என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூதாட்டி கொலை; போலீசார் விசாரணை
- பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர் பகுதியில் மூதாட்டி நேற்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- மேலும் வீட்டில் இருந்த இரும்பு பெட்டி திறந்த நிலையில் இருந்தது. தனியாக இருக்கும் மூதாட்டியை தாக்கி விட்டு, மர்ம நபர்கள் பணம், நகை கொளை அடித்து சென்ற இருக்கலாம் என, தெரிகிறது.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர் பகுதியை சேர்ந்த கந்தம்மாள் (வயது 90), அவரது கணவர் ராமசாமி இறந்த விட்ட நிலையில், அவர் தனியாக வசித்து வருகிறார்.
கந்தம்மாள் நேற்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கந்தம்மாள் உடலை கைப்பற்றி விசாரனை செயதனர்.
மேலும் வீட்டில் இருந்த இரும்பு பெட்டி திறந்த நிலையில் இருந்தது. தனியாக இருக்கும் மூதாட்டியை தாக்கி விட்டு, மர்ம நபர்கள் பணம், நகை கொளை அடித்து சென்ற இருக்கலாம் என, தெரிகிறது.
இது குறித்து பள்ளிபா ளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். மூதாட்டி கந்தம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்கு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Next Story