search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manjapai"

    • கடைகள் மற்றும் உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் மீண்டும் மஞ்சப்பையினை கொண்டுவர விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
    • கூட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் பொருட்டு விரிவான செயல் திட்டம் ஒன்று வெளியிடப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையாணையினை ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கு உட்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் முறையாக அமல்படுத்திட கடைகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களுக்கு தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் அலுவலகங்களில் கூட்டம் நடத்த வேண்டும்.

    தங்களது உள்ளாட்சி அமைப்பின் எல்கைக்குட்பட்ட கடைகள். உணவகங்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களிடம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையாணையினை முறையாக அமல்படுத்திட கேட்டும், கடைகள் மற்றும் உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் மீண்டும் மஞ்சப்பையினை கொண்டுவர உரிய விழிப்புணர்வு ஏற்ப டுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வருகிற 30-ந் தேதிக்குள் ஒப்படைப்பு செய்யக்கேட்டு கடை மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு அறிவிப்பு வெளியிடவும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை யாணையை அனைத்து பொதுமக்கள், கடை மற்றும் உணவக உரிமையாளர்களிடம் விளக்க வேண்டும், வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் அவை பறிமுதல் செய்யப்படும் எனவும் பிப்ரவரி 1-ந்தேதி முதல் ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதத்துடன் அவை பறிமுதல் செய்யப்படும் என்ற அறிவிப்பினை வருகிற 31-ந் தேதிக்குள் வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், மேற்படி செயல்திட்டங்களை தங்களது உள்ளாட்சி அமைப்பின் பகுதிக்குள் முறை யாக செயல்படுத்திடவும் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து சிவகிரி பேரூராட்சிமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். செயல் அலுவலர் வெங்கடகோபு, துணை தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அய்யப்பன், சீதாராமன், குருசாமி, ரவிந்திரநாத் பாரதி, குமார், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு தொடர்பாக விரிவாக எடுத்துரை க்கப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள், தலைமை எழுத்தர் தங்கராஜ், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
    • மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    தமிழ்நாட்டை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடைசெய்துள்ளது.

    மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் இடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் வனம் தன்னார்வ அமைப்பு மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியம் சார்பில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் பறை இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரமும், மஞ்சப்பையும் ெபாதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    • பொது மக்கள் துணிப்பைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை" திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • ரூ.10 விலையில் பொது மக்கள் மஞ்சள் பைகளை பெற்றனர்.

    திருப்பூர் :

    பொது மக்கள் துணிப்பை களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை" திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நெகிழி இல்லா திருப்பூர், மாநகராட்சியாக மாற்றிட திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் மஞ்சப்பை இயந்திரம் அமைக்கப்பட்டது. இதனை இன்று திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஜி கிரியப்பனவர், துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம், தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு.நாகராசன், 22வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், வாலிபாளையம் பகுதி செயலாளர் மு.க. உசேன் மற்றும் நிர்வாகிகள் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், திறந்து வைத்த மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தின்

    மூலம் ரூ.10 விலையில் பொது மக்கள் மஞ்சள் பைகளை பெற்றனர்.இவ்வியந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 300 பைகள் நிரப்பப்படும். பைகள் தீரும் பட்சத்தில் உடனடியாக இயந்திரத்தில் பைகள் நிரப்பப்படும். ரூ.10 காசு அல்லது நோட்டுகளாக இந்த இயந்திரத்தில் செலுத்தி பொதுமக்கள் மஞ்சள் பைகளை பெறலாம்.

    • முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3-ம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.
    • வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன்வந்துள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெ டுத்து செல்லும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் 2022-23-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவையில மஞ்சப்பை விருதுகளை அறிவித்தார்.

    இது ஒருமுறைபயன்ப டுத்தும் பிளாஸ்டிக் கேரிபேக்குகள் மற்றும் இவற்றிற்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்கு விக்கவும், தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் களுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூ ழலுக்கு உகந்தமாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.

    முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3-ம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.

    இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டு ப்பாட்டு வாரியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியான திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன்வந்துள்ளது.

    இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளத்தில் (https://Tiruvarur.nic.in) கிடைக்கும். விண்ணப்பபடிவத்தில் தனிநபர், நிறுவன தலைவர் முறையாக கையொப்பமிடவேண்டும்.

    கையொப்பமிட்ட பிரதிகள் 2 மற்றும் குறுவட்டு பிரதிகள் இரண்டை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 01.05.2023 ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மீண்டும் மஞ்சப்பை , துணிபைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
    • சிறிய கடைகளுக்கு ரூ.1000 அபராதம் முதல் தவணையாக விதிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் படி தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற நிலையை எட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இன்று புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி நெகிழி இல்லா பகுதி என அறிவித்தார்.

    அதோடு மாணவ -மாணவிகளுக்கு சாக்குகள் வழங்கி அதில் பெரிய கோவில் பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் இருந்தால் அதனை சேகரித்து பாதுகாப்பான இடத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மீண்டும் மஞ்சப்பை , துணிபைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கும் போது துணி பைகளை கொண்டு செல்ல வேண்டும் என்று மாணவ- மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    புகழ் வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிக்கப்பட்டது. தஞ்சை சரபோஜி மார்க்கெட்டில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் தொடங்கி வைக்கப்பட்டது.

    அதுபோல் தஞ்சை பெரிய கோவிலிலும் உரிய அனுமதி பெற்று மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பிளாஸ்டிக் பயன்படுத்தும் பெரிய கடைகளுக்கு ரூ.25000, துணிக்கடை போன்ற கடைகளுக்கு ரூ.10000 , சிறிய கடைகளுக்கு ரூ.1000 அபராதம் முதல் தவணையாக விதிக்கப்படும்.

    மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் . பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல், மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகாமல் எளிதாக செல்வதற்காக போக்குவரத்து துறையினர் பஸ் செல்லக்கூடிய வழித்தடங்களையும் தொடர்ந்து ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
    • பெரும்பாலும் அனைத்து பணிகளுக்கும் இருக்கைகள் கிடைக்கும் வகையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நீலாம்பூர்:

    தீபாவளி பண்டிகையை ஒட்டி சூலூர் புறநகர் பஸ் நிலையத்திலிருந்து திருச்சி, கரூர் பகுதிகளுக்கு 130 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    தீபாவளிக்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் சொந்த ஊருக்கு செல்வதற்காக பொதுமக்கள் பஸ் நிலையங்களை நாடி வருகின்றனர்.

    அவர்கள் எளிதாக சொந்த ஊருக்கு செல்வதற்காக பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகாமல் எளிதாக செல்வதற்காக போக்குவரத்து துறையினர் பஸ் செல்லக்கூடிய வழித்தடங்களையும் தொடர்ந்து ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

    பெரும்பாலும் அனைத்து பணிகளுக்கும் இருக்கைகள் கிடைக்கும் வகையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பயணிகள் கூறும்போது, சிரமம் இன்றி பஸ்கள் கிடைக்கிறது. மேலும் சிங்காநல்லூர் பஸ் நிலையம் செல்லாமல் புறநகரில் இருந்து செல்வது போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்வதற்கு எதுவாக இருக்கிறது என்றனர்.

    இதற்கிடையே முதல்-அமைச்சரின் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சூலூரில் இருந்து திருச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் பயணித்த பயணிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மஞ்சப்பை வழங்கப்பட்டது. இது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    • நூல் நிலையம் மற்றும் சேவை மையம் கட்டிடங்கள் மற்றும் வளாகங்களிலும் மேற்கூரைகளிலும் தூய்மை பணி நடைபெற்றது.
    • தற்பொழுது தேவைப்படும் நீரை விட 2 மடங்கு வேளாண்மைக்கும், 7 மடங்கு தொழிற்சாலைகளுக்கும் தேவைப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் தூய்மை மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி தூய்மை மற்றும் துப்புரவு பணியாளர்களை கொண்டு ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர், துணை சுகாதார மையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, நூல் நிலையம் மற்றும் சேவை மையம் கட்டிடங்கள் மற்றும் வளாகங்களிலும் மேற்கூரைகளிலும் தூய்மை பணி நடைபெற்றது

    ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் திடக்கழிவு மேலாண்மை மக்கும் குப்பை மக்கா குப்பை தரம் பிரித்து அளிக்க கேட்டுக் கொண்டதோடு சுற்றுப்புறத் தூய்மை உடல் நலக்கு நன்மை பயக்கும் திறந்த நிலையில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக முற்றிலும் மாற வேண்டும்.

    ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையை பயன்படுத்த வேண்டும். மேலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும். 2025ம் ஆண்டில் தற்பொழுது தேவைப்படும் நீரை விட 2 மடங்கு வேளாண்மைக்கும், 7 மடங்கு தொழிற்சாலைகளுக்கும் தேவைப்படும்

    இதனால் ஐம்பது சதவீதம் நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.ஆகவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    ஒவ்வொருவரும் கடைக்கு செல்லும் பொழுது தமிழக முதல்அமைச்சரின் உத்தரவுபடி மஞ்சப்பை எடுத்துச் செல்ல வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் கேரி பேக்கை முற்றிலும் தடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    துணைத் தலைவர் பாக்கியராஜ், செயலர் புவனேஸ்வரன், சமூக ஆர்வலர்கள் ரவிச்சந்திரன், முத்துக்குமார், அப்பு, வார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது பதிலாக மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுரைப்படி மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகி றது. அதன்படி மதுக்கூர் அருகே ஆலத்தூரில் ஊராட்சி மன்றதலைவர் ஜோதிலட்சுமி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

    இதில் 250- க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள், ஊராட்சிசெய லாளர், வட்டார ஒருங்கி ணைப்பாளர், சுகாதார ஊக்குனர்,தூய்மை காவல ர்கள் கலந்து கொண்டு பிளா ஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது, மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்று விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். மேலும் பட்டுக்கோட்டை விதைகள் அமைப்புசார்பில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்ப ட்டது.

    ×