search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்காலிக பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள்  செய்து தர வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
    X

    தற்காலிக பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

    • தற்காலிக பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • வியாபாரிகளுக்கு சரியான முறையில் கடைகள் ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    பாலையம்பட்டி

    அருப்புக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் இடிக்கப்பட்டு அங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ஸ்மார்ட் பஸ் நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்கும் வரை அதன் அருகிலேயே தற்காலிக பஸ் நிலையம் நகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பஸ் நிலையத்தில் போதிய முன்னறிவிப்பின்றி பஸ்கள் நிற்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இங்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. பஸ்கள் வந்து செல்லும் நேரம் குறித்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

    இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே புதிய பஸ் நிலையத்தில் கடைகள் வைத்திருந்தவர்களுக்கு தற்காலிக பஸ் நிலையத்தில் கடைகள் ஒதுக்குவதிலும் குளறுபடி உள்ளதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    புதியதாக பஸ் நிலையம் கட்டும் பணிகள் ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என்ற நிலையில் தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும், பஸ்கள் நிற்பதை முறைப்படுத்தி வியாபாரிகளுக்கு சரியான முறையில் கடைகள் ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×