search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old woman"

    • மூதாட்டிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் வள்ளியம்மாள்(65). பட்டாசு ஆலையில் வேலை பார்க்கிறார். இவரது மகன் மாரிசெல்வம். சம்பவத்தன்று வள்ளியம்மாள் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.

    அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மாரிசெல்வம் எங்கே என்று கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்களிடம் நீங்கள் யார்? எதற்காக அவனை தேடுகிறீர்கள் என வள்ளியம்மாள் கேட்டுள்ளார்.

    அப்போது அவர்கள் வைத்திருந்த அரிவாளால் வள்ளியம்மாளை வெட்டி விட்டு தப்பி சென்றனர். உறவினர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகார் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 மாதங்களுக்கு முன்பு மாயமான மூதாட்டி காணவில்லை என எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
    • வடுகம்பாடி அருகே எலும்புகூடாக ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. அது மாயமான மூதாட்டி என உறுதிசெய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள வடுகம்பாடியை சேர்ந்தவர் மாரியம்மாள்(75). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந்தேதி முதல் காணவில்லை. இது குறித்து அவரது மகனான டாஸ்மாக் மேற்பார்வை யாளர் முருகன் எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் பல்வேறு இடங்களில் அவரை தேடிவந்தனர். மேலும் அவரது உறவி னர்களும் மாரியம்மாளை தேடி வந்தனர். இந்நிலையில் வடுகம்பாடி அருகே கல்குட்டையில் மீன்பிடிக்க சென்ற சிறுவர்கள் அங்கு எலும்புகூடாக ஒரு சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தது மாரியம்மாள் என அவரது உறவினர்கள் உறுதி செய்தனர்.

    அவர் எவ்வாறு இறந்தார் என தெரிய வில்லை. 4 மாதங்களுக்கு முன்பு மாயமான மாரியம்மாள் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில் 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் வந்து சென்றதும் தெரிய வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் ராக்கியாபா ளையம் பிரிவு காளியப்பநகர் 2-வது வீதியை சேர்ந்த பழனிச்சாமி மனைவி அனுசுயா (வயது63).இவர் வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். இவர் தனியாக இருப்பதை நோட்டமிட்ட இரண்டு வாலிபர்கள் மோட்டா ர்சைக்கிளில் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த வெள்ளி பொருட்கள் ,செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுகுறித்து அனுசுயா நல்லூர் போலீஸ் நிலைய த்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நல்லூர் போலீசார்வழ க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 2 தெருவை தள்ளி உள்ள ராஜலட்சுமி(38) என்ற பெண்ணும்அடிக்கடி அனுசுயா வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.

    மேலும் அனுசுயாவின் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில் 2 வாலிபர்கள் மோட்டார்சை க்கி ளில் வந்து சென்றதும் தெரிய வந்தது. மோட்டார்சைக்கிளின் எண்கள் மூலம் நகைகளை பறித்துசென்ற மதுரை மாவட்டம் உசிலம்பட்டி யைசேர்ந்த மாதேஷ்(24), அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் (27) மற்றும்இவர்கள் நகையை பறித்து செல்ல உதவியது ராஜலட்சுமி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பறித்து சென்ற 6 பவுன் நகைகளையும், ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

    • தமிழும், மலையாளமும் எழுத மற்றும் படிக்க கற்றுக்கொண்டார்.
    • தள்ளாத வயதிலும் ஆர்வமுடன் கல்வி அறிவை பெற்ற கமலக்கன்னிக்கு வண்டன்மேடு பஞ்சாயத்து சார்பில் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் கமலக்கன்னி(108). கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே பிழைப்புக்காக இடுக்கி மாவட்டம் வண்டன்மேட்டில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார். குடும்ப வறுமை காரணமாக 2-ம் வகுப்புவரை மட்டுமே படித்த கமலக்கன்னி அதன்பிறகு வேலைக்கு சென்றுவிட்டதால் தன்னால் படிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டார்.

    தானும் படித்திருந்தால் நல்ல வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி இருக்க முடியும் என தனது உறவினர்களிடம் கூறி வந்துள்ளார். இருந்தபோதும் மீண்டும் தான் படிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் அவரிடம் விடவில்லை. கேரள அரசு சம்பூர்ணாசாக்சாத் வகுப்பு என்னும் முழுஎழுத்தறிவுவகுப்பில் கமலக்கன்னி சேர்ந்தார். அங்கு தமிழும், மலையாளமும் எழுத மற்றும் படிக்க கற்றுக்கொண்டார்.

    எழுத்து தேர்வு முடிவில் கமலக்கன்னி 100க்கு 97 மதிப்பெண்கள் பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றார். தள்ளாத வயதிலும் ஆர்வமுடன் கல்வி அறிவை பெற்ற கமலக்கன்னிக்கு வண்டன்மேடு பஞ்சாயத்து சார்பில் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. அப்போது அவர் தெரிவிக்கையில், இன்றைய சூழலில் கல்வி கற்க அனைத்து வசதிகளும் உள்ளது. இருந்தபோதும் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல தயங்குகின்றனர். எங்கள் காலத்தில் பள்ளிக்கு செல்லவே நீண்டதூரம் செல்ல வேண்டும். இதனால் எங்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு வேலைக்கு வைத்து கொண்டனர். எனவே மாணவர்கள் கற்கும் காலத்தில் கல்வியை உணர்ந்து படிக்க வேண்டும் என்றார்.

    • முருகேசன் மனைவி அலமேலு (வயது 70) இவர் கடந்த 18ஆம் தேதி 100 நாள் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • இன்று ஏமப்பூர் ஏரியில் ஒரு மூதாட்டி தண்ணீரில் மிதப்பதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்

    விழுப்புரம்:

    விழுப்புரம்மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தொட்டி குடிசை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மனைவி அலமேலு (வயது 70) இவர் கடந்த 18ஆம் தேதி 100 நாள் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் எல்லா இடத்திலும் தேடிப் பார்த்துவிட்டு திருவெண்ணைநல்லூர் காவல்நிலையத்தில் காணவில்லை என புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் இன்று ஏமப்பூர் ஏரியில் ஒரு மூதாட்டி தண்ணீரில் மிதப்பதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விருந்து சென்ற. சப் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ் கர்ணன் ராபர்ட் ஆகியோர் திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பவுனம்மாள் வீட்டின் சுவர் மழைநீர் இறங்கி நனைந்து இருந்துள்ளது.
    • அக்கம் பக்கத்தினர் பந்தநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் பந்தநல்லூர் அருகே கோவில் ராமாபுரம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் தனபால் மனைவி பவுனம்மாள் (வயது 65) கூலி தொழிலாளி. நேற்று இந்த பகுதியில் மழை பெய்தது.

    இதனால் பவுனம்மாள் வீட்டின் சுவரில் மழைநீர் இறங்கி நனைந்து இருந்துள்ளது.

    இந்நிலையில் வீட்டின் பின்பக்கம் இயற்கை உபாதை கழிக்க பவுனம்மாள் வந்தபோது சுவர் இடிந்து விழுந்தது.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து விட்டார்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் பந்தநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
    • போலீசார் சரவணன், கண்ணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    உடுமலை:

    உடுமலை யசோதா ராமலிங்கம் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள்( வயது 80). இவருக்கு திருமணம் ஆகாததால் தனது சகோதரருடன் வசித்து வருகிறார். ராஜம்மாள் கடந்த 12-ந்தேதி காந்திநகரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்கு சென்றார். சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் ராஜம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 2 1/2 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ராஜம்மாள் உடுமலை போலீசில் புகார் செய்தார்.

    கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி. பதிவுகளை வைத்து தலைமறைவான மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் உடுமலை பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் செயின் பறிப்பு சம்பவம் நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி., பதிவுகளும் அவர்களுடன் ஒத்துப்போனது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்த நபர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த சரவணன்(31), கண்ணன்(20) என்பதும் ராஜம்மாளிடம் தங்கச் செயினை பறித்து சென்றதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் போலீசார் சரவணன், கண்ணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • வரி செலுத்தாதவர்களின் வீடு தேடி சென்று தீவிரமாக வசூல் செய்து வருகின்றனர்.
    • அலுவலகத்திற்கு நேரில் வந்து வரி செலுத்திய மூதாட்டியை பலரும் பாராட்டினர்.

    அவினாசி:

    அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதற்கான வரியினங்களை நிர்வாகத்தினர் தீவிரமாக வசூலிப்பதற்காக அனைத்து வார்டு பகுதிகளிலும் மைக் மூலம் வரியினங்களை செலுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் வரி செலுத்தாதவர்களின் வீடு தேடி சென்று தீவிரமாக வசூல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவினாசி சீனிவாசபுரத்தை சேர்ந்த 91 வயதான ராஜாமணி என்ற மூதாட்டி நடக்க முடியாத நிலையிலும் கையில் கம்பு ஊன்றியபடி அவினாசி பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து தனது வீட்டுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தி ரசீது பெற்று சென்றார். இதுகுறித்து மூதாட்டி கூறுகையில், அரசுக்கு செலுத்த வேண்டிய வரிபணத்தை அந்தந்த காலகெடுவுக்குள் கட்டுவது நமது கடமை. அதை கட்டாமல் இருந்தால் பெரும் குறையாக எனக்கு தோன்றும். வரித்தொகையை கட்டிமுடித்ததில் நான் திருப்தியடைந்தேன் என்று கூறி அங்கிருந்த அலுவலர்களை இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து புறப்பட்டு சென்றார். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் வரியினங்களை செலுத்த காலம் கடத்தும் நிலையில் நடை தளர்ந்த நிலையிலும், அலுவலகத்திற்கு நேரில் வந்து வரி செலுத்திய மூதாட்டியை பலரும் பாராட்டினர்.

    • முத்தம்மாளின் 2-வது மகள் ஈஸ்வரியின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது.
    • ராஜகோபால் நகரில் உள்ள ஈஸ்வரி வீட்டிற்கு முத்தம்மாள், மினி பஸ்சில் வந்து இறங்கி அங்குள்ள தியேட்டர் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தை யாபுரம் தோப்பு தெருவை சேர்ந்தவர் முத்து சாமி. இவரது மனைவி முத்தம்மாள் (வயது67). இவர்களுக்கு 2 மகள் ஒரு மகன் உள்ளனர்.

    முத்தம்மாளின் 2-வது மகள் ஈஸ்வரியின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்ப்பதற்காக தூத்துக்குடி அண்ணா நகர் 6-வது மேற்கு பகுதி ராஜகோபால் நகரில் உள்ள ஈஸ்வரி வீட்டிற்கு முத்தம்மாள், மினி பஸ்சில் வந்து இறங்கி அங்குள்ள தியேட்டர் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் திடீரென்று முத்தமாளை பிடித்து கீழே தள்ளியுள்ளனர்.

    இதில் அவர் கீழே விழுந்து வலியால் அலறி துடித்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க செயினை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு வாலி பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து முத்தம்மாள் சிப்காட் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்தார். மேலும் மூதாட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கலாவதி (வயது 60). இவர் தனியாக வசித்து வருகிறார்,. தண்டபாணி குடிபோதையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கலாவதியை கடுமையாக தாக்கியுள்ளார்,
    • தண்டபாணியை பொதுமக்கள் மடக்கி பிடித்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த பல்லவராயநத்தம் சேர்ந்தவர் கலாவதி (வயது 60). இவர் தனியாக வசித்து வருகிறார்.இந்த நிலையில் கலா வதிக்கும் அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி (வயது 43) என்பவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. மேலும் மூதாட்டி கலாவதி அவ்வப் போது தண்டபாணியை ஒருமையில் திட்டி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு தண்டபாணி குடிபோதையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கலாவதியை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது

    .இதனால் கலாவதி அலறி கத்தியதால் அக்கம் பக்கத்தை சேர்ந்த பொது மக்கள் உடனடியாக வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்து குடி போதையில் தண்டபாணி வெளியில் தப்பி ஓட முயற்சி செய்தார். அப்போது தண்டபாணியை பொதுமக்கள் மடக்கி பிடித்து௹௹௹னர். அதன் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டபாணியை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பலத்த காயம் அடைந்த மூதாட்டி கலாவதியை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து மூதாட்டி கலாவதி உறவினர் சந்திர சேகர் முன் விரோதம் காரணமாக கலாவதியை தாக்கி கற்பழிக்க முயற்சி செய்ததாக புகார் அளித் ததின் பேரில் நெல்லிக் குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர் பகுதியில் மூதாட்டி நேற்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • மேலும் வீட்டில் இருந்த இரும்பு பெட்டி திறந்த நிலையில் இருந்தது. தனியாக இருக்கும் மூதாட்டியை தாக்கி விட்டு, மர்ம நபர்கள் பணம், நகை கொளை அடித்து சென்ற இருக்கலாம் என, தெரிகிறது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர் பகுதியை சேர்ந்த கந்தம்மாள் (வயது 90), அவரது கணவர் ராமசாமி இறந்த விட்ட நிலையில், அவர் தனியாக வசித்து வருகிறார்.

    கந்தம்மாள் நேற்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கந்தம்மாள் உடலை கைப்பற்றி விசாரனை செயதனர்.

    மேலும் வீட்டில் இருந்த இரும்பு பெட்டி திறந்த நிலையில் இருந்தது. தனியாக இருக்கும் மூதாட்டியை தாக்கி விட்டு, மர்ம நபர்கள் பணம், நகை கொளை அடித்து சென்ற இருக்கலாம் என, தெரிகிறது.

    இது குறித்து பள்ளிபா ளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். மூதாட்டி கந்தம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்கு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • கடந்த ஒரு ஆண்டாக சீதாலட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளன.
    • இதனால் விரக்தியடைந்த சீதாலட்சுமி தான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என கூறி வந்துள்ளர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தை அடுத்துள்ள சதுமுகை பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (65). இவரது மனைவி சீதாலட்சுமி (60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

    இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக சீதாலட்சுமிக்கு நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளன. இதனால் விரக்தியடைந்த சீதாலட்சுமி தான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என கடந்த சில நாட்களாக கூறி வந்துள்ளர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் சீதாலட்சுமி வீட்டில் இருந்து மாயமானார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்ததில் சீதாலட்சுமி வீட்டில் இருந்து வெளியேறி, கொடிவேரியை நோக்கி நடந்து செல்வது பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கொடிவேரி-அரக்கன் கோட்டை பகுதியில் தேடியும் சீதாலட்சுமி கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அரக்கன் கோட்டை வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டதையடுத்து டி.ஜி.புதூர் நால்ரோட்டுக்கும், ஏழூருக்கும் இடையில் கந்தப்ப கவுண்டர் என்பவரது நெல் வயல் அருகில் வாய்க்காலில் சாய்ந்திருந்த கருவேல மரத்தில் சீதா லட்சுமியின் உடல் சிக்கி இருப்பது தெரியவந்தது.

    இது குறித்த தகவலின் பேரில் பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சீதாலட்சுமியின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×