search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petitions"

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 22 மனுக்கள் பெறப்பட்டன.
    • 51 நபர்களுக்கு ரூ.6 லட்சத்து 58 ஆயிரத்து 970 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்க ளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார். இதில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். மொத்தம் 22 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    மேலும், முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் 51 நபர்களுக்கு ரூ.6 லட்சத்து 58 ஆயிரத்து 970 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட முப்படைவீரர் வாரிய உப தலைவர் மேஜர் பாலகிருஷ்ணன் (ஓய்வு), மாவட்ட அலுவலர்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மேஜர் சரவணன் (ஓய்வு) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 435 மனுக்கள் பெறப்பட்டது.
    • மனுக்கள் மீதான விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 435 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து அவர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான நிதி உதவி 15 நபர்களுக்கு தலா ரூ.17000-க்கான காசோலையினை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , வருவாய் அலுவலர் (பொ) செந்தில்குமாரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.
    • வீடு இல்லாதவர்கள் வீடு கேட்டு, முதியோர் பென்சன் உட்பட அடிப்படை வசதிகளை கேட்டு மனு கொடுத்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் கிராம பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது .

    சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சியில் நடந்த சிறப்பு முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகுமாரன் தலைமை ஏற்று கிராம மக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டார். இதில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி, தோட்டக் கலை மாரிச்செல்வம், ஊராட்சி செயலாளர் கதிரேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கருப்பட்டி ஊராட்சியில் தலைவர் அம்பிகா மனுக்கள் பெற்றுக் கொண்டார். கிராம நிர்வாக அலுவலர் பழனி, துணைத்தலைவர் சித்ராதேவி, ஊராட்சி செயலாளர் முனியாண்டி மற்றும் வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    இரும்பாடி ஊராட்சியில் தலைவர் ஈஸ்வரி பண்ணை செல்வம் மனுக்களை பெற்றுக் கொண்டார். துணைத்தலைவர் பிரியா சேகர், ஊராட்சி செயலாளர் காசிலிங்கம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தென்கரை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா ஐயப்பன் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டார் துணைத்தலைவர் கிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் முனியராஜ். கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ், கால்நடை ஆய்வாளர் ஜெயராமச்சந்தி ரன் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் கேபிள் ராஜா முன்னிலை வகித்தார். பின்னர் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.

    வாடிப்பட்டி யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சை மணி, ஊராட்சி செயலாளர் மனோபாரதி, கிராம நிர்வாக அலுவலர் பிரபாக ரன் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    மன்னாடிமங்கலம் ஊராட்சியில் தலைவர் பவுன் முருகன், துணைத் தலைவர் பாக்கியம் செல்வம், ஊராட்சி செயலா ளர் திருச்செந்தில் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.

    காடுபட்டி ஊராட்சியில் தலைவர் ஆனந்தன், ஊராட்சி செயலாளர் ஒய்யனன் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.

    இதேபோல் மேலக்கால், திருவேடகம், நெடுங்குளம், திருவாளவாயநல்லூர், சித்தாலங்குடி, சி.புதூர், ரிஷபம், குருவித்துறை ஆகிய ஊர்களிலும் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.

    இந்த முகாமில் வீடு இல்லாதவர்கள் வீடு கேட்டு, முதியோர் பென்சன், குடிநீர் குழாய் இணைப்பு உட்பட அடிப்படை வசதிகளை கேட்டு கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் மனு கொடுத்தனர்.

    • மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு, விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது
    • முகாம் அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்தது.

    அரியலூர்:

    போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பொதுமக்களிடம் இருந்து 17 மனுக்களை பெற்று விசாரித்தார். மேலும் அவர் மனுதாரர்களின் குறைகளை கேட்டு, அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு, விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



    • ஆதார் கார்டு, இலவச வீட்டு மனை போன்ற பணிகளுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகை புரிகின்றனர்.
    • பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகத்தில் ஆதார் கார்டு, இலவச வீட்டு மனை போன்ற பணிகளுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகை புரிகின்றனர்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுத 50க்கும் மேற்பட்டோர் மனுக்களை எழுதி தருகின்றனர். இந்த மனுவிற்கு 50 முதல் 100 ரூபாய் வரை பொதுமக்களிடம் கட்டணம் வாங்குகின்றனர். சிலர் பொதுமக்களுடைய பணி வேலைகளை செய்து தருவதாக கூறி அதிக பணம் பெற்று விடுகின்றனர்.

    இவர்கள் மத்தியில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சண்முகவேல்(வயது 76) என்பவர் திருப்பூரில் தங்கி திருப்பூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    தனக்கு அருகில் உள்ள ஜெராக்ஸ் கடையினர் மனு எழுத பேப்பர்களை இலவசமாக தருவதாகவும் மனு எழுத வருபவர்கள் தேநீர் அருந்த ரூ.10, ரூ.20 வலுக்கட்டாயமாக தருவதாக கூறுகிறார். இலவசமாக மனு எழுதி கொடுக்கும் சண்முகவேலின் சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • முகாம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.
    • போலீசார் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றனர்.

    பெரம்பலூர் :

    போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில், போலீசார் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றனர். இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 10 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம், என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

    • முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • மனுக்கள் பெறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

    தையல் எந்திரம் வேண்டி மனு அளித்த மனுதாரர்களின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து 2 பயனாளிகளுக்கு மாவட்ட சமூல நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் இலவச தையல் எந்திரங் களை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை ஆட்சியர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக் கழுவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வித்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கரூரில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக கலெக்டரிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை மனு அளித்தார்
    • நடவடிக்கை இல்லை என்கின்ற பட்சத்தில் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்றார்

    கரூர்,

    முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபு சங்கரை சந்தித்து, மனு அளித்தார். அப்போது, அமராவதி அணையில் 64 அடி உயரம் தண்ணீர் இருக்கிறது. குடிநீர் தேவைக்காக கடைமடை வரை தண்ணீரை திறக்க வேண்டும், 60 அடி தண்ணீர் இருந்தாலே திறக்கலாம் என விதி இருக்கிறது. தற்போது 64 அடி தண்ணீர் இருப்பு இருப்பதால், குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க வேண்டும்.

    அமராவதி ஆற்றின் துணை ஆறான குடகனாற்றில் வரும் கழிவு நீரில் 3,500 டி.டி.எஸ். உப்புத் தன்மை கலந்து வருவதால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கழிவு நீரை ஆற்றில் கலக்கும் நிறுவனத்தை கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கரூரிலிருந்து கோவை மற்றும் ஈரோடு சாலைகள் பிரியும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வித்தியாசமான முறையில் ஸ்பீடு பிரேக் போடப்பட்டுள்ளது. அதில் வயதானவர்கள், பெண்கள் ஏறி இறங்கும் போது விபத்து ஏற்படுகிறது.

    அதை அப்புறப்படுத்தி விட்டு தேசிய நெடுஞ்சாலையின் விதிகளுக்கு உட்பட்டு வேகத்தடை அமைக்க வேண்டும். தன்னுடைய டிரஸ்ட் சார்பில் வைக்கப்பட்டுள்ள மரங்களுக்கு தண்ணீர் விட்டு வளர்த்து வருகிறோம். மாநகராட்சி அதிகாரிகள் 3 முறை அதில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை அகற்றுவது, தாரை ஊற்றி மரங்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவற்றை தடுக்க வேண்டும். ஆண்டாங்கோவில் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி குப்பை கிடங்கில் மாதம் 10 ஆயிரம் செலுத்தி குப்பை கிடங்கில் கொட்டி வருகிறோம். அதனை கொட்ட அனுமதிக்காததால் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு, எரியூட்டும் நிலை உள்ளது. இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு மனு அளித்துள்ளார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் இருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை இல்லை என்கின்ற பட்சத்தில் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்றார். மேலும், கரூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம், பொது கூட்டம் நடத்த கேட்ட இடத்திக் அனுமதி தருவது இல்லை. நாம் கேட்கும் இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் நடத்தச் சொல்லி அலைக்கழிப்பதாகவும், ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றே போராட்டங்கள் நடத்தக் கூடிய சூழ்நிலை உள்ளது என்றார். இந்நிகழ்வின் போது மாவட்ட அவைத் தலைவர் திருவிகா, ஆலம் தங்கராஜ், கரூர் மத்திய தெற்கு பகுதி கழக செயலாளர் சேரன் பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்ைக மனுக்களை பெற்றார்.

    இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திற னாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    இதில் தையல் எந்திரம் வேண்டி மனு அளித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து பயனாளிக்கு மாவட்ட சமூல நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் இலவச தையல் எந்திரத்தை கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வித்யா உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலில் 16 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.
    • வேட்புமனுக்கள் 12-ந்தேதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 16 நபர்கள், 4 நக ராட்சிகளின் வார்டு உறுப்பி னர்கள் 117 நபர்கள் மற்றும் 11 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 167 நபர்கள் ஆக மொத்தம் 300 பேர் வாக்களிக்க உள்ளனர்.

    இந்த வாக்காளர்களில் 9 மாவட்ட ஊராட்சி உறுப்பி னர்களும், 3 நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பி னர்களும் தேர்ந்தெடுக்கப் படுவர்.

    வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று (10-ந்தேதி) வரை மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களில் இருந்து 9 வேட்பு மனுக்களும், பேரூ ராட்சி மற்றும் நகராட்சி உறுப்பினர்களிடமிருந்து இருந்து 6 வேட்பு மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இந்த வேட்பு மனுக்கள் 12-ந்தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான மனுக்களை 14-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 14-ந் தேதிக்குள் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் வழங்கலாம்.

    வருகிற 23-ந்தேதி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெறும். அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

    புதிதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பி னர்கள் 28-ந்தேதி முதல் உள்ளாட்சி அமைப்பின் பதவி காலம் முடியும் வரை பதவி வகிப்பார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிலங்கள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
    • வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை பெறுவதற்கு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் :

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததன் தொடர்ச்சியாக, பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று தீர்வு காண வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தற்போது திருச்சியில் எண் 89, ராஜாராம் சாலை, கே.கே.நகர் என்ற முகவரியில் உள்ள வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை பெறுவதற்கு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

    வீட்டு வசதி வாரியத்தால் வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் ஏதேனும் கருத்து, கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பினால், அலுவலக வேலை நாட்களில் இந்த பெட்டியில் தங்கள் மனுக்களை வருகிற 30-ந்தேதி வரை அளிக்கலாம். கோரிக்கை மனுக்களின் மீது உரிய தீர்வு காணப்பட்டு விளக்கம் அளிக்கப்படும் என்று வீட்டு வசதி வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் முதல்-அமைச்சரின் முன்னெடுப்பு திட்டம் மூலம் மனு செய்து பயன்பெறலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    தலைமை செயலகத்தில் இருந்தே மனுக்கள் விபரத்தை கண்காணிக்க முடியும்.

    திருப்பூர்:

    தமிழக அரசின் வருவாய்த்துறை சார்பில், மாவட்டம் தோறும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ஜூன் மாதத்துக்கு முன்னதாக பசலி ஆண்டு கணக்குகளை சரிபார்த்து ஒப்புதல் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வருவாய் கிராமத்தை சேர்ந்த மக்கள் அந்தந்த நாட்களில், ஜமாபந்தி அலுவலரிடம் மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் பெறப்படும் மனுக்கள் விபரத்தை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து உரிய அதிகாரிகள் வாயிலாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஜமாபந்தி முகாமில், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுக்கலாம். அந்த மனு மீது விரைந்து நடவடிக்கை எடுத்து நிறைவு நாளில் சான்றிதழ் அல்லது நல உதவி வழங்கப்படும். மக்கள் அளிக்கும் மனுக்கள் விவரத்தை புதிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, வருவாய்த்துறை கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது.

    மனுக்கள் விவரத்தையும் அதன் மீதான நடவடிக்கை விவரத்தையும் பதிவு செய்யப்படும். தமிழகத்தில் எந்த தாலுகாவாக இருந்தாலும் தலைமை செயலகத்தில் இருந்தே மனுக்கள் விபரத்தை கண்காணிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×