தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு மீது 6 பேர் கும்பல் தாக்குதல்

இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் பெர்னாண்டஸ் புகார் அளித்தார்.தகவலறிந்த சூரியாவின் உறவினர்கள் சூர்யாவைமீட்டு மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மர்ம கும்பலால் தாக்கப்பட்ட சூர்யா.
மர்ம கும்பலால் தாக்கப்பட்ட சூர்யா.
Published on

மன்னார்குடி. அக்.13-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அசேஷம் கிராமத்தை தேர்ந்த சூர்யா (47) என்பவர் பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் பெருகவாழ்ந்தான் அருகே பட்டிமார் கிராமத்தை சேர்ந்த பெர்னாண்டஸ் என்பவர் ஒரத்தூர் கிராமத்தில் இருந்து பட்டிமார் நோக்கி நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது பாளையூர் எனுமிடத்தில் வந்தபோது பெர்னாண்டஸ் வந்த இருசக்கர வாகனத்தை மறித்த 6 பேர் கொண்ட கும்பல் பெர்னாண்டசை தாக்கி அவரிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவரது வாகனத்தை எடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் பெர்னாண்டஸ் புகார் அளித்தார்.

அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த தனிப்பிரிவு ஏட்டு சூர்யா, பெர்னாண்டஸ்ஸை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு அசேஷத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது பாலையூர் எனும் இடத்தில் சென்ற போது அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தனிப்பிரிவு போலீஸ் சூரியாவை கல் மற்றும் கம்புகளால் தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.

தகவலறிந்த சூரியாவின் உறவினர்கள் சூர்யாவைமீட்டு மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து போலீசார் சூர்யாவை தாக்கிய ஜீவானந்தம், அசோகன், ராஜேந்திரன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com