முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும்

முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும்
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்ைக மனுக்களை பெற்றார்.

இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திற னாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

இதில் தையல் எந்திரம் வேண்டி மனு அளித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து பயனாளிக்கு மாவட்ட சமூல நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் இலவச தையல் எந்திரத்தை கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வித்யா உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com