search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pongal"

    • நேற்றிரவு முதல் விடிய விடிய ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டு வருகிறார்கள்
    • கோவில் வளாகத்தை சுற்றி சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஆடித்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

    அதன்படி நடப்பாண்டு திருவிழா கடந்த மாதம்25-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள் தோறும் இரவு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் வைபவம் நேற்று தொடங்கியது. இதயைடுத்து நேற்று காலை முதலே கோவிலுக்கு வந்த பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து நேற்றிரவு முதல் விடிய விடிய ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டு வருகிறார்கள். இன்று காலையும் கோவிலில் குவிந்த ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்து வருகிறார்கள். இதையொட்டி கோவில் அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் அதன் வழியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும் குடும்பத்துடன் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்ததால் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மேலும் பக்தர்கள் நீண்ட தூரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் கூழ் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் டவுன் போலீஸ் கமிஷனர் வெங்கடேஷ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகி றார்கள். மேலும் கோவில் வளாகத்தை சுற்றி சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாநகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடந்து வருகிறது. அதன்படி சேலம் குகை மாரியம்மன், காளியம்மன், சேலம் சின்ன மாரியம்மன், தாதாகப்பட்டி மாரியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலபட்டரை மாரியம்மன், நஞ்சம்பட்டி மாரியம்மன், தாதம்பட்டி மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், காமராஜர் காலனி மாரியம்மன் உள்பட பல்வேறு மாரியம்மன் கோவில்களிலும் நேற்று முதல் பக்தர்கள் திரண்டு பொங்கல் வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

    தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம், அலகு குத்துதல், அக்னி மற்றும் பூக்கரகம் எடுத்தல், போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் முதுகில் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். சிலர் விமான அலகு குத்தி கோவிலுக்கு வந்தனர். இதனை பார்த்தபக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    ஆடிப்பண்டி கையையொட்டி சேலம் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆடிப்பண்டிகையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில்களில் அதிக அளவில் கூட்டம் அலை மோதியது. இதை யொட்டி கோவில்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    • வீரனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • பானையில் பொங்கல் வைத்து பொங்கி வர குலவையிட்டு வழிபாடு செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி அருகே தெற்குப்பொய்கைநல்லூரில் அமைந்துள்ள நொண்டிவீரன் கோவிலில் ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையொட்டி வீரனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    முன்னதாக விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பானையில் பொங்கல் வைத்து பொங்கி வர குலவையிட்டு வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர்.

    • வரகரிசி உணவுகளை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
    • கொள்ளு அதிக புரதச்சத்து நிறைந்தது.

    தேவையான பொருட்கள்:

    வரகு அரிசி - 200 கிராம்

    கொள்ளு - 50 கிராம்

    சீரகம் - 2 டீஸ்பூன்

    மிளகு - 15

    நெய் - 3 டீஸ்பூன்

    தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்

    தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு

    பச்சை மிளகாய் - ஒன்று

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொள்ளுப் பயறை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

    வரகரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும்.

    குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும்.

    அதனுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

    பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    அதனுடன் கொள்ளு, வரகு சேர்த்து குக்கரை மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும்.

    குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

    சத்தான சுவையான வரகு அரிசி கொள்ளு பொங்கல் ரெடி.

    குறிப்பு: விரும்பினால் முந்திரி சேர்க்கலாம். சாதாரண அரிசியைவிட சிறுதானியங்கள் இறுகும் தன்மையுடையதால் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கமுதியில் வைகாசி பொங்கல் விழா நடந்தது.
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பசும்பொன்

    கமுதியில் உள்ள வளையக்கம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா நடந்து வருகிறது. நேற்று ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். முன்னதாக சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் தலைசுமையாக பூஜை பெட்டியை சுமந்து கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

    மேலும் சாட்டையால் அடித்துக் கொண்டும் பலர் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • சேமியா, ரவையில் உப்புமா மட்டுமல்ல பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள்:

    சேமியா - 2 கப்

    ரவை - 1/2 கப்

    பாசிப்பருப்பு - 1/2 கப்

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    நெய் - தேவையான அளவு

    மிளகு - 1 தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    முந்திரி - 10

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    கறிவேப்பிலை

    செய்முறை:

    * வாணலியில் பாசிப்பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

    * அதே வாணலியில் சேமியாவையும், ரவையையும் தனித்தனியாகச் சூடு வரும்படியாக வறுத்துக்கொள்ளவும்.

    * பாசிப்பருப்பை நன்றாக கழுவி விட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் குழையாமல் வேக வைக்கவும்.

    * ஒரு வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை போட்டு தாளித்த பின் ஒரு பங்கு சேமியா & ரவைக்கு இரண்டு (அ) இரண்டேகால் பங்கு தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிவிட்டு மூடி வைக்கவும்.

    * பாசிப்பருப்பு ஏற்கனவே வெந்திருப்பதால் அதற்குத் தண்ணீர் ஊற்றவேண்டாம்.

    * தண்ணீர் கொதித்ததும் தேவையான உப்பு, வேக வைத்த பாசிப்பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.

    * மீண்டும் ஒரு கொதி வந்ததும் சேமியாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கட்டித் தட்டாமல் கிளறிவிட்டு அது வேகும் வரை மூடி வைக்கவும்.

    * சேமியா வெந்ததும் ரவையைச் சிறிதுசிறிதாகக் கொட்டி, கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

    * ரவை போட்டு நன்றாக கிளறிய பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும். இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும்.

    * ருசியான ரவா சேமியா பொங்கல் தயார்.

    * இதற்கு சாம்பார் அருமையான இணையாகும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ரவையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று ரவையில் இனிப்பு பொங்கல் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ரவை - 1/4 படி

    அச்சு வெல்லம் - 12

    நெய் - 5 தேக்கரண்டி

    முந்திரிப்பருப்பு - 12

    காய்ந்த திராட்சை - 12

    ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

    ஃபுட் கலர் (மஞ்சள்) - ஒரு சிட்டிகை

    செய்முறை:

    ரவைவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதி வந்ததும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றிய பின் நன்றாக வறுத்த ரவாவை சிறிது சிறிதாக கலந்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.

    ஃபுட் கலரை சிறிதளவு பாலில் கலந்து இந்த பொங்கலில் கலந்தால் சீராகக் கலந்துவிடும்.

    வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை நன்கு காய்ச்சி வடுகட்டி எடுத்து வைத்தக் கொள்ளவும்.

    இந்த வெல்லப் பாகை, ரவா கலவையுடன் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக சேர்ந்து வரும் வரை கிளறவும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய்யை சுட வைத்து முந்திரி, திராட்சை வறுத்து ரவா பொங்கலில் கலக்கவும்.

    ஏலக்காய் பொடி கலந்துவிட்டால் சுவையான ரவை இனிப்பு பொங்கல் தயார்.

    • சிங்கம்புணரி அருகே மகா மாரியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா நடந்தது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கட்டுக்குடிப்பட்டியில் செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காப்பு கட்டு தலுடன் சித்திரை பொங்கல் திருவிழா தொடங்கியது.

    ேநற்று மாமன்- மச்சான்கள் உறவு நீடிக்க வேண்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள்,பெண்கள் கலர் பொடி தூவியும், பூசியும், முட்டைகளை தலையில் உடைத்தும் மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.

    வெள்ளையம்மாள் சின்னக்கருப்பர் ஆலயத்தின் முன்பு பெண்கள் கும்மி யடித்தும், நேர்த்திகடன் வைத்த பக்தர்கள் பல்வேறு தெய்வங்கள் வேடமிட்டு சாமியாட்டம் ஆடினர். இங்கிருந்து இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு பெண்கள் கும்மியடித்து வழிபாடுகளை நிறை வேற்றினர்.

    அதைத்தொடர்ந்து செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கோவிலுக்கு பேத்தப்பன் வேடமிட்டவர் தலையில் கோழி இறகுகளை சொருகிய வாப்பெட்டி தலையில் கவிழ்த்தும், கோழி இறகு மீசையுடன் கையில் உலக்கையோடு அழைத்து வரப்பட்டார்.

    இந்த விநோத திருவிழா நிகழ்வால் திருஷ்டி கழியும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    • ரவையில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று சூப்பரான ரவா கார பொங்கல் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ரவா - 1 கப்

    வேக வைத்த பாசிப்பருப்பு - கால் கப்

    பெருங்காயப்பொடி - 1 சிட்டிகை

    மிளகு - 1 தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    பச்சைமிளகாய் - 1

    கறிவேப்பிலை - சிறிதளவு

    இஞ்சி - சிறிதளவு

    நெய் - 3 தேக்கரண்டி

    முந்திரிப்பருப்பு - 10

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    * இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    * அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதி வந்தவுடன், அதில் பெருங்காயப்பொடி, தேவையான அளவு உப்பு பொட்டுக் கொள்ளவும்.

    * அடுத்து இதில் நன்கு வறுத்த ரவாவை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறவும். கொதி வந்ததும் இளந்தீயில் வைத்து நன்றாக வேக விடவும்.

    * அடுத்து அதில் வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து கலக்கவும்.

    * இன்னொரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு வாசம் வரும் வரை தாளித்து பொங்கலில் கலந்து இறக்கினால் ரவா கார பொங்கல் தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சேமியாவில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று சேமியாவில் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்

    சேமியா - 2 கப்

    தண்ணீர் - 6 கப்

    பாசிப்பருப்பு - அரை கப்

    நெய் - 3 மேசைக்கரண்டி

    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

    முந்திரி - 20

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    காய்ந்த மிளகாய் - 4

    தனியளா - ஒரு தேக்கரண்டி

    சீரகம் - அரை தேக்கரண்டி

    மிளகு - 2 டீஸ்பூன்

    பட்டை - ஒன்று

    இலவங்கம் - 2

    ஏலக்காய் - 2

    செய்முறை:

    சேமியாவுடன் பாசிப்பருப்பை வெறும் கடாயில் தனித்தனியாக போட்டு வாசனை வரும் வரை வறுத்து தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 4 விசிலிற்கு வேக விடவும்.

    காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவை லேசாக வறுத்து பொடித்து கொள்ளவும்.

    கடாயை அப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மீதமுள்ள மசாலா பொருட்களை சேர்த்து தாளித்து முந்திரி சேர்த்து இறக்கவும்.

    வேகவைத்த சேமியாவில் உப்பு மற்றும் திரித்த பொடியைச் சேர்த்துக் கிளறவும்.

    தாளித்த பொருட்களை சேமியாவில் கொட்டி கிளறி சட்னியுடன் பரிமாறவும்.

    இப்போது சேமியா மசாலா பொங்கல் ரெடி.

    • கொள்ளுவில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ரெசிபியை சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள் :

    கொள்ளு - 50 கிராம்,

    பச்சரிசி - 100 கிராம்,

    மஞ்சள்தூள் - சிறிதளவு,

    பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க :

    நெய் - 2 ஸ்பூன்,

    மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,

    இஞ்சி - சிறிதளவு,

    பச்சை மிளகாய் - 2,

    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு.

    செய்முறை :

    கொள்ளுவை 10 மணி நேரம் ஊறவைக்கவும்

    இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொள்ளு, அரிசி இரண்டையும் நன்றாக கழுவி தனித்தனியே தளர வேகவிடவும்.

    வெந்த கொள்ளு, அரிசியை ஒன்றாக சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு மசிக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், இஞ்சி, ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளு கலவையில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கொள்ளு காரப் பொங்கல் ரெடி.

    • அவலில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • காலையில் அவசரமாக வேலைக்கு செல்வர்கள் இந்த ரெசிபி செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    அவல் - 1 கப்

    பாசிப்பருப்பு - கால் கப்

    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    எண்ணெய், நெய் - தேவைக்கு

    மிளகு, சீரகம் - சிறிதளவு

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி - 1 துண்டு

    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு

    உப்பு- தேவைக்கு

    செய்முறை :

    ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் பாசிப்பருப்பை போட்டு உதிரியாக வேக வைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கி பின்னர் அதனுடன் அவலை கொட்டி கிளறுங்கள்.

    மேலும் பாசிப்பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றுடன் போதுமான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.

    பொங்கல் பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    அவல் கார பொங்கல் ரெடி.

    • சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவு.
    • இந்த ரெசிபியை செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்:

    ஓட்ஸ் - 1 கப்

    பாசிப்பருப்பு - 1/2 கப்

    இஞ்சி - ஒரு சிறு துண்டு

    பெருங்காயத்தூள் - இரண்டு சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    நெய் - 1 அல்லது 2 டீஸ்பூன்

    மிளகு - 1/2 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 1

    கறிவேப்பிலை - சிறிது

    முந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)

    செய்முறை:

    வாணலியில் ஓட்ஸ், பாசிப்பருப்பை தனித்தனியாக போட்டு இலேசாக வறுத்தெடுக்கவும்.

    இஞ்சியின் தோலைச் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பச்சை மிளகாயை, இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.

    மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

    குக்கரில், வறுத்த ஓட்ஸ், பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு, மற்றும் 3 கப் தண்ணீரை விட்டு, மூடி, 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

    விசில் போனவுடன் குக்கரைத் திறந்து நன்றாக மசித்து விடவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, சீரகப் பொடியைப் போட்டு, அதை பொங்கலின் மேல் ஊற்றிக் கிளறி விடவும்.

    இப்போது சூப்பரான ஓட்ஸ் பொங்கல் ரெடி.

    ×