search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனிப்பிரிவு"

    • நிலுவையில் உள்ள வழக்குகளின் கோப்பு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • விழிப்புணர்வு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும் என போலீசாரிடம் அறிவுறு த்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் உள்ள பொது நாட்குறிப்புகள், வழக்கு சுற்று பதிவேடு, 7 ஆண்டுகள் நிலுவையில் உள்ள வழக்குகளின் கோப்பு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள், பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள், போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உள்ளி ட்டவற்றை மேற்கொள்ள வேண்டும் என போலீசாரிடம் அறிவுறு த்தினார். முன்னதாக தமிழ்நா டு காவல்துறை சார்பில் தியாகதுருகம் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள பல் பொருள் அங்காடியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா, நிலைய எழுத்தர் சீனிவாசன், தனிப்பிரிவு போலீசார் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்ைக மனுக்களை பெற்றார்.

    இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திற னாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    இதில் தையல் எந்திரம் வேண்டி மனு அளித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து பயனாளிக்கு மாவட்ட சமூல நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் இலவச தையல் எந்திரத்தை கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வித்யா உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் கடத்தலை தடுக்க தனிப்பிரிவு அமைக்கப்பட உள்ளதாக டி.ஐ.ஜி. துரை தெரிவித்துள்ளார்.
    • ‘செக்போஸ்ட்’ அமைத்து கண்கா ணிக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி., துரை நிருபர்களிடம் கூறியதா வது:-

    ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் தொடர்ந்து கடத்தல் அதிகரித்து வருகிறது.இவற்றை கட்டுப்படுத்த வேதாளை பகுதியில் போலீஸ் 'செக்போஸ்ட்' அமைத்து கண்கா ணிக்கப்படுகிறது.தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் கடத்தலை தடுக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு தனிப் பிரிவு அமைக்கப்பட உள்ளது.

    இப்பிரிவு போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவர். கடல் வாழ் உயிரினங்கள், கஞ்சா கடத்தல், கடலில் தங்கம் கடத்தலை தடுக்கும் வகையில் இந்த தனிப்படை செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறிய சம்பவத்துக்கு காவல் துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் முழுமையான பாதுகாப்பு உள்ளது.

    திருப்பூர் :

    வட மாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் இருந்து வெளியேற்றப்படுவதாக வதந்தி பரப்ப வேண்டாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் காவல் துணை ஆணையர் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து கலெக்டர் வினீத் கூறியதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் வடமாநிலத் தொழிலாளா்களின் மீது தாக்குதல் நடைபெறுவதாக வதந்திகள் பரவுவது எங்களது கவனத்துக்கு வந்துள்ளது.

    இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம், காவல் துறை, வருவாய்த் துறை ஆகியவை சாா்பில் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது. இதில், கடந்த ஜனவரி மாதத்தில் நிகழ்ந்த சம்பவம் தற்போது இணையதளத்தில் பரவி வருவது தெரியவந்துள்ளது. அப்போது நடைபெற்ற சிறிய சம்பவத்துக்கு காவல் துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் முழுமையான பாதுகாப்பு உள்ளது. இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஏடிஎஸ்பி, மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு மேலாளா்களுடன் ஆலோசனையும் நடத்தப்படும். திருப்பூா் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளா்கள் தாக்கப்படுவதாக பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் வதந்தி பரவி வருவது தொழிலாளா்களின் உறவினா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் என்றாா்.

    வதந்தி பரப்புவோா் மீது நடவடிக்கை

    திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் கூறியதாவது:- தற்போது சமூக வலைதளங்களில் 3 வீடியோக்கள் வேகமாக பரவி வருகிறது. இதில் 2 வீடியோக்கள் வேறு மாநிலங்களில் நிகழ்ந்தவையாகும். இது திருப்பூரில் நிகழ்ந்ததுபோல ட்விட்டா் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்புவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே வேளையில், வதந்தியாகப் பரவும் வீடியோக்களை வடமாநிலத் தொழிலாளா்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

    இந்த சந்திப்பின்போது திருப்பூா் மாநகர காவல் துணை ஆணையா் அபிஷேக்குப்தா உடனிருந்தாா்.

    புகாா் தெரிவிக்க தனி பிரிவு தொடக்கம்:

    திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்க ஏடிஎஸ்பி., தலைமையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் வடமாநிலத் தொழிலாளா்களின் பிரதிநிதிகளும் இருப்பாா்கள். இந்தப் பிரச்சினைகள் தொடா்பாக 94981-01320, 0421-2970017 ஆகிய எண்களில் வடமாநில தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் பெர்னாண்டஸ் புகார் அளித்தார்.
    • தகவலறிந்த சூரியாவின் உறவினர்கள் சூர்யாவைமீட்டு மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    மன்னார்குடி. அக்.13-

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அசேஷம் கிராமத்தை தேர்ந்த சூர்யா (47) என்பவர் பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் பெருகவாழ்ந்தான் அருகே பட்டிமார் கிராமத்தை சேர்ந்த பெர்னாண்டஸ் என்பவர் ஒரத்தூர் கிராமத்தில் இருந்து பட்டிமார் நோக்கி நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

    அப்போது பாளையூர் எனுமிடத்தில் வந்தபோது பெர்னாண்டஸ் வந்த இருசக்கர வாகனத்தை மறித்த 6 பேர் கொண்ட கும்பல் பெர்னாண்டசை தாக்கி அவரிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவரது வாகனத்தை எடுத்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் பெர்னாண்டஸ் புகார் அளித்தார்.

    அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த தனிப்பிரிவு ஏட்டு சூர்யா, பெர்னாண்டஸ்ஸை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு அசேஷத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

    அப்போது பாலையூர் எனும் இடத்தில் சென்ற போது அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தனிப்பிரிவு போலீஸ் சூரியாவை கல் மற்றும் கம்புகளால் தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.

    தகவலறிந்த சூரியாவின் உறவினர்கள் சூர்யாவைமீட்டு மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதையடுத்து போலீசார் சூர்யாவை தாக்கிய ஜீவானந்தம், அசோகன், ராஜேந்திரன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×