search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national flag"

    • பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
    • ஸ்கேட்டிங் மாணவன் கார்த்திக் பரணிதரன் தேசியக் கொடியை ஏந்தி வந்தான்.

    கடலூர்:

    பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. பள்ளி நிர்வாகிகள், மாணவ -மாணவிகள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஸ்கேட்டிங் மாணவன் கார்த்திக் பரணிதரன் தேசியக் கொடியை ஏந்தி வந்து விழா மேடையில் சிறப்பு விருந்தினர்களுக்கு கொடி வணக்கம் செலுத்தினான். இதனை பார்த்த அனைவரும் பரவசம் அடைந்தனர்.

    • ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பின்னர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் சமாதான புறா பறக்க விட்டனர்.

    தொடர்ந்து விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.

    அதேபோல் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக, 6 ஆயிரம் தேசிய கொடிகளை முன்னாள் ராணுவ வீரர்கள் வழங்கினர்
    • 30 அரசு பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது

    செந்துறை

    அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த தமிழக முன்னாள் படைவீரர்கள் வீரமங்கையர்கள் அமைப்பு மற்றும் சோழப் பேரரசின் போர் வீரர்கள் சார்பாக 6000 தேசிய கொடிகள் செந்துறை பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது

    மாவட்டத் தலைவர் செல்வம் தலைமையில் மாநில துணை தலைவர் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில் ஒருங்கிணைப்பாளர் வேணு நிர்வாகிகள் கல்யாண சுந்தரம் ஆசைத்தம்பி முருகன் தமிழரசன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 6000 தேசிய கொடிகளை வழங்கினர். இந்திய நாட்டை காக்க எல்லையில் நின்று போராடிய முன்னாள் ராணுவ வீரர்கள் பள்ளி மாணவர்களிடையே தேசப்பற்றையும் தேசப் பாதுகாப்பு ஊட்டும் விதமாக ஒவ்வொரு மாணவர்களும் தங்களது இதயத்தில் தேசிய கொடியை அணிந்து இந்திய தேசத்தை வருங்கால தலைமுறை மாணவர்கள் முன் வருவார்கள் என்ற நம்பிக்கையில் தேசிய கொடியை பள்ளிகள் தோரும் சென்று வழங்கியதை ஆசியர்களும் மாணவர்களும் பாராட்டினர்.

    • ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் 77-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டப்பட்டது.
    • கலெக்டர்கள் தேசியக்கொடியேற்றி தியாகிகளை கவுரவித்தனர்.

    ராமநாதபுரம்

    இந்திய திருநாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாக–லமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடை–பெற்ற சுதந்திர தின விழா–வில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மூவர்ண பலூன்களையும், தேச ஒற்று–மையை வலியுறுத்தும் வித–மாக சமாதான புறாக்க–ளை–யும் பறக்க விட்டார்.

    பின்னர், திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவ–குப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறை யைச் சேர்ந்த 29 பேருக்கும், வருவாய்த்துறை, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 124 அலுவலர்களுக்கும் நற் சான்று பாராட்டுச் சான்றி–தழ்களை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தோட்டக் கலைத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தாட்கோ, வேளாண்மை துறை சார் பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், தொகுப்பு நிதி கல்வி உதவித் தொகை, தையல் எந்திரம், முதலமைச் சர் பொது நிவாரண நிதி, இலவச வீட்டு மனைப்பட்டா,

    சரக்கு வாகனம் வாங்க மானியக் கடன், தூய்மைப்ப–ணியாளர் நல வாரிய உறுப் பினர்களுக்கு வீடு வழங்கு–தல் என 57 பேர்களுக்கு ரூ.47 லட்சத்து 49 ஆயிரத்து 783 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக் டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 49 காவல் துறை அலுவலர்கள், பல் வேறு அரசு துறைகளைச் சார்ந்த 288 அலுவலர்கள் என மொத்தம் 337 அலுவ லர்களுக்கு பாராட்டு சான்றி தழ்களை வழங்கினார்.

    விழாவையொட்டி 700 மாணவ, மாணவிகள் பங் கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை) அபீதா ஹனீப், மாவட்ட வருவாய் அலுவலர், ராமநா தபுரம் வருவாய் கோட்டாட் சியர் உள்பட பல்வேறு அர சுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் உள்ள மைதானத்தில், இன்று நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் கலெக்டர் ஆஷா அஜித் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையி னரின் அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து, சமாதானத்தை விளக்கும் வகையி, வெண்பு றாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார்.

    விழாவில் மாற்றுத்திற னாளிகள் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலத் துறை, மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறை, வேளாண்மைத்துறை, பேரூராட்சி துறை, ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம், உள்பட பல்வேறு அரசுத்து றைகளின் சார்பில் மொத்தம் 22 பயனாளி களுக்கு ரூ.1 கோடியே 67 லட்சத்து 21 ஆயிரத்து 200 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.

    70 காவலர்களுக்கும், வருவாய்த்துறை மற்றும் பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 285 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற் சான்றிதழ்கள் மற்றும் கேட யங்களை கலெக்டர் வழங்கி னார். விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சிலம் பாட்டம், யோகா, கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    காவல் துறையில் சிறப் பாக பணிபுரிந்த 70 போலீ சாருக்கும், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் பிறத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 285 அலுவலர் கள் மற்றும் பணியாளர்க ளுக்கு சான்றிதழ்களும், வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த், சிவகங்கை எம்.எல்.ஏ. பிஆர்.செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பாதேவி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால் துரை (தேவகோட்டை), மற்றும் அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர் கள், காவல் துறை அலுவ லர்கள், பொதுமக்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கில் சுதந்தி தின விழா கொண்டாடப் பட்டது. கலெக்டர் ஜெய–சீலன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் கருண் காரட் (அருப்புக் காோட்டை), தனஞ்ஜெயன் (சிவகாசி), ஜெகன்நாதன் (திருச்சுழி), வச்சகாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ், திட்ட இயக்குநர் தண்ட பாணி, ஆர்.டி.ஓ.க்கள் சிவகுமார் (சாத்தூர்), விஸ்வநாதன் (சிவகாசி), கலெக்டர் நேர்முக உதவி யாளர் அனிதா உள்பட 391 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை கலெக் டர் வழங்கினார்.

    முன்னதாக ஜீப்பில் சென்று கலெக்டர் போலீ–சார் அணிவகுப்பு மரியா–தையை ஏற்றுக் கொண்டார். பள்ளி மாணவ, மாணவி–களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் வருவாய் அலுவலர் ரவிக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சீனி வாச பெருமாள், மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றி வேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர் யூனியன் அலுவலகத்தில் தலைவர் சுமதிராஜ சேகர் தேசியக் கொடி ஏற்றினார். நகராட்சி அலுவலகத்தில் தலைவர் மாதவன் தேசியக் கொடி ஏற்றினார். மாவட்ட பஞ்சா யத்து அலவலகத்தில் பஞ்சா யத்து தலைவி வசந்தி மான்ராஜ் தேசியக் கொடி ஏற்றினார். விருதுநகர் தேசப்பந்து திடலில் உள்ள தியாகிகள் நினைவு தூணில் தேசியக் கொடி ஏற்றப்பட் டது.

    கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் தலைவர் பாண்டுரங்கள் தேசியக் கொடி ஏற்றினார். விருதுநகர் எம்.பி. அலுவல கத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    • ஒரு தேசியக்கொடியின் விலை ரூ.25 ஆகும்.
    • பொதுமக்கள் ஆர்வமுடன் தேசியக்கொடியை வாங்கி செல்வதாக தபால் நிலைய பணியாளர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    76-வது சுதந்திர தின விழாவையொட்டி தபால் நிலையங்களில் குறைந்த விலையில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது.அந்த வகையில் பல்லடம் தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனை நடைபெற்று வருகிறது.

    ஒரு தேசியக்கொடியின் விலை ரூ.25 ஆகும்.பொதுமக்கள் ஆர்வமுடன் தபால் நிலையத்தில் தேசியக்கொடியை வாங்கி செல்வதாக தபால் நிலைய பணியாளர்கள் தெரிவித்தனர்.மேலும் பல்லடம்சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கிளை தபால் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • வேறுயாரும் தேசியக் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
    • உதவி இயக்குனர் அலுவலக எண்.044-2723 7175 மற்றும் 74026 06005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறும்.

    மேலும், அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவல கங்களில் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்றி உரிய மரியாதை செலுத்த வேண்டும்.

    அவர்களுக்கு பதிலாக வேறுயாரும் தேசியக் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதை தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவர்களின் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிராம ஊராட்சிகளில் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்சினை இருந்தால் காஞ்சிபுரம் உதவி இயக்குனர் அலுவலக எண்.044-2723 7175 மற்றும் 74026 06005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மேச்சேரியில் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 76 மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடி பேரணி முன்னாள் முப்படை வீரர்கள் சார்பில் நடைபெற்றது.
    • இப்பேரணியை மேட்டூர் டி.எஸ்.பி. மரியமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 76 மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடி பேரணி முன்னாள் முப்படை வீரர்கள் சார்பில் நடைபெற்றது.

    பேரணி

    இப்பேரணியை மேட்டூர் டி.எஸ்.பி. மரியமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் ராணுவ வீரர்கள், தனியார் கல்லூரியை சேர்ந்த 1000- க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தேசிய கொடியை இருபுறமும் சுமந்து பேரணியாக சென்றனர்.

    இந்த பேரணி மேச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி பஸ் நிலையம் ,தேர் வீதி, கால்நடை சந்தை உள்ளிட்ட முக்கிய வீதியில் வழியாகச் சென்று மீண்டும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை வந்தடைந்தது.

    மாணவிகள் தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு சென்றனர். பிரமாண்டமாக நடைபெற்ற 76-வது சுதந்திர தின கொடி அணிவகுப்பு பேரணியில் ஏராளமான பொதுமக்களும் உற்சாகமாக கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

    இந்த பேரணிக்கு பாதுகாப்பாக காவல் துறையினரும் காவல்துறை வாகனங்கள் அவசர ஊர்திகள் பின் தொடர பேரணி முடிவடைந்தது. தேசியக்கொடியை நங்கவள்ளியை சேர்ந்த தறி தொழிலாளி செந்தில்குமார் வடிவமைத்தார்.பேரணியில் முன்னாள் முப்படை குடும்ப நல சங்கத்தின் சார்பாக ஓய்வு பெற்ற ராணுவ வீர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார்.
    • பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார்.

    சென்னை:

    நாட்டின் 76-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் (15-ந் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சென்னை கோட்டையில் 15-ந் தேதி, காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி உரை நிகழ்த்த உள்ளார்.

    விழா மேடையில், 'தகைசால் தமிழர்' என்ற பெயரிலான விருதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தி.க. தலைவர் தலைவர் கி.வீரமணிக்கு வழங்குகிறார். டாக்டர் அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழா மேடையிலேயே வழங்கி கவுரவிப்பார் முன்னதாக, காலை 8.45 மணிக்கு 76வது சுதந்திர தின நாள் நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்பார். முதல்வருக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை தலைமை செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார்.

    இதையடுத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார்.

    பின்னர் கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும். இடத்துக்கு முதலமைச் சர் சென்று தேசியக் கொடியையேற்றி வைத்து தேசியக் கொடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வணக்கம் செலுத்துவார். இதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துவார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள்
    • தேசியக்கொடியை கவுரவிக்கும் வகையில் தேசம் போற்றுவோம், வீடு தோறும் தேசியக்கொடியை ஏற்றுவோம் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் நாட்டின் அடையாளமாக விளங்கும் தேசியக்கொடியை கவுரவிக்கும் வகையில் தேசம் போற்றுவோம், வீடு தோறும் தேசியக்கொடியை ஏற்றுவோம் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. வருகிற சுதந்திர தினத்தை யொட்டி மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் நாளை 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தேசியக் கொடியை பொதுமக்கள் ஏற்ற வேண்டும்.

    அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் டுவிட்டர் உட்பட சமூக வலைதளங்கள் வாயிலாக வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் 20 லட்சம் தேசியக் கொடிகள் விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தபால் துறை மூலம் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
    • 6.5 லட்சம் தேசியக் கொடிகள் விற்க திட்டமிட்டு உள்ள நிலையில் 6 நாட்களில் மட்டும் இந்த அளவிற்கு விற்பனையாகி உள்ளது.

    சென்னை:

    நாட்டின் 76-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைவரும் தங்கள் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

    இதனை தொடர்ந்து அனைத்து தபால் நிலையங்களிலும் தேசிய கொடி விற்பனை தொடங்கியது. கடந்த 7-ந் தேதியில் இருந்து சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து தபால் நிலையங்களிலும் தேசிய கொடி விற்பனை நடந்து வருகிறது.

    ஒரு கொடியின் விலை ரூ.25. நேரிலும், தபால் மூலமாகவும் பெறலாம். ஆன்லைன் வழியாக புக் செய்தால் வீட்டிற்கே தேசியக் கொடி வந்து சேரும். பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மொத்தமாக தேசிய கொடியை கேட்டாலும் நேரில் சென்று வழங்கவும் தபால் துறை தயாராக உள்ளது.

    தமிழகத்தில் 20 லட்சம் தேசியக் கொடிகள் விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தபால் துறை மூலம் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    சென்னை மண்டலத்தில் இதுவரையில் 80 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    6.5 லட்சம் தேசியக் கொடிகள் விற்க திட்டமிட்டு உள்ள நிலையில் 6 நாட்களில் மட்டும் இந்த அளவிற்கு விற்பனையாகி உள்ளது.

    இது குறித்து தபால்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பொதுமக்கள் தேசிய கொடியை வாங்க வேண்டும் என்பதற்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை)யும் தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை நடைபெறும்.

    தனிநபராகவோ, கூட்டமாகவோ, தொழில் நிறுவனமோ அல்லது ஒன்று, இரண்டு தேசியக் கொடி கேட்டாலோ வழங்கப்படும் என்றார்.

    • தேசிய கொடி விற்பனை அனைத்து அஞ்சலகங்கள் மூலமாக நடைபெறுகிறது.
    • பேரணி பாளை தலைமை அஞ்சலகத்தில் இருந்து வ.உ.சி.மைதானம், லூர்து நாதன் சிலை வழியாக மீண்டும் தலைமை அஞ்சலகம் வந்து சேர்ந்தது.

    நெல்லை:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை மூலம் தேசிய கொடி விற்பனை நெல்லை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்கள் மூலமாகவும் நடைபெறுகிறது. இது குறித்து பாளையில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் தலைமை தாங்கினார். இப்பேரணி பாளை தலைமை அஞ்சலகத்தில் இருந்து வ.உ.சி.மைதானம், லூர்து நாதன் சிலை வழியாக மீண்டும் தலைமை அஞ்சலகம் வந்து சேர்ந்தது.

    இதில் உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் பாலாஜி, பாளை தலைமை அஞ்சல் அதிகாரி ராமசந்திரன் உட்பட அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    • தபால்காரர் மூலமாக தங்களின் வீடுகளுக்கே வினியோகம்
    • அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

    திருப்பத்தூர்:

    சுதந்திரதின பெருவிழாவை அனைத்து இல்லங்களிலும் தேசி யக் கொடியை பறக்க விட்டு கொண்டாடிட பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இந்திய தேசிய கொடி அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் பொருட்டு திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை, கிளை அஞ்சலகங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூபாய் 25 மட்டுமே.

    தேசியக் கொடியை http:// www.epostoffice.gov.in என்ற இணையதள முகவரியை பயன்ப டுத்தி தபால்காரர் மூலமாக தங்களின் வீடுகளுக்கே பட்டு வாடா செய்யும்படி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில் ரூ.25 மட்டும் செலுத்தி தேசியக்கொடியை பெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் கொடுத்து சுதந்திர தின பெரு விழாவை இந்திய அஞ்சல் துறையோடு கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் மொத்தமாக தேசியக்கொடியை வாங்கிட விரும்பினால் திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மற்றும் குடியாத்தம் தலைமை அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளவும்.

    இத்தகவலை திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட கண்காணிப் பாளர் மு.மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    ×