கடலோர பகுதிகளில் கடத்தலை தடுக்க தனிப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் கடத்தலை தடுக்க தனிப்பிரிவு அமைக்கப்பட உள்ளதாக டி.ஐ.ஜி. துரை தெரிவித்துள்ளார். ‘செக்போஸ்ட்’ அமைத்து கண்கா ணிக்கப்படுகிறது.
கடலோர பகுதிகளில் கடத்தலை தடுக்க தனிப்பிரிவு
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி., துரை நிருபர்களிடம் கூறியதா வது:-

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் தொடர்ந்து கடத்தல் அதிகரித்து வருகிறது.இவற்றை கட்டுப்படுத்த வேதாளை பகுதியில் போலீஸ் 'செக்போஸ்ட்' அமைத்து கண்கா ணிக்கப்படுகிறது.தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் கடத்தலை தடுக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு தனிப் பிரிவு அமைக்கப்பட உள்ளது.

இப்பிரிவு போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவர். கடல் வாழ் உயிரினங்கள், கஞ்சா கடத்தல், கடலில் தங்கம் கடத்தலை தடுக்கும் வகையில் இந்த தனிப்படை செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com