முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது கவனம் செலுத்த வேண்டு-கலெக்டர்

முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். மனுக்கள் பெறப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

தையல் எந்திரம் வேண்டி மனு அளித்த மனுதாரர்களின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து 2 பயனாளிகளுக்கு மாவட்ட சமூல நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் இலவச தையல் எந்திரங் களை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை ஆட்சியர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக் கழுவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வித்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com