என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்காடு பாலாற்றில் உறை கிணறு குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
    X

    ஆற்காடு பாலாற்றில் குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகுவதை படத்தில் காணலாம்.

    ஆற்காடு பாலாற்றில் உறை கிணறு குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

    • ஆரணி பகுதியில் சப்ளை பாதிப்பு
    • உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பாலாற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அதிக அளவு குடிநீர் உறிஞ்சும் கிணறுகள் கட்டப்பட்டுள்ளது.

    செய்யாறு சாலையில் உள்ள பாலாற்றில் ஆரணி நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், குடிநீர் உறை கிணறு 2016-2017-ம் ஆண்டு கட்டப்பட்டது.

    இந்த கிணற்றில் இருந்து தினமும் ஆரணி நகராட்சி மற்றும் கிராம பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    இந்த உறை கிணற்றிலிருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. உடைந்த குழாய் வழியாக தினமும் அதிக அளவு தண்ணீர் வெளியேறி வீணாகுகிறது.

    இதனால் ஆரணி பகுதியில் பல கிராமங்க ளுக்கு குடிநீர் சப்ளை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி உடைந்த குழாயை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×