search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plastic"

    • பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
    • மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    தமிழ்நாட்டை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடைசெய்துள்ளது.

    மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் இடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் வனம் தன்னார்வ அமைப்பு மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியம் சார்பில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் பறை இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரமும், மஞ்சப்பையும் ெபாதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    • கரும்புச்சாறு உள்ளிட்ட பானங்களில் கெட்டுப்போன எலுமிச்சை பழங்களை பயன்படுத்துவதாக புகார் வந்தது.
    • 36 கடைகளில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இளநீர், கரும்புச்சாறு, கூழ், ஜூஸ் கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    கடைகளில் ஆய்வு

    இந்நிலையில் மாநகர பகுதியில் கோடைக்காலங்களில் விற்பனை செய்யப்படும் ஜுஸ், கரும்புச்சாறு, சர்பத் கடைகளில் தரமற்ற எலுமிச்சை பழங்கள், கெட்டுப்போன எலுமிச்சை பழங்களை பயன்படுத்து வதாகவும், அழுக்கடைந்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்து கின்றனர் எனவும் பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலர்களும் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தியிடம் புகார் கூறி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி உதவி கமிஷனர் வெங்கட்ராமன் வழிகாட்டுதலின்படி இன்று நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையிலான குழுவினர் டவுன் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    சுமார் 81 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 36 கடைகளில் தரமற்ற பொருட்கள் பயன்ப டுத்தப்ப ட்டது கண்டு பிடிக்கப்பட்டு அதன் உரிமை யாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    தொடர்ந்து அந்த கடைகளுக்கு ரூ.6,800 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த கடைகளில் அரசு உத்தரவை மீறி பயன்ப டுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகள் சுமார் 75 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

    • பயன்படுத்துவோர் கடைவீதிகள், தெருக்கள், தோட்டங்கள், வயல்வெ ளிகளில் வீசி செல்கின்றனர்.
    • கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியில் நெகிழிப்பைகள் அதிக அளவில் பயன்படுத்த ப்பட்டு வருகிறது. அதனை பயன்படுத்துவோர் கடைவீதிகள், தெருக்கள், தோட்டங்கள், வயல்வெ ளிகளில் வீசி செல்கின்றனர். இதனால் சுற்றுபுற சூழல் கெடுவதோடு மண் வளமும் பாதிக்கப்படுகிறது. கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

    நீர் நிலைகள் மாசுபடும் அடைகிறது. ஆகவே அதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தன்னார்வ அமைப்பினர் வெள்ளகோவில் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

    • 2000 காட்டன் துணி பைகள் பொது மக்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மணிரத்தினம் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    புதுச்சேரி:

    பிளாஸ்டிக் பயன்பா ட்டை தடுக்க வலியுறுத்தி துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி அனைத்து சமூக பேரமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்புகளின் சார்பில் சிவாஜி சிலை அருகில் மீனாட்சி கணேஷ் பொது சேவை இயக்கம் தயாரித்த 2000 காட்டன் துணி பைகள் பொது மக்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் கணபதி அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனைத்து சமூக பேரமைப்பின் கௌரவ தலைவர் புதுவை குமார் தலைவர் இளங்கோ ,செயலாளர் சசிகுமார் மற்றும் வில்லியனூர் ராணி, அறம் நிஷா செய்திருந்தனர்.

    உடன் காலாபட்டு தொகுதி தலைவர் மணிகண்டன் , வடக்கு ஒன்றியம் முன்னாள் செயலாளர் பாரதிராஜா , சமூக சேவகர் உடையார்பாளையம் மணிரத்தினம் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் அரசின் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு 1.1.2019 முதல் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மாநிலம் முழுவதும் தடைசெய்தது. இதனைத் தொடர்ந்து

    2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிபந்தனைகளுக்குட்பட்டு காலமுறைக் கடன்களுக்கு மட்டும் 50 சதவீத நிவாரணத் தொகையை அரசு அறிவித்திருந்தது.

    தற்போது பல்வேறு தொழில் அதிபர்கள், சங்கத்தி னர்களின் வேண்டு கோளுக்கி ணங்க மேற்கண்ட நிவாரணத்தொகையை வழங்குதில் மேலும் சில தளர்வுகளை அளித்து மார்ச் 2023-ல் திருத்திய அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

    இதன்படி இந்த தடைக்காலத்திற்கு முன்பு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் காலமுறைக் கடனாக பெற்றிருந்த நிலுவைத் தொகையில் 50 சதவீதத்தை அரசிடம் நிவாரணமாக பெறுவதற்கு மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டு கோள் விடுக்கப் பட்டுள்ளது.

    1.1.2019 அன்றுள்ள படி நடைமுறை மூலதன கடன் தொகையிலும் நிலுவையில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை நிவாரணமாக வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. மேற்கண்ட நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடிக்கப்பட்டிருந்தால் அந்த நிறுறுவனத்தின் உரிமையாளர் பெயரில் உள்ள தனிப்பட்ட வங்கி கணக்கில் நிவாரணத்தொகையை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    நிவா ரணம் வேண்டும் நிறுவனம் பங்குதாரர் நிறுவ னமாக இருந்தால் இதரப் பங்குதாரார்களின் தடை யின்மை சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் நிவாரணத் தொகையானது ரூ.50 லட்சத்திற்கு மிகாமல் அரசு வகுத்துள்ள நிபந்தனை களுக்குட்பட்டு வழங்கப்படும்.

    ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள் தடையினால் எந்திரங்களுக்கான காலமுறைக்கடன் தொகையில் மட்டும் நிவாரணம் பெற்ற நிறுவ னங்கள் இந்த சலுகையினை பயன்படுத்தி நடைமுறை மூலதன கடன் தொகைக்கும், 50 சதவீத தொகையை நிவாரணமாக பெற்றுக்கொள்ளலாம். இந்த அரசா ணையின்படி நிவாரணத்திற்கு 14.6.2023-ந்தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.

    கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையம், பொது மேலாளரை நேரிலோ அல்லது 90800 78933 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    • குத்தாலம் அரசு பள்ளியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பொது மக்களுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளியில் இயங்கும் தேசிய பசுமைப் படையின் சார்பாக பள்ளியைச் சுற்றியுள்ள குத்தாலம் மேலத்தெரு நடுத்தெரு கீழத்தெரு மற்றும் கழுங்கடித் தெரு ஆகிய பகுதிகளில் மக்களிடையே பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.இலா செல்லம்மாள் பேரணியை துவங்கி வைத்தார்.

    பள்ளியின் தேசிய பசுமைப் படையைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டு பிளாஸ்டிக் விழிப்புணர் குறித்த பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

    அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும் அங்குள்ள கடைகளுக்கும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    பேரணிக்கான ஏற்பாட்டினை பள்ளியின் தேசியப் பசுமை படையின் ஒருங்கிணைப்பாளர் ஐ.சந்தோஷ் காட்சன் ஐசக் ஆசிரியர் செய்திருந்தார்.

    • பரமத்திவேலூரில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்ப டுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
    • அதிக அளவில் கடை உரிமையாளர் விற்பனை செய்து வருவதாக நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிக ளுக்கு, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ரகசிய தகவல் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்-கரூர் செல்லும் சாலையில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், கவர்கள், கேரி பேக்குகளை மொத்த விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்ப டுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பைகளை, அதிக அளவில் கடை உரிமையாளர் விற்பனை செய்து வருவதாக நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிக ளுக்கு, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ரகசிய தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் அடிப்படையில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் மணிவண்ணன் தலைமை யில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் சந்தானகிருஷ்ணன், வேலூர் பேரூராட்சி செயல் அலுவ லர் செல்வக்குமார், துப்புரவு ஆய்வா ளர் குருசாமி மற்றும் துப்புரவு பணியாளர்கள் கொண்ட குழுவி னர் நேற்று மாலை பரமத்திவேலூர் 4 ரோடு அருகே உள்ள வெங்க டசாமி (வயது 55) என்பவருக்கு சொந்த மான கடையில் திடீரென புகுந்து சோதனை மேற்கொண்ட னர்.

    இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலி தீன் கவர்கள், கேரி பேக்கு கள், பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள 3 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடை உரிமையாளர் வெங்க டசாமிக்கு ரூ.25 அபராதம் விதிக்கப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பைகள், கப்பு கள் பேரூராட்சிக்கு சொந்தமான லாரியில் ஏற்றப்பட்டு பாது காப்பான இடத்தில் வைக்கப் பட்டுள்ளது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், மீண்டும் விற்பனை செய்தால் கடை உரி மையாளருக்கு 2-வது தவணை யாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    • 40 கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் இருக்கிறதா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 8 கடைகளிலிருந்து 1215 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    தமிழக அரசு சுற்றுச்சூ ழலுக்கு மாசு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும் தடை விதிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வோருக்கு அபராதமும் விதிக்க உத்தரவிட்டுள்ளது.

    அதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி லாவண்யா, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத் உள்ளிட்டோர் நேற்று மேட்டுப்பாளையத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக கோவை சாலை, அண்ணாஜி ராவ் ரோடு, மார்க்கெட், ஊட்டி சாலைகளில் செயல்பட்டு வரும் 40 கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் இருக்கிறதா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது,தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர் கள்,பேப்பர் கப்புகள்,கேரி பேக்குகள், பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தட்டுகள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்த 8 கடைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் என மொத்தமாக ரூ.80 ஆயிரம் விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.மேலும்,அக்கடைகளில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 1215 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    அதிகாரிகள் ஆய்வி ன்போது மேட்டுப்பாளையம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன், சுகாதார மேற்பார்வை யாளர் மணி மற்றும் நகராட்சி ஊழியர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மேட்டுப்பா ளையம் நகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை கடை உரிமையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து பேசிய மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம்.மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தங்களது அதிரடி நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

    • ஆக்கிரமிப்பில் உள்ள நடைமேடை கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரி–களுக்கு உத்தரவிட்டார்.
    • பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் காந்திஜி சாலை, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் அதிக போக்குவரத்து நிறைந்த பகுதிகள் ஆகும்.

    இந்நிலையில், நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து காவல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆணையர் சரவணகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்ேபாது அந்த பகுதிகளில் ஆக்கிரமிப்பில் உள்ள நடைமேடை கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரி–களுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து, அவர் உடன் வந்த அதிகாரிகள் அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்தினர்.

    மேலும் நடைமேடை கடைகளில் பயன்படுத்திய பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் மீண்டும் இந்த பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    ஆய்வின்போது மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மோகனா, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • பிளாஸ்டிக் தவிர்ப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • கேசா இளம்படை அமைப்பின் எதிர்கால திட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஜீவலதா பேசினார்.

    ராஜபாளையம்

    ஜெ.சி.ஜ. ராஜபாளையம் கேசா டி மிர் மற்றும் புதுயுகத்தின் கேசா இளம்படை இணைந்து பிளாஸ்டிக் தவிர்ப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருவள்ளுவர் நகரில் நடத்தியது. கேசா இளம்படையின் துணை ஒருங்கிணைப்பாளர் ரேஷ்மா பேசினார். சிறப்பு விருந்தினர்களாக எல்.ஜ.சி. காப்பீடு ஆலோசகர் திருமுருகன், திருவள்ளுவர் நகர மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அங்குராஜ், 2-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் வள்ளிமயில் ராஜா, யூனியன் வைஸ் சேர்மன் துரைகற்பகராஜ் ஆகியோர் பேசினர்.

    மாணவி சிவதர்ஷினி வரவேற்றார். பிளாஸ்டிக் தவிர்ப்போம் என்ற தலைப்பில் மாணவன் நரேஷ், பிளாஸ்டிக்கை குறைப்போம் என்ற தலைப்பில் சிவதர்ஷினியும், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வோம் என்ற தலைப்பில், காவ்ய தர்ஷினியும் பேசினர். கேசா இளம்படை அமைப்பின் எதிர்கால திட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஜீவலதா பேசினார். துணை ஒருங்கிணைப்பாளர் ரேஷ்மா வாழ்த்துரை வழங்கினார். மாணவி ஹாஜிரா பர்ஹின் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெ.சி.ஜ ராஜபாளையம் கேசா டி மிர் தலைவர் பானுபிரியா, மாலா, அழகுராஜா, சத்யா ஆகியோர் பள்ளியின் தாளாளர் திருப்பதி செல்வன், முதுநிலை முதல்வர் அருணாதேவி வழிகாட்டுதலின் படி செய்திருந்தனர்.

    • சணல்பைகள், பனியன்துணி மேட்டுகள், மஞ்சப்பை, பாக்குமட்டை தயாரிப்பது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது
    • மகளிர் கூட்டமைப்பினர் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நகரங்களின் தூய்மை மக்கள் இயக்கம் திட்டத்தின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமளாபுரம் பகுதி அளவிலான மகளிர் கூட்டமைப்பு மூலம் மகளி ர்சுய உதவிக்குழுவி னருக்கு சணல்பைகள், பனியன்துணி மேட்டுகள், மஞ்சப்பைகள், வயர்கூடைகள் ஆகியவற்றை உபயோக ப்படுத்த க்கோரியும், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் சணல்பைகள், பனியன்துணி மேட்டுகள், மஞ்சப்பை, பாக்குமட்டை தயாரிப்பது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் சாமளாபுரம் பகுதி அளவி லான மகளிர் கூட்டமைப்பி னர் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு மகளிர் குழுவினருக்கு விழி ப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழ னிச்சாமி, துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தகுமார், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் மைதிலிபிரபு, பூங்கொடி சண்முகம், பெரிய சாமி, ஒருங்கிணைப்பாளர் பாக்கியம்மாள் ,சாமளாபுரம் பகுதி அளவிலான கூட்டமைப்பின் செயலாளர் ரம்யா, சாமளாபுரம் பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 421 மனுக்கள் பெறப்பட்டது.
    • நெகிழி மாசில்லா சுற்றுச்சூழல் மற்றும் பொருட்கள் விழிப்புணர்வு சுவரொட்டியை வெளியிட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 421 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதா ரருக்குதெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து அவர், வருவாய் துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை 2 நபர்களுக்கும், கடந்த ஆண்டு தேர் தீ விபத்தில் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகள் மற்றும் புதிய கான்கிரீட் வீடு கட்டுவதற்கான ஆணைகளை 3 நபர்களுக்கு வழங்கினார்.

    பின்னர் நெகிழி மாசில்லா சுற்றுச்சூழல் மற்றும் பொருட்கள் விழிப்புணர்வு சுவரொட்டியினை வெளியிட்டார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×