ன வெங்காயம் ரூ. 90, கேரட் ரூ. 46, பீன்ஸ் ரூ. 95, கோஸ் ரூ.20, சவுசவ் ரூ.26, பீட்ரூட் ரூ. 35, இஞ்சி ரூ.255, முள்ளங்கி ரூ. 22, கத்தரிக்காய் ரூ.50, வெண்டை ரூ.30, கோஸ் ரூ.20, குடைமிளகாய் ரூ.65, பஜ்ஜிமிளகாய் ரூ.60, காளிபிளவர் ரூ. 30, நூக்கோல் ரூ. 80, அவரைக்காய் ரூ.40, மாங்காய் ரூ.22, கருணைகிழங்கு ரூ.50, முருங்கை ரூ. 35, சேம்பு ரூ. 45, பிடிகருணை ரூ. 40, பாகற்காய் ரூ. 50, புடலை ரூ. 20, சுரக்காய் ரூ. 20, சுவிட்கான் ரூ. 22.

    • பசுமை சாலை பாலைவனமவதாக புகார்
    • வாகனங்களை காத்திருக்க வைப்பதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

    அணைக்கட்டு:

    வேலூர் முதல் ஒடுகத்தூர் வரை சலையின் இருபுறமும் பசுமையாகவும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நிழலாகவும் குளிர்ச்சியாகவும் காற்றோட்டம் நிறைந்ததாகவும் காட்சியளிக்கின்ற புளிய மரங்கள் இவை சுமார் 100 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகின்றது.

    தற்போது சாலை விரிவாக்கம் பணியல் ஒரு சில மரங்களை வெட்ட அனுமதி வழங்கி விட்டு கூடுதலாக மரங்களை வெட்டி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றன.

    இதனால் அதிகமான மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாகவும், பசுமை நிறைந்து காணப்படும் சாலையில் தற்போது வெயில் மட்டுமே சுட்டெரிக்கிறது. இதனால் அவ்வளியாக செல்லும் வாகன் ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளகி வருகின்றனர்.

    மேலும் மரங்களை வெட்டும் போது அவ்வழியாக செல்லும் வாகனங்களை சுமார் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை காத்திருக்க வைப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே அனுமதி வழங்கிய மரங்களை மட்டுமே வெட்ட வேண்டும் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் வெட்ட வேண்டும் பசுமையாக இருக்கும் சாலையை பாலைவனமாக மாற்ற வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஆரணி பகுதியில் சப்ளை பாதிப்பு
    • உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பாலாற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அதிக அளவு குடிநீர் உறிஞ்சும் கிணறுகள் கட்டப்பட்டுள்ளது.

    செய்யாறு சாலையில் உள்ள பாலாற்றில் ஆரணி நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், குடிநீர் உறை கிணறு 2016-2017-ம் ஆண்டு கட்டப்பட்டது.

    இந்த கிணற்றில் இருந்து தினமும் ஆரணி நகராட்சி மற்றும் கிராம பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    இந்த உறை கிணற்றிலிருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. உடைந்த குழாய் வழியாக தினமும் அதிக அளவு தண்ணீர் வெளியேறி வீணாகுகிறது.

    இதனால் ஆரணி பகுதியில் பல கிராமங்க ளுக்கு குடிநீர் சப்ளை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி உடைந்த குழாயை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த மாதம் 12 அடி நீளத்திற்கு மலை பாம்பு போல ஒரு பாம்பு மிகப்பெரிய அளவில் வந்துள்ளது.
    • உடனடியாக தூத்துக்குடி தீயணைப்பு வீரர்கள் வந்து தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டலம் 58-வது வார்டுக்கு உட்பட்ட காந்திநகரில் உள்ள 4 தெருக்களில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் 3-வது மற்றும் 4-வது தெருக்களில் கடந்த சில மாதமாக விஷ பாம்புகள் படையடுத்து வருவது அதிகரித்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள், குழந்தைகள் அச்சம் அடைந்துள்ளனர். வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும், வீட்டுக்கு வரும்போதும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். கடந்த மாதம் 12 அடி நீளத்திற்கு மலை பாம்பு போல ஒரு பாம்பு மிகப்பெரிய அளவில் வந்துள்ளது. இதனை கண்டு அங்குள்ள பகுதியில் ஒரு வீட்டில் வசிக்கும் பச்சைக்கிளி(வயது 35) என்பவர் தனது குழந்தைகளை கையில் பிடித்துக் கொண்டு அலறியுள்ளார்.

    உடனடியாக தூத்துக்குடி தீயணைப்பு வீரர்கள் வந்து தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர். ஆனாலும் பாம்பு பிடிபடவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காந்திநகர் 4-வது தெருவில் உள்ள டிரைவர் சேகர்(39) என்பவரின் வீட்டில் உள்ள நாய் பாம்பு கடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் உயிரை பாதுகாத்திட வேண்டும் என்று காந்திநகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆக்கிரமிப்புகள் குறித்து முடிவெடுக்க அதிகாரிகள் குழு அமைக்கப்படடது.
    • இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

    சென்னிமலை:

    சென்னிமலையில் காங்கேயம் ரோடு, அரச்சலூர்ரோடு, நான்கு ராஜா வீதிகள், பெருந்துறை ரோடு, ஊத்துக்குளி ரோடு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து முடிவெடுக்க அதிகாரிகள் குழு அமைக்கப்படடது.

    இக்குழு வும் அறிக்கை தாக்கல் செய்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும், இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வில்லை.

    இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.

    எனவே மாவட்ட கலெக்டர் நேரடி யாக தலையிட்டு ஆக்கிரமிப்பு க்களை அகற்றி, சாலை விரிவாக்க த்துக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கண வாய்புதூர் ஊராட்சி, இந்த ஊராட்சி உட்பட்ட நாராயணபுரம் இந்திரா நகர் பகுதியில் 100-க்கு குடியிருப்புகள் உள்ளன.
    • 3 மீட்ட ருக்கு அப்பால் நீர்தேக்கத் ெதாட்டி கட்டப்பட்டு மக்க ளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட கண வாய்புதூர் ஊராட்சி, இந்த ஊராட்சி உட்பட்ட நாராயணபுரம் இந்திரா நகர் பகுதியில் 100-க்கு குடியிருப்புகள் உள்ளன.

    இந்நிலையில் நாராயண புரம் பஸ் நிறுத்தம் அருகில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு. 3 மீட்ட ருக்கு அப்பால் நீர்தேக்கத் ெதாட்டி கட்டப்பட்டு மக்க ளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த இடைப்பட்ட பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பைப்லைன் பழுத டைந்து. பைப்லைன் சரி செய்யாமல் காலம் தாமதம் செய்ததால். தண்ணீர் வீணாக அருகில் உள்ள தோட்டத்திற்கு செல்லுகிறது.

    எனவே ஊராட்சி நிர்வா கம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த பைப் லைனை சரி செய்து மக்களுக்கு தேவையான நீரை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக் கைக்கு நடவ டிக்கை எடுக்க வில்லை என்றால் சாலை மறியல் செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • நிழற்குடையை மறைத்து தனியார் சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
    • மர்ம ஆசாமிகள் நிழற்குடையை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட இந்த நிழற்குடை போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் அதில் பொரு த்தப்பட்ட இருக்கைகள் சேதம் அடைந்து வருவதுடன் நிழற்குடையை சுற்றிலும் புதர்மண்டி காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அதை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில்;-

    பஸ்சுக்காக காத்துக் கொண்டிருக்கும் பொது மக்களை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. சிறிது காலம் பயன்பாட்டில் இருந்து வந்த நிழற்குடை போதிய பராமரிப்பின்மை காரணமாக சேதம் அடைந்து வருகிறது. மேலும் நிழற்குடையைச் சுற்றிலும் புதர்மண்டி உள்ளதுடன் இருக்கைகளும் சேதம் அடைந்து உள்ளது. இந்த சூழலில் நிழற்குடையை மறைத்து தனியார் சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதை சாதகமாக கொண்டு மர்ம ஆசாமிகள் நிழற்குடையை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியவாறு காத்திருக்க வேண்டி உள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக விபத்துக்கள் ஏற்படும் சூழலும் நிலவு கிறது.

    பராமரிப்பு இல்லாமல் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைத்தும் அதன் முன்பாக வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்று வதற்கும் அதிகாரிகள் முன் வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தற்காலிக பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • வியாபாரிகளுக்கு சரியான முறையில் கடைகள் ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    பாலையம்பட்டி

    அருப்புக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் இடிக்கப்பட்டு அங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ஸ்மார்ட் பஸ் நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்கும் வரை அதன் அருகிலேயே தற்காலிக பஸ் நிலையம் நகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பஸ் நிலையத்தில் போதிய முன்னறிவிப்பின்றி பஸ்கள் நிற்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இங்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. பஸ்கள் வந்து செல்லும் நேரம் குறித்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

    இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே புதிய பஸ் நிலையத்தில் கடைகள் வைத்திருந்தவர்களுக்கு தற்காலிக பஸ் நிலையத்தில் கடைகள் ஒதுக்குவதிலும் குளறுபடி உள்ளதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    புதியதாக பஸ் நிலையம் கட்டும் பணிகள் ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என்ற நிலையில் தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும், பஸ்கள் நிற்பதை முறைப்படுத்தி வியாபாரிகளுக்கு சரியான முறையில் கடைகள் ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    • மதுபான கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கிராம மக்களும் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கானத்தான்காடு, சண்முகநாதபுரம் பஞ்சாயத்தில் அரசு மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர், கோட்டாட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், வட்டாட்சியர், காவல்துறை சார்பு ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

    கானாத்தான்காடு கிராமத்தில் 500க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை அருகே டாஸ்மாக் மதுபானகடை அமைக்க ஏற்பாடுகள் நடந்தது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சண்முகநாதபுரம் ஊராட்சியில் மதுபானகடையை அமைக்ககூடாது என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் மதுரை ஐகோர்ட்டில் தடை ஆணை பெற்றுள்ளனர். தடையை மீறி நேற்று கடை திறக்கப்பட்டதால் கிராம மக்கள் கடை முன்பு திரண்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிந்தனர். காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நேற்று இரவு தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரிடம் மேல் முறையீடு செய்தனர். மதுபானகடையை உடனே அகற்ற வேண்டும் இல்லை என்றால் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராம மக்களும் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

    • சாக்கடை கழிவு நீர் அகற்றாமல் இருப்பதால் பல்வேறு சுகா தார சீர்கேடுகள் அங்கு வசிக்கும் மக்களுக்கு வந்துள்ளது.
    • மக்கள் அச்சத்தை போக்க குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும்.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பகுதி களில் பல்வேறு தெருக்களில் கழிவுநீர் கால்வாய்களில் கழிவுநீர் அகற்றப்படாததால் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வரு கிறது. குறிஞ்சிப்பாடி சிகா மணி ரைஸ் மில் தெருவில் ஒரு மாதமாக சாக்கடை கழிவு நீர் அகற்றாமல் இருப்பதால் பல்வேறு சுகா தார சீர்கேடுகள் அங்கு வசிக்கும் மக்களுக்கு வந்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கம் குறைந்து தற்போது பல மாவட்ட ங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அது போல நேற்று குறிஞ்சிப்பா டியை அடுத்த கல்குணம் கிராமத்தில் அரசுப் தொடக்க பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு மாணவி காய்ச்சலால் இறந்து விட்டார்.

    இந்நிலையில் பேரூ ராட்சி பகுதிகளில் தெருக்க ளில் செல்லும் வாய்க்கால்க ளில் கழிவு நீர் தேங்கி நிற்ப தால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் என மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். மக்கள் அச்சத்தை போக்க குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும். அனைத்து வார்டு பகுதியில் சாக்கடை கழிவு நீர் அகற்ற துப்புரவு பணியாளர்களை துரிதமாக செயல்பட வைக்க வேண்டும் என்பதே குறிஞ்சிப்பாடி பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
    • நடுவக்குறிச்சியில் இருந்து மேலமடம் இசக்கி அம்மன் கோவில் வரை பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் புதியம்புத்தூருக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

    போக்குவரத்து நெருக்கடி

    புதியம்புத்தூருக்கு மேற்கே உள்ள 60 கிராம மக்களும் தூத்துக்குடிக்கு இந்த ரோடு வழியாகத்தான் செல்ல வேண்டும். மதுரை 4 வழிச்சாலையில் தூத்துக்குடி வரும் லாரிகள் டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக குறுக்கு சாலையில் இருந்து ஓட்டப் பிடாரம் வழியாக இந்த ரோட்டில் தான் தூத்துக்குடி செல்கின்றன. மேலும் சிலர் ரோட்டில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் எந்த நேரமும் மெயின் ரோட்டில் போக்குவரத்து ஏற்படுகிறது.

    காலை, மாலை நேரங்களில் மேலமடம்சந்திப்பில் இருந்து நடுவக்குறிச்சி வரை உள்ள ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 20 நிமிடங்களுக்கு மேலாகிறது. எனவே மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சில மின்கம்பங்களை ரோட்டின் ஓரத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.

    புறவழிச்சாலை

    போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஊருக்கு வடபுறம் புறவழிச்சாலை அமைப்பதை தவிர வேறு வழி இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து இந்த பைபாஸ் சாலையை உடனடியாக அமைக்க வேண்டும் நடுவக்குறிச்சியில் இருந்து மேலமடம் இசக்கி அம்மன் கோவில் வரை உள்ள 80 அடி ஓடையில் மண் நிரப்பி பைபாஸ் ரோடு அமைத்து புதியம்புத்தூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடையார்பட்டி குளத்தில் நீரை வெளியேற்றாமல் மீன் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நெல்லை:

    நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தை குத்தகைக்கு எடுத்திருந்தவர் நேற்று மீன் பிடிப்பதற்காக அங்கு சென்றார்.
    இதற்காக இரவில் டீசல் மோட்டார் மூலம் குளத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.

    இதனால் அப்பகுதி மக்கள் ஆவேசம் அடைந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இன்று காலை குளத்தின் அருகே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக மீண்டும் பொதுமக்கள் உடையார்பட்டி குளத்தில் திரண்டனர்.

    அப்போது அந்த பகுதி மக்கள் கூறுகையில், குளத்தில் இருந்து தண்ணீரை வீணாக வெளியேற்றக்கூடாது. அவ்வாறு வெளியேற்றுவதால் குளத்தை சுற்றிலும் அமைந்துள்ள குடியிருப்புகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடும்.

    இந்த குளத்தை நம்பி சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஏராளமான கிணறு, ஆழ்துளை கிணறுகள் அமைந்துள்ளது. தற்போது குளத்தில் இருந்து நீரை வெளியேற்றாமல் மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

    இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை மனுவாக பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் சமர்ப்பித்து அவர்களின் வழிகாட்டுதல்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
    ×