என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய கொடியுடன் பேரணி சென்ற அஞ்சல்துறை ஊழியர்கள்.
பாளையில் இன்று தேசியகொடியுடன் அஞ்சல் துறை ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி
- தேசிய கொடி விற்பனை அனைத்து அஞ்சலகங்கள் மூலமாக நடைபெறுகிறது.
- பேரணி பாளை தலைமை அஞ்சலகத்தில் இருந்து வ.உ.சி.மைதானம், லூர்து நாதன் சிலை வழியாக மீண்டும் தலைமை அஞ்சலகம் வந்து சேர்ந்தது.
நெல்லை:
சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை மூலம் தேசிய கொடி விற்பனை நெல்லை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்கள் மூலமாகவும் நடைபெறுகிறது. இது குறித்து பாளையில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் தலைமை தாங்கினார். இப்பேரணி பாளை தலைமை அஞ்சலகத்தில் இருந்து வ.உ.சி.மைதானம், லூர்து நாதன் சிலை வழியாக மீண்டும் தலைமை அஞ்சலகம் வந்து சேர்ந்தது.
இதில் உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் பாலாஜி, பாளை தலைமை அஞ்சல் அதிகாரி ராமசந்திரன் உட்பட அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
Next Story






