search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pmmodi"

    • ராகுல் காந்தியின் நடைபயணம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது.
    • தமிழகத்தில் தி.மு.க.வின் தயவில்தான் காங்கிரஸ் உள்ளது.

    நாகர்கோவில்:

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் நேற்று அக்கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமந்திரம் விளக்கவுரை வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி இன்று கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய தேசிய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்க இருக்கிறார். அவருக்கு எங்களது வாழ்த்துக்கள். 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் பெரும்பான்மையான காலம் ராகுல்காந்தியின் குடும்பத்தினரே பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் இந்தியா எவற்றையெல்லாம் இழந்தது என்று பார்க்க வேண்டும். 

    மோடி பிரதமராக வந்த பிறகு கடந்த 8 ஆண்டுகளில் இந்தியா ஒரே நாடு, ஒரே மக்கள் என்று சொல்லும் நிலைக்கு வந்துள்ளது. நடைபயணம் செல்லும் போது ராகுல்காந்தி இதை பார்ப்பார் என்ற நம்பிக்கை பாஜகவிற்கு இருக்கிறது. இந்தியா உலகின் 5-வது பொருளாதார நாடாக உயர்ந்திருக்கிறது. நமது நாட்டு மக்கள் வறுமைக் கோட்டில் இருந்து மேலே வந்திருக்கிறார்கள். இதையெல்லாம் ராகுல் காந்தி நீண்ட, நெடிய நடைபயணத்தில் பார்க்க வேண்டும்.

    பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ள நாட்டின் உள்கட்டமைப்பை பார்க்க வேண்டும், இந்தியாவின் ஒற்றுமையை பார்க்க வேண்டும் காஷ்மீர் செல்லும் போது அந்த மாநிலம் எப்படி இணைந்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அவருடைய குடும்பத்தில் இருந்து வந்த 3 பிரதமர்கள் ஓட்டு அரசியலுக்கு இந்தியாவை எப்படி வேறு வேறு காலத்தில் பிரித்து வைத்திருந்தார்களோ? அவை அனைத்தையும் பிரதமர் மோடி உடைத்தெறிந்திருக்கிறார்.

    எப்போதும் இல்லாத ஒற்றுமை இப்போது இந்தியாவில் இருக்கிறது. 8 ஆண்டுகளில் இந்தியாவை எப்படி மோடி இணைத்துள்ளார் என்பதையெல்லாம் பார்க்கும் ராகுல் காந்தி, நடைபயணம் முடியும் போது நிச்சயமாக மோடியின் பக்தராக மாறுவார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

    ராகுல் காந்தியின் நடைபயணம் எந்த ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் திமுக.வின் தயவில் இருக்கிறார்கள். நடைபயணம் தொடங்கும் இடத்திலேயே காங்கிரஸ் கட்சிக்கு சக்தி இல்லை, வலுவில்லை. நடைபயணம் ஆரம்பிக்கிற இடத்திலேயே காங்கிரஸ் கட்சிக்கு சொந்தக் குரல் இல்லை. அப்படி இருக்கும்போது எந்த அரசியல் மாற்றத்தை கொண்டு வரப்போகிறார்கள். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    நான்காவது தலைமுறை அரசியலில் இருக்கும் ராகுல் காந்தியின் முன்னோர்கள் 65 ஆண்டுகளாக இந்தியாவால் முடியாது என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்து இருந்தாலும், அதை முறியடித்து சுயசார்பை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது நமது நாடு. மேலும் நமது நாடு விரைவில் உலகத்தின் விஸ்வகுரு என்ற அந்தஸ்தை அடையும். இதை கண்டு ராகுல்காந்தி பெருமை கொள்வார் என்று நம்புகிறோம்.

    கடைசியாக திமுக உட்பட உங்கள் அனைத்து கூட்டணி கட்சிகளையும் நீங்கள் சந்திக்கும்போது அவர்களது மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கும் வரியை குறைக்க கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் நீங்கள் உங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்ப வேண்டுமெனில் பாஜக ஆளும் மாநிலங்களில் மலிவான விலையில் நிரப்பிக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    • விக்ராந்த் போர்க்கப்பலை, கடற்படையில் இணைத்து வைக்கிறார்.
    • புதிய கடற்படை கொடியை பிரதமர் அறிமுகம் செய்கிறார்.

    நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி கேரளா மாநிலம் கொச்சிக்கு வருகை தருகிறார். அதன் அருகே உள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் அவதரித்த காலடி கிராமத்திற்கு பிரதமர் செல்கிறார்.

    செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 9:30 மணிக்கு கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில், முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை கடற்படையில் இணைத்து வைக்கிறார். '

    தொடர்ந்து புதிய கடற்படை கொடியை பிரதமர் அறிமுகப்படுத்த உள்ளார் இதன் பின்னர் மதியம் 1:30 மணிக்கு கர்நாடகா மாநிலம் மங்களூருவில் ரூ. 3800 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.  

    • நமது நாட்டைப் பற்றி தெளிவான பார்வை கொண்டிருந்தார்.
    • கல்வி, அறிவுசார் திறன், துணிச்சல் ஆகியவற்றில் தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறார்.

    ஸ்ரீஅரவிந்தரின் பிறந்தநாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். சிறந்த அறிவாளியான ஸ்ரீஅரவிந்தர், நமது நாட்டைப் பற்றி தெளிவான பார்வை கொண்டிருந்தார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 


    இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

    இன்று ஸ்ரீஅரவிந்தரின் ஜெயந்தி. புத்திகூர்மையுடன் அவர் நமது நாட்டைப்பற்றி தெளிவான பார்வையை கொண்டிருந்தார். அவருடைய கல்வி, அறிவுசார் திறன், துணிச்சல் ஆகியவற்றுடன் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கிறார். புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் அவருடன் தொடர்புள்ள இடங்களுக்கு நான் மேற்கொண்ட பயணம் குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளேன்.

    மனதின் குரல் நிகழ்ச்சி ஒன்றில், தன்னிறைவு மற்றும் கற்றல் தொடர்பான ஸ்ரீஅரவிந்தரின் சிந்தனைகள் பற்றி நான் எடுத்துரைத்துள்ளேன். இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
    • திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில், சீன வீராங்கனை வாங் ஷியை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதனையடுத்து பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது: பி.வி.சிந்து தனது முதல் சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். இதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் அவர் தனது விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றியை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது வெற்றி, மற்ற விளையாட்டு, வீரர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: தனது முதல் சிங்கப்பூர் ஓப்பன் வெற்றியைப் பதிவுசெய்துள்ள நமது ஊக்கமிகு இறகுப்பந்து வீராங்கனை பி.வி. சிந்து அவர்களுக்கு எனது பாராட்டுகள். இதே ஆற்றலோடும் உத்வேகத்தோடும் பிர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளிலும் விளையாட வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நான்காவது தொழிற்புரட்சியில் உலகிற்கு இந்தியா வழிகாட்டுகிறது.
    • ஆன்லைன் வசதி மூலம் பல காகிதப் பரிவர்த்தனைகளை இந்தியா நீக்கியுள்ளது.

    காந்தி நகர்:

    புதிய இந்தியாவுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி, டிஜிட்டல் இந்தியா வாரம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    டிஜிட்டல் இந்தியா பாஷினி, டிஜிட்டல் இந்தியா ஜெனிசிஸ் மற்றும் இந்தியா ஸ்டேக். குளோபல் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார் என்னுடைய திட்டம் மற்றும் என்னுடைய அடையாளம் என்ற இணைய தளத்தையும் மக்கள் பயன்பாட்டிற்கு பிரதமர் அர்ப்பணித்தார்.


    நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா இயக்கம், பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

    நான்காவது தொழிற்புரட்சியில் உலகிற்கு இந்தியா வழிகாட்டுவதாக பெருமையுடன் நாம் கூறமுடியும் என்று அவர் தெரிவித்தார். இதில் குஜராத் மாநிலம் முன்னணியில் உள்ளதாக பிரதமர் பாராட்டினார்.

    பிறப்பு சான்றிதழ் பெறுவது, ரசீது தொகை செலுத்துதல், மாணவர் சேர்க்கை, தேர்வு முடிவுகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் போன்றவற்றை ஆன் லைன் மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் இந்த சேவைகள் சாதாரண மக்களும் மிகவும் எளிதில் அணுகக் கூடியதாக மாற்றப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

    நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் கடந்த எட்டு ஆண்டுகளில் 23 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

    கொரோனா தொற்று காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும், ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை மூலம் 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 300 பில்லியன் டாலர் மதிப்பிற்குமேல் மின்னணு பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில் இந்தியா இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

    மத்திய அமைச்சரவையில் அதிமுக எம்பி வைத்திலிங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று பேசப்பட்ட நிலையில், அவர் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா தலைவர் அமித்ஷா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற சந்திப்பின்போது, அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் தேனி எம்.பி. ப.ரவீந்திரகுமார் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம். அல்லது இருவரில் ஒருவருக்கு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வைத்திலிங்கம் எம்பி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 
    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்ற 37 பேரால் பலன் இல்லை என்பது தவறான பிரசாரம் என்று டி.கே.ரெங்கராஜன் எம்.பி. கூறியுள்ளார்.
    திருச்சி:

    தட்சிண ரெயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யு.) என்ற தொழிற்சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் எம்.பி. கலந்து கொண்டார்.

    கூட்டம் முடிவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பயங்கரவாதம், தேசப்பற்று, பாகிஸ்தான் அச்சுறுத்தல் என பாரதீய ஜனதா செய்த பிரசாரத்தை நம்பி மக்கள் அக்கட்சிக்கு வாக்களித்து விட்டனர். அதனால் தான் பாராளுமன்ற தேர்தல் முடிவு எதிர்பார்க்காத வகையில் வந்து உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மற்ற மாநிலங்களில் இடதுசாரிகளுக்கு தோல்வி ஏற்பட்டு இருப்பது உண்மை தான். இது தேர்தல் ரீதியான தோல்விதான். இயக்க ரீதியான தோல்வி அல்ல. இயக்க நடவடிக்கைகள் மூலம் தேர்தல் தோல்வியை சரிகட்ட முடியும். 

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்ற 37 எம்.பி.க்களால் எந்த பலனும் கிடைக்காது என செய்யப்படும் பிரசாரம் தவறானது. இந்த எம்.பி.க்களால் தமிழக மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். தவறான பிரசாரம் செய்பவர்களுக்கு தான் பலன் கிடைக்காது.

    தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு வசதியாக கர்நாடக மாநில அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். தி.மு.க மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேச இருக்கிறோம். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற இன்னும் 25 ஆண்டுகள் ஆகலாம். காவிரி நதி நீர் பிரச்சினையை தீர்த்துவிட்டு தான் கோதாவரி இணைப்புக்கு முயற்சி எடுக்கவேண்டும் என்று பிரதமரை சந்திக்கும் போது வலியுறுத்த இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாராளுமன்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் வரும் 30-ம் தேதி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்கவுள்ள மோடி இன்றிரவு தனது தாயார் ஹீரா பென்னிடம் ஆசி பெற்றார்.
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தலில்  மாபெரும் வெற்றிபெற்று, குறிப்பாக குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற்ற பின்னர் முதன்முறையாக அகமதாபாத் வந்த பிரதமர் மோடிக்கு மக்கள் எழுச்சியான வரவேற்பு அளித்தனர்.

    கமதாபாத் அருகேயுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மோடி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். ரணத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

    அடுத்த பிரதமராக பதவியேற்க வருமாறு நேற்றிரவு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். அதற்காக உங்கள் அனைவரிடமும் ஆசிபெற நான் இன்று இங்கு வந்திருக்கிறேன் என குறிப்பிட்ட மோடி அகமதாபாத் நகரில் உள்ள பாஜகவின் குஜராத் தலைமை அலுவலகத்துக்கு வந்தபோது அங்கு திரண்டிருந்த பாஜகவினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். 

    தொண்டர்களின் வாழ்ததுக்களை ஏற்றுக்கொண்ட மோடி அவர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கைகளை அசைத்து, வணக்கம் தெரிவித்தார். பின்னர், காந்திநகர் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, தனது தாயார் ஹீரா பென்னிடம் ஆசி பெற்றார். 
    மோடி பதவி ஏற்பு விழாவில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியை பிடித்து உள்ளது.

    பா.ஜனதா கட்சி 303 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 4 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

    வருகிற 30-ந்தேதி (புதன் கிழமை) டெல்லியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் மோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    கடந்த முறை பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு ஏராளமான சார்க் நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். இந்த முறை உலக நாடுகளின் தலைவர்களை அழைக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    உலக நாடுகளுடன் இந்தியா இணக்கமாக இருப்பதைக் காட்டும் வகையிலும், ஜனநாயகத்தில் தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்துள்ளதை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் பதவி ஏற்பு நிகழ்ச்சி இருக்க வேண்டும் என பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தில் இருக்கும் பி-5 நாட்டு தலைவர்களை அழைக்க மோடி முடிவு செய்துள்ளார். அதே போல அண்டை நாடுகளான பாகிஸ்தான்- இலங்கை அதிபர்களையும் அழைக்க மோடி விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


    அதன்படி பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் முடிவு செய்த பின்னர். ஒரிரு நாட்களில் இது குறித்து அதி காரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க எந்தெந்த நாட்டு தலைவர்களை அழைப்பது என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை. பிரதமராக பதவி ஏற்ற பின்னர் அடுத்த மாதம் மோடி அரசுமுறை பயணமாக வெளிநாடு சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் பூடான், கிர்கிஸ்தான் நாட்டு தலைவர்களையும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று 16வது மக்களவையினை கலைக்க உத்தரவிட்டார்.
    டெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 349 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சரவை மற்றும் மக்களவை முடிவுக்கு வருவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதன் பின்னர்  தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி.

    பிரதமர் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், புதிய அரசு அமையும் வரை பிரதமராக நீடிக்குமாறு மோடியை கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில் 16வது மக்களவையை கலைக்குமாறு மத்திய அமைச்சரவை அளித்த தீர்மானத்தை ஏற்று, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று 16வது மக்களவையை கலைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். 
    இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் மோடி, வெளிநாடுகளுக்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    புது டெல்லி:

    இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கக் கூடிய, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்து முடிவுகளும் வெளியிடப்பட்டது. இதில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக இரண்டாவது முறையாக அமோக வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் பாஜக வரலாறு காணாத சிறப்பு பெற்றுள்ளது. இதையடுத்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி, வரும் 30ம் தேதி பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டது.



    இந்நிலையில் மோடி வெளிநாடுகள் செல்லும் பயண திட்டங்கள் குறித்து தற்போதே வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 13ம் தேதி கிரிகிஸ்தானில் நடக்கும் ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு, மற்றும் ஜூன் 28ம் தேதி ஜப்பானில் நடக்கவுள்ள ஜி 20 மாநாடு ஆகியவற்றில் மோடி கலந்துக் கொள்ளவுள்ளார்.

    ஆகஸ்ட் மாதம் - பிரான்ஸ், செப்டம்பர் மாதம் - ரஷ்யா மற்றும் அமெரிக்கா,  நவம்பர் மாதம் - தாய்லாந்து மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 
    மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு யாரும் மோடியை எதிர்க்க முடியாது என சிவசேனாவின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை தொடர்ந்து வசைபாடி வந்த சிவசேனா கட்சி தேர்தல் நெருங்கியதும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது. இந்த நிலையில் நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் பா.ஜனதா கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது. இதுகுறித்து கூட்டணி கட்சியான சிவசேனாவின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை வைத்து பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உருவாக்கிய மாய எதிர்ப்பலைக்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். தற்போது முழு நாடும் மோடி மயமாக மாறியுள்ளது. மோடியை யாரும் அசைக்க முடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு யாரும் மோடியை எதிர்க்க முடியாது என்பதை கூறியுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×