search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narcotics"

    • ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
    • போதைப் பொருள் விழிப்புணர்வு நாடகத்தை ஒருங்கிணைத்து மாணவர்களின் மூலம் நாட்டிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    கடலூர்:

    சர்வதேச போதை பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்.ஆர்.கே. பள்ளியின் தாளாளர் சுந்தரவடிவேல் மற்றும் நிர்வாக இயக்குநர் திருநாவுக்கரசு ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி முதல்வர் கஸ்தூரி துணை முதல்வர் பிரித்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அதனுடன் தமிழாசிரியை பானுமதி போதைப் பொருள் விழிப்புணர்வு நாடகத்தை ஒருங்கிணைத்து மாணவர்களின் மூலம் நாட்டிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆசிரியை ரேணுகா பயிற்சியில் 6ம் வகுப்பு மாணவன் ஜெய்சரண் போதைப் பொருள் விழிப்புணர்வு உரையை அழகாக எடுத்துக் கூறினார்.

    • மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கடைகளை உடனடியாக சீல் வைக்கப்பட்டு வர்த்தகம் நிறுத்தப்படும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:

    தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான்மசாலா போன்ற பொருட்கள் புற்று நோயை உண்டாக்குவதால் அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்து புகையிலை பொருட்களை விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், கடைகளை உடனடியாக சீல் வைக்கப்பட்டு வர்த்தகம் நிறுத்தப்படும். உணவகங்களில் அதிகப்படியான செயற்கை நிறமிகள் கலக்கப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாம்பழம், அன்னாச்சி, பப்பாளி, வாழைப்பழம் மற்றும் சப்போட்டா போன்ற பழ வகைகளை செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ அல்லது செயற்கை வேதிப் பொருட்களை தெளித்தோ (எத்திப்பான், எத்திலின்) பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோரின் கடையை சீல் வைத்து 3 மாத காலம் வரை வர்த்தகத்தை நிறுத்திவைக்க சட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சப் -இன்ஸ்பெக்டர் மாசிலமணி மற்றும் போலிசார் கருங்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை இருந்தது.

    கடலூர்:

    வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா உத்தரவின்பேரில் சப் -இன்ஸ்பெக்டர் மாசிலமணி மற்றும் போலிசார் கருங்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் விருத்தாசலத்திலிருந்து ேஜாதிராமலிங்கம் மற்றும் அவரது உறவினர் சுந்தரமூர்த்தி உடன் மோட்டார் சைக்கிளில் பொருட்களுடன் கருங்குழியில் உள்ள தனது கடைக்கு வந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரிடம் சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை இருந்தது. உடனே போலீசார் வழக்குபதிவு செய்து ஜோதிராமலிங்கம் மற்றும் சுந்தரமூர்த்தியை கைது செய்தனர்.

    • திருமண மண்டபம் அருகே மளிகை கடையில் போதை பொருட்கள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ழுப்புரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்திலிருந்து புதுவை செல்லும் சாலை அனிச்சம் பாளையம் பாலிமர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக விழுப்புரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பால சிங்கம் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட தில் விழுப்புரம் மருதூர் எம்.ஆர்.கே தெருவை சேர்ந்த சதாம் உசேன் (வயது 30), தனியார் மண்ட பம் எதிரே உள்ள மளிகை கடையில் விற்பனைக்காக வைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 382 பாக்கெட் போதை மற்றும் குட்கா பொரு ட்களை கைப்பற்றிய விழு ப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சதாம் உசேனை கைது செய்தனர்.

    • கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது விற்பனைகளுக்கு எதிராகவும் சிறப்பு சோதனைகளை நடத்தி குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
    • தகவல் கொடுக்கும் பொது மக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் வகையில் போதைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும் போலீசாரால் புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது விற்பனைகளுக்கு எதிராகவும் சிறப்பு சோதனைகளை நடத்தி குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக கள்ளச் சாராயம், போலி மதுபானம், கஞ்சா மற்றும் மெத்தனால் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடத்தி வருபவர்கள் பதுக்கி வைப்பவர்கள் தொடர்பான புகாரை போலீசாரிடம் பொதுமக்கள் தெரிவிக்க செல்போன் எண்களை சென்னை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

    மதுவிலக்கு அமலாக்க பிரிவு வடக்கு மண்டலத்தில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை புளியந்தோப்பு காவல் மாவட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் 8072864204 என்ற செல்போன் எண்ணிலும், மேற்கு மண்டலத்தில் அண்ணா நகர், கொளத்தூர், கோயம்பேடு காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 9042380581 என்ற செல்போன் எண்ணிலும், தெற்கு மண்டலத்தில் அடையாறு, புனித தோமையர் மலை, தி.நகர் காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 9042475097 என்ற செல்போன் எண்ணிலும், கிழக்கு மண்டலத்தில் திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம், மயிலாப்பூர் காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 6382318480 என்ற செல்போன் எண்ணிலும் பொது மக்கள் தொடர்பு கொண்டு வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என சென்னை காவல் துறை தெரிவித்து உள்ளது.

    தகவல் கொடுக்கும் பொது மக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • கஞ்சா போன்ற போதை பொருட்களை யாராவது வைத்து இருப்பதாக தெரிந்தால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
    • தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.

    ஊத்துக்கோட்டை:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வரவேற்பாளர் அறை அமைக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி ஊத்துக்கோட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் வரவேற்பாளர் அறை புதிதாக கட்டப்பட்டது. இதனை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    போலீசார் பொது மக்களிடம் நண்பர்களாக பழக வேண்டும். அதேபோல் பொதுமக்கள் வழக்கு விசாரணையின் போதும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் போலீசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    தங்களது பகுதிகளில் சந்தேகிக்கும் படியான நபர்கள் யாராவது திரிந்தால் உடனே அருகே உள்ள போலீஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும்.

    மேலும் கஞ்சா போன்ற போதை பொருட்களை யாராவது வைத்து இருப்பதாக தெரிந்தால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் பேசினார். நிகழ்ச்சி யில் இன்ஸ் பெக்டர் சத்ய பாமா, சப்-இன்ஸ் பெக்டர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோட்டுச்சேரி வடமட்டம் பகுதியில் இயங்கிவரும் மளிகை கடை ஒன்றில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாகதகவல் வந்தது.
    • , ரூ.250 மதிப்பிலான ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வடமட்டம் பகுதியில் இயங்கிவரும் மளிகை கடை ஒன்றில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாக வந்த தகவலின் பேரில், கோட்டுச்சேரி போலீசார், குறிப்பிட்ட மளிகை கடையில் சோதனை செய்தனர். அப்போது, ரூ.250 மதிப்பிலான ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் அல்லிராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் நடந்தது
    • துண்டு பிரசுரங்கள் விநியோகம்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    மேலும் ரெயில்வே போலீசார் நடத்திய போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரெயில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதனை அடுத்து கல்லூரி மாணவர்கள் மூலம் ரெயில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் போதைப்பொருள் தடுப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • டிரோனில் 5 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • பாகிஸ்தானின் டிரோன்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

    பஞ்சாப் மாநிலம் டர்ன்தரான் மாவட்டத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே வயல் வெளியில் டிரோன் ஒன்று கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தபோது அதில் 5 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீஸ் தலைமை இயக்குனர் சவுரவ் யாதவ் கூறும்போது, "5 கிலோ எடையுள்ள ஹெராயின் அடங்கிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஹெக்சாகாப்டர் டிரோனை போலீசார் கைப்பற்றினர்" என்றார்.

    கடந்த 28ம் தேதி அமிர்தசரஸ் மற்றும் டர்ன் தரான் மாவட்டங்களில் ஊடுருவிய இரண்டு பாகிஸ்தானின் டிரோன்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கலெக்டர் உத்தரவு
    • போதை பொருட்கள் விற்றால் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் போதை பொருட்களாக கருதப்படும் ஹான்ஸ் மற்றும் குட்கா, புகையிலை ஆகியவை விற்பனை செய்வதை ஏற்கனவே தடைசெய்யப்பட்டு அமுலில் உள்ளது.

    சில வியாபாரிகள் கள்ளத்தனமாக தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

    இதையடுத்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சோதனையின்போது மேற்படி பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மற்றும் கடையின் உரிமத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் தங்கள் கடைகளின் முன்பு பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையில் "இங்கு ஹான்ஸ், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதில்லை" என்ற அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காரைக்கால் திருப்பட்டினத்தில் பெட்டிக்கடையில் பதுக்கிய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • செந்தில்குமார்(வயது37) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திரு.பட்டினம் கெம்பிளாஸ் ட்தொழிற்சாலை பகுதியில் புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, திரு ப்பட்டினம் போலீசாருக்கு ரகசியத்தகவல் சென்றது. அதன்பேரில், சப்.இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில், அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக திருப்பட்டினம் முதலிமேட்டைச்சேர்ந்த செந்தில்குமார்(வயது37) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மதிப்பிலான 140 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு குட்கா விற்றதால் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 21 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 2021-ம் ஆண்டு மே 23-ம் தேதி வரை 799.8 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்து காவல் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    தமிழகத்தில் போதை பொருட்கள் இருக்க கூடாது என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலினின் எண்ணம்.

    குட்கா இருக்கக் கூடாது என்பதற்காக எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே பேரவையில் சுட்டிக் காட்டியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

    தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.6 கோடி மதிப்பிலான 102 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு குட்கா விற்றதால் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 21 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்? - இன்று அறிவிப்பு வெளியாகிறது
    ×