என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
நொண்டிவீரன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள்
- வீரனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- பானையில் பொங்கல் வைத்து பொங்கி வர குலவையிட்டு வழிபாடு செய்தனர்.
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி அருகே தெற்குப்பொய்கைநல்லூரில் அமைந்துள்ள நொண்டிவீரன் கோவிலில் ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையொட்டி வீரனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முன்னதாக விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பானையில் பொங்கல் வைத்து பொங்கி வர குலவையிட்டு வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர்.
Next Story






