search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசியக் கொடி"

    • வேறுயாரும் தேசியக் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
    • உதவி இயக்குனர் அலுவலக எண்.044-2723 7175 மற்றும் 74026 06005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறும்.

    மேலும், அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவல கங்களில் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்றி உரிய மரியாதை செலுத்த வேண்டும்.

    அவர்களுக்கு பதிலாக வேறுயாரும் தேசியக் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதை தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவர்களின் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிராம ஊராட்சிகளில் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்சினை இருந்தால் காஞ்சிபுரம் உதவி இயக்குனர் அலுவலக எண்.044-2723 7175 மற்றும் 74026 06005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தபால்காரர் மூலமாக தங்களின் வீடுகளுக்கே வினியோகம்
    • அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

    திருப்பத்தூர்:

    சுதந்திரதின பெருவிழாவை அனைத்து இல்லங்களிலும் தேசி யக் கொடியை பறக்க விட்டு கொண்டாடிட பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இந்திய தேசிய கொடி அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் பொருட்டு திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை, கிளை அஞ்சலகங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூபாய் 25 மட்டுமே.

    தேசியக் கொடியை http:// www.epostoffice.gov.in என்ற இணையதள முகவரியை பயன்ப டுத்தி தபால்காரர் மூலமாக தங்களின் வீடுகளுக்கே பட்டு வாடா செய்யும்படி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில் ரூ.25 மட்டும் செலுத்தி தேசியக்கொடியை பெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் கொடுத்து சுதந்திர தின பெரு விழாவை இந்திய அஞ்சல் துறையோடு கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் மொத்தமாக தேசியக்கொடியை வாங்கிட விரும்பினால் திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மற்றும் குடியாத்தம் தலைமை அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளவும்.

    இத்தகவலை திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட கண்காணிப் பாளர் மு.மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் விசாரணைக்காக போலீஸ் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
    • சம்பந்தப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஜார்கண்ட் மாநிலம் மேதினிநகர் மாவட்டத்தில் உள்ள பலமுவில் செயின்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கல்யாண்பூர்-கங்காரி பகுதியில் மொகரம் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, மக்கள் ஏந்தப்பட்டு வந்த மூவர்ணக் கொடியில் அசோக சக்கரத்திற்கு பதில் உருது வார்த்தைகளால் மாற்றப்பட்டிருந்தது.

    இதன் வீடியோ சமூக வலைத்த வைரலானது. மேதினிநகர் மாவட்டத் தலைமையகத்திற்கு அருகில் உள்ள செயின்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கல்யாண்பூர்-கங்காரி பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அதற்கு கீழே ஒரு வாள் சின்னம் இருந்தது.

    இந்த காட்சியை வீடியோ எடுத்த மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் விசாரணைக்காக போலீஸ் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து காவல்துறை அதிகாரி ரிஷப் கார்க் கூறுகையில், "தேசியக் கொடியை அவமரியாதை செய்வது சட்டப்படி குற்றமாகும். சம்பந்தப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    • மண்டல மேன்மை விருது வழங்கும் விழா எழும்பூரில் நடந்தது.
    • இந்த விழாவில் 75 விருதுகள் வழங்கப்பட்டன.

    சென்னை :

    தபால் துறையின், சென்னை நகர மண்டலத்தில் 2021-22-ம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய கிளைகள், அதன் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு 'மண்டல மேன்மை விருது' என்ற பெயரில் விருதுகள் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டலில் நேற்று நடந்தது.

    இந்த விழாவுக்கு சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஜி.நடராஜன் தலைமை தாங்கினார். அஞ்சல்துறை இயக்குனர் கே.சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் பி.செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவப்படுத்தினார்.

    75-வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில், இந்த விழாவில் 75 விருதுகள் வழங்கப்பட்டன. அதில் 25 விருதுகள் கோட்டங்கள், உட்கோட்டங்கள், அஞ்சல் அலுவலகங்களுக்கும், 50 விருதுகள் தனிநபர்களுக்கும் வழங்கப்பட்டன.

    தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை பொறுத்தவரையில், சிறப்பாக பணியாற்றிய தபால்காரர், டிரைவர், துறை முகவர் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

    அந்த வகையில் சிறந்த தபால்காரருக்கான விருதை அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தின் தபால்காரர் டி.சந்தியாவுக்கும், அதேபோல், மண்டலத்தில் சிறந்த பெண் ஊழியருக்கான விருதை ஷகிலாவுக்கும் வழங்கி கவுரவப்படுத்தினர்.

    மேலும், வருவாய் ஈட்டுவதில் சிறந்து விளங்கும் கோட்டங்களில் தாம்பரம், வடசென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டன.

    விழாவில், தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் பி.செல்வகுமார் பேசுகையில், "தபால்துறையில் சிறந்த முறையில் பணியாற்றுபவர்களுக்கு இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இது மற்றவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்தில் மத்திய அரசின் வீடுதோறும் மூவர்ணம் என்ற திட்டத்துக்காக தமிழக தபால் துறை மூலம் 9 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு, அது மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டு இருக்கிறது. தேசியக் கொடியின் தரத்தில் பிரச்சினை வந்தது. பின்னர் அது சரிசெய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு 'டிஜிட்டல் லைப் சர்டிபிகேட்'டை தபால் துறை வீடு தேடி சென்று வழங்கி வருகிறது. இதுவரை 1½ லட்சம் பேருக்கு குறுகிய காலத்தில் வழங்கி சாதனை செய்துள்ளோம்'' என்றார்.

    • தனது சொந்த செலவில் வேதாரண்யம் பகுதியில் தேசியக் கொடிகள் வழங்கினார்.
    • பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு 3000 தேசியக் கொடிகள் வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகானந்தம். இவர் தனது சொந்த செலவில் வேதாரண்யம் பகுதியில் உள்ள கடினல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி, கருப்பம் புலம் தெற்கு காடு நடுநிலைப்பள்ளி, ஆதனூர் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு 3000 தேசியக் கொடிகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கலந்துகொண்டனர்.

    • மத்திய அமைச்சர் அமித் ஷா 211 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • நாடு முழுவதும் 20 கோடி மூவர்ணக் கொடிகள் உயர்த்தப்படும்.

    மத்திய அரசின் 'சுதந்திர தின அமுத பெருவிழா' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பொது மக்கள் தங்கள் வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலிறுயுறுத்தி உள்ளார்.

    குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் போபால் மற்றும் குமா பகுதிகளுக்கான குடிநீர் வழங்கல் திட்டத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். அப்போது அவர் தனது தொகுதியின் கீழ் 211 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    பின்னர் அமித் ஷா உரையாற்றியதாவது:-

    இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. குடிநீர் வழங்கல் திட்டத்தின் மூலம் 70 ஆயிரம் வீடுகளுக்கு சுத்தமான நர்மதா குடிநீர் உறுதி செய்யப்படும்.

    பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி, சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 75 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேசபக்தி உணர்வை வளர்ப்பதற்காகவும் மூவர்ண தேசியக் கொடி ஏற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தெரிந்த மற்றும் அறியப்படாத நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூர்வதற்கும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

    ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். தபால் அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்கள், மாநகராட்சிகள் மற்றும் இ-காமர்ஸ் இணையதளங்களில் தேசியக் கொடிகள் கிடைக்கும். பொதுமக்கள் மூவர்ணக் கொடியை உயர்த்தி அதனுடன் செல்ஃபி எடுத்து மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

    ஆகஸ்ட் 13 முதல் 15 வரையிலான மூன்று நாள் பிரச்சாரத்தின் போது நாடு முழுவதும் 20 கோடி மூவர்ணக் கொடிகள் ஏற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஒரு வாரகாலம் கொடியேற்றி நாட்டுப் பற்றை பறைசாற்ற வேண்டும்.
    • வருவாய் ஈட்டாத பெற்றோரின் குழந்தைகளுக்கு சொந்த பொறுப்பில் தேசியக் கொடி அனுப்பி வைக்கப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்தாலுகா தலைஞாயிறு பேருராட்சியில் நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை மிகச் சிறப்பாக கொண்டாட மாணவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் குகன் கடிதம் எழுதி அழைப்பு விடுத்து வருகிறார்.அந்த கடிதத்தில், மத்திய அரசின் முடிவு படி நாடு முழுவதும் 11.8.2022 முதல் 17.8.2022 முடிய ஒரு வார காலம் சுதந்திர வாரமாக கொண்டாடப்பட உள்ளது. அப்போது அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என இந்திய அரசால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நம் தேசியக் கொடி நம் உயிரில், உணர்வில் கலந்த பெருமை என்று குறிப்பிட்டு வீடு தோறும் ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஒரு வார காலம் கொடியேற்றி நாட்டுப் பற்றை பறைசாற்றக் வேண்டும். தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகத்தில் தேசிய கொடி விற்பனை செய்யப் பட உள்ளது. பெற்றோர் மூலம் வாங்கி கொள்ளலாம். பெற்றோர் இல்லாத குழந்தைகள் மற்றும் வருவாய்ஈட்டாத பெற்றோரின் குழந்தை களுக்கு சொந்த பொறுப்பில் தேசியக் கொடி அனுப்பி வைக்கப்படும்.

    அனைத்து வீடுகளிலிலும் தேசியக் கொடி என்னும் இலக்கை எட்ட மாணவர்கள் பங்களிப்பால் மட்டுமே இயலும்.

    அஞ்சல் துறைக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தவும் தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு அஞ்சல் கடிதம் எழுதி வருகிறேன். மாணவர்களுக்கு தேச பற்ற ஊக்குவிக்கும் விதமாக சுமார் 5000 ஆயிரம் கடிதம் எழுதி அனுப்ப உள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பேரூராட்சி செயல் அலுவலரின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிகிறது.

    ×