search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தபால் நிலையங்கள்"

    • தமிழகத்தில் 20 லட்சம் தேசியக் கொடிகள் விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தபால் துறை மூலம் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
    • 6.5 லட்சம் தேசியக் கொடிகள் விற்க திட்டமிட்டு உள்ள நிலையில் 6 நாட்களில் மட்டும் இந்த அளவிற்கு விற்பனையாகி உள்ளது.

    சென்னை:

    நாட்டின் 76-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைவரும் தங்கள் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

    இதனை தொடர்ந்து அனைத்து தபால் நிலையங்களிலும் தேசிய கொடி விற்பனை தொடங்கியது. கடந்த 7-ந் தேதியில் இருந்து சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து தபால் நிலையங்களிலும் தேசிய கொடி விற்பனை நடந்து வருகிறது.

    ஒரு கொடியின் விலை ரூ.25. நேரிலும், தபால் மூலமாகவும் பெறலாம். ஆன்லைன் வழியாக புக் செய்தால் வீட்டிற்கே தேசியக் கொடி வந்து சேரும். பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மொத்தமாக தேசிய கொடியை கேட்டாலும் நேரில் சென்று வழங்கவும் தபால் துறை தயாராக உள்ளது.

    தமிழகத்தில் 20 லட்சம் தேசியக் கொடிகள் விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தபால் துறை மூலம் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    சென்னை மண்டலத்தில் இதுவரையில் 80 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    6.5 லட்சம் தேசியக் கொடிகள் விற்க திட்டமிட்டு உள்ள நிலையில் 6 நாட்களில் மட்டும் இந்த அளவிற்கு விற்பனையாகி உள்ளது.

    இது குறித்து தபால்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பொதுமக்கள் தேசிய கொடியை வாங்க வேண்டும் என்பதற்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை)யும் தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை நடைபெறும்.

    தனிநபராகவோ, கூட்டமாகவோ, தொழில் நிறுவனமோ அல்லது ஒன்று, இரண்டு தேசியக் கொடி கேட்டாலோ வழங்கப்படும் என்றார்.

    • மதுரையில் அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை செய்யப்படுகிறது.
    • எனவே பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மதுரை 

    மதுரை அஞ்சல் கோட்ட நடுநிலை கண்காணிப்பாளர் ஜவகர்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் கிராம் 1-க்கு ரூ.5,926-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை தொடங்கியுள்ளது. தனி நபர் நிதியாண்டில் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை தங்கத்திற்கு முதலீடு செய்யலாம். இந்த தங்கமானது பத்திர வடிவில் இருந்தால் அது பாதுகாப்பான முதலீடு மட்டுமின்றி ஆண்டு ஒன்றுக்கு 2.5 சதவீதம் வட்டியும் கூடுதலாக கிடைக்கும். எனவே பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதிர்வு காலம் முடிந்த பின்னரும் பல முதலீட்டுத்தாரர்கள் அதற்கான பணத்தை வாங்க வராமல் இருந்ததும் தெரியவந்தது.
    • முதலீட்டுதாரர்கள் பற்றிய பட்டியலை வருமான வரித்துறை அதிகாரிகள் திரட்டினர்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் வருமான வரி ஏய்ப்பை தடுக்க வருமான வரித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இது தொடர்பாக வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ள தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்களில் ஏராளமானோர் பணம் முதலீடு செய்திருப்பதை கண்டு பிடித்தனர்.

    இவர்களின் முகவரிகளை ஆய்வு செய்த போது அவற்றில் பலவும் போலி என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், இந்த முதலீடுகள் குறித்த முழு விபரங்களையும் தபால் துறையிடம் கேட்டு வாங்கியது.

    தபால் துறை அளித்த தகவல்களின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தபால் துறையின் சிறுசேமிப்பு திட்டம் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் ஆகியவற்றில் முதலீடு செய்தவர்களில் பலரும் தங்கள் குழந்தைகள் பெயரிலும், வீட்டில் வேலை செய்வோர் உள்பட பினாமிகள் பேரிலும் முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் முதிர்வு காலம் முடிந்த பின்னரும் பல முதலீட்டுத்தாரர்கள் அதற்கான பணத்தை வாங்க வராமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த முதலீட்டுதாரர்கள் பற்றிய பட்டியலை வருமான வரித்துறை அதிகாரிகள் திரட்டினர்.

    இது தொடர்பாக வருமான வரித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்களில் பினாமி பெயர்களில் பலர் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக ரூ. 50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பணம் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

    இவர்களில் முதல் கட்டமாக 150 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தபால் நிலையங்களிலும் முதலீட்டாளர்கள் குறித்த விபரங்கள், அவர்களின் ஆவணங்களை உடனே சரிப்பார்க்கவும் உத்தரவிட்டுள்ளோம், என்றார்.

    இந்த நடவடிக்கைக்கு பிறகு மேலும் பலருக்கு வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பும் என்று தெரிகிறது.

    ×