search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் எச்சரிக்கை"

    • பட்டாசு தயாரிப்பில் விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் சமீப காலமாக பட்டாசு தொழிற் சாலைகளில் ஆங்காங்கே வெடிவிபத்துகள் ஏற்பட்டு அதிக எண்ணிக்கையில் உயிர்பலிகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் குறுகிய காலத்தில் உற்பத்தியை அதிகப்படுத்த பணியை விரைவாக மேற்கொள்வதாலும், அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதாலும், பாது காப்பான செய்முறைகள் அறியாத புதிய நபர்களை பணிக்கமர்த்தி பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப் படுவதே காரணம் எனத் தெரிய வருகிறது.

    சமீபகால உயிரிழப்பு களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மாநில மற்றும் மாவட்ட அளவிலான பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. விபத்துகளை ஆராய்ந்தும், இதர பாதுகாப்பு கூறுகளை மாநில, மாவட்ட அளவி லான பாதுகாப்பு குழுக்கள், முன்னெடுத்து அவ்வப் போது பரிந்துரைக்கும் விதிமுறைகளை பட்டாசு உற்பத்தி யாளர்கள், விற்பனை நிலையங்கள், குடோன் உரிமையாளர்கள் தவறாது பின்பற்றி செயல்படுத்த வேண்டும்.

    அரசு வகுத்த சட்ட விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டு தல்களை பின்பற்றாத நிறுவனங்கள் எதுவும் சிறப்புக்குழு அலுவலர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளின் போது அறியப்பட்டால் உற்பத்திக்கு தடை, நிறுவனங்களை மூடுதல் போன்ற கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    எனவே தொழிற்சாலை நிர்வாகங்கள், விற்பனை மையங்கள் பாதுகாப்பு விதிமுறைகளையும், உரிய விதிகளின்படி அனும திக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே உற்பத்தி மேற்கொள்வதை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடவடிக்கைகள் மேறகொண்டு வருகின்றனர்.
    • 29- ந்தேதி ஆய்வு மேற்கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரின் அறிவுறுத்தலின்படி, உணவு பாதுகாப்பு துறையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு தனியார் உண வகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் உண வின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதோடு, தரமற்ற உணவு பொருட்களை அழித்து தொடர்புடைய உணவ கங்கள் மீது நடவடிக்கைகள் மேறகொண்டு வருகின்றனர். அதன்படி சின்ன சேலத்தில் உள்ள தனியார் உணவகத்தில் உணவு பாது காப்பு துறை அலுவலர்கள் 29- ந் தேதி ஆய்வு மேற் கொண்டனர். அப்போது அரசின் முத்திரையிடப் பட்ட, அரசால் அங்கன்வாடி குழந்தை களுக்கு வழங்கக் கூடிய 2 அட்டை முட்டைகள் உணவகங்களில் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த தனியார் உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களால் அபராதம் விதித்தனர். மேலும் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் உணவகத்தில் வேலை செய்யும் சபரி கடலூர் மாவட்டம் மங்களூர், ஒரங்கூர் மற்றும் குடிகாடு பகுதியில் இருந்து உணவ கத்திற்கு முட்டை வாங்கி வந்தது விசாரனை மூலம் உறுதி செய்யப்பட்டது. அரசின் விதிமுறைகளை மீறி முட்டை பயன்படுத்தி யதற்காக, அந்த உணவ கத்திற்கு, மாவட்ட கலெக்ட ரின் அறிவுரையின் படி, வருவாய் துறையினர் மூலம் சீல்வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 1,160 அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

    அங்கன்வாடி மையம் மற்றும் சத்துணவுகளில் தமிழக அரசு குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கக் கூடிய முட்டை களை விற்பனை செய்தாலோ அல்லது வெளியிடங்களுக்கு எடுத்துச் சென்றாலோ, தனியார் உணவு நிறு வனங்கள் வாங்கி பயன்படுத்தினாலும் அவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து அனைத்து துறை அலுவ லர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது.
    • பஸ் நிலையத்தினுள் பஸ்கள் நிறுத்தத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து அனைத்து துறை அலுவ லர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திண்டுக்கல் மாவட்ட த்தின் சட்டம் ஒழுங்கை பேணி பராமரித்திடவும், பாதுகாப்பான சாலை போக்குவரத்தை உறுதி செய்திடவும், மாநகரின் முக்கிய வீதிகளில் 2 சக்கரம் மற்றும் 4 சக்கர வாக னங்களை பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி நிறுத்துவதற்கும், பஸ் நிலையத்தினுள் பஸ்கள் நிறுத்தத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதை தடுப்பதற்கும், மேலும் வாகனங்களை முறையாக நிறுத்துவதற்கு சங்கிலிகள் அமைத்து தனியாக இடம் ஒதுக்கி வாகனங்கள் நிறுத்துவதை கண்காணி க்கவும், விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்மந்த ப்பட்ட அலுவல ர்கள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    சாலைகளில் வேகத்தடை கள், வாகனத்தடுப்புகள் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு எளிதில் தெரியும் வகையில் ஒளிரும் பட்டைகளுடன் அமைக்க வேண்டும். மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், வாகன ஓட்டிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும், ஒளிரும் ஒட்டுவில்லைகளை முக்கிய இடங்களில் அமைப்பதற்கும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போக்குவரத்துகளை சீர்படுத்துவதற்கும் துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பொது மக்களிட மிருந்து பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாகவும், கோரிக்கைகள் மீதான நடவடிக்கையை குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சம்மந்தப்பட்ட அலுவல ர்களை அனுப்பி வைக்க வேண்டும். அரசு விதிமுறை களை பின்பற்றாமல் உள்ளவர்களை கண்டறிந்து காவல்துறையினர் நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    • கடலூர் மாவட்ட தனியார்பஸ் உரிமயாளர்கள் கலந்தாய்வு கூட்டம், கடலூரில் நடைபெற்றது.
    • அனுமதிக்கப் பட்ட தடத்தில் மட்டுமே பஸ்களை இயக்கவேண்டும்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டத்தில் இரு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்து குறித்தும், பஸ்களின் மீது பெறப்படும் தொடர் புகார்கள் குறித்தும் கலெக்டர் அருண் தம்பு ராஜ் தலைமையில் கடலூர் மற்றும் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலு வலர்கள் மற்றும் கடலூர் மாவட்ட தனியார்பஸ் உரிமயாளர்கள் கலந்தாய்வு கூட்டம், கடலூரில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்ததாவது:-

    கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் இயக்கம் தொடர் பாக தினந்தோறும் பல்வேறு புகார்கள் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மீது பெறப்படுகிறது. மேல்பட்டாம் பாக்கம்பஸ் விபத்து டிரைவரின் அஜாக்கிரதையால் நடை பெற்றுள்ளது. எனவே இம்மாவட்டத்தில்பஸ் உரிமையாளர்கள் இனி வருங்காலங்களில் கீழ்கண்ட அறிவுரைகளை தவறாது கடைபிடித்து வாகனங்களை இயக்க அறிவுறுத்தி னார். அரசால் நிர்ணயிக்கப் பட்ட வேக வரம்பை மீறி அதிவேகமாக பஸ்களை இயக்ககூடாது. வேக கட்டுப்பாட்டு கருவியை முறையாக பயன்படுத்த வேண்டும். மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் அனுமதிக்கப் பட்ட தடத்தில் மட்டுமே பஸ்களை இயக்கவேண்டும். பயணிகளிடம் அனுமதிக் கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதிவேகமாகவும், சாலையில் செல்லும் பிற வாகனங்களை அச்சுறுத்தும் வகையில்க பஸ்களை இயக்கக்கூடாது. அனுமதிக்கு புறம்பாக காற்று ஒலிப்பான்கள், பல்ஒலிப்பான்கள் பயன் படுத்தக்கூடாது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பயணி களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளக்கூடாது. அனுமதிக்கப்பட்ட நிறுத்தங் களில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். மேலும் பஸ்கள் இயக்கம் தொடர்பான அனைத்து விதிமுறைகளை யும் கடைபிடித்து வாகனங் களை இயக்க வேண்டும்.

    மேற்காணும் அறிவுரை களை தவறாது கடைபிடித்து பஸ்களை இயக்கவேண்டும். இக்கூட்டத்தின் வயிலாக பஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்து நர்களுக்கும் முதல் வாய்ப்பு வழங்குவதாகவும் தவறும் பட்சத்தில் அனுமதி சீட்டின் மீதும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் உரிமத்தின் மீது மோட்டர் வாகன சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே கடலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் அனைத்தும் அனு மதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படுவது குறித்து, அவ்வப்போது திடீர் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி மோட்டார் வாக னங்கள் சட்ட விதிகளுக்கு புறம்பாக இயக்கப்படும் பஸ்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

    • கள்ளச்சாராயம் தொட ர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கள்ளச்சாரயத்தை முற்றிலும் ஒழித்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறை, வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்ததாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறை, வருவாய்துறை, மதுவிலக்கு அமல்பிரிவு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மற்றும் வனத்துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

    கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட கள்ளச்சாராயம் தொட ர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் கள்ளச்சாராயம் தொடர்பான புகாரினை 63690-28922 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம்.

    கள்ளச்சாராயம் காய்ச்சு பவர்களை அந்தத் தொழிலிலிருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்ப டுத்தி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கிட சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் மூலமாக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு காவல்துறை, வருவாய்த்துறை, வனத்து றை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கள்ளச்சாரயத்தை முற்றிலும் ஒழித்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், வருவாய் கோட்டாட்சியர்கள் கீதாராணி (தருமபுரி), வில்சன் ராஜசேகர் (அரூர்), மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) மகேஸ்வரி, உதவி ஆணையர் கலால் (பொ) சாந்தி, அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டா ட்சியர்கள், மருத்து வத்துறை, வனத்துறை உள்ளிட்ட தொடர்புடைய அலு வலர்கள் கலந்துகொண்டனர்.

    • மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கடைகளை உடனடியாக சீல் வைக்கப்பட்டு வர்த்தகம் நிறுத்தப்படும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:

    தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான்மசாலா போன்ற பொருட்கள் புற்று நோயை உண்டாக்குவதால் அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்து புகையிலை பொருட்களை விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், கடைகளை உடனடியாக சீல் வைக்கப்பட்டு வர்த்தகம் நிறுத்தப்படும். உணவகங்களில் அதிகப்படியான செயற்கை நிறமிகள் கலக்கப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாம்பழம், அன்னாச்சி, பப்பாளி, வாழைப்பழம் மற்றும் சப்போட்டா போன்ற பழ வகைகளை செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ அல்லது செயற்கை வேதிப் பொருட்களை தெளித்தோ (எத்திப்பான், எத்திலின்) பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோரின் கடையை சீல் வைத்து 3 மாத காலம் வரை வர்த்தகத்தை நிறுத்திவைக்க சட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சாதி சான்றிதழை புகைப்படத்துடன் கூடிய சான்றிதழாக வருகிற 16-ந்தேதிக்குள் மாற்றி கொள்ள வேண்டும் என்று தகவல் பரவி வருகிறது.
    • போலியான தகவல்களை பரப்பும் இ-சேவை மையங்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசின் சின்னத்துடன் வாட்ஸ்-அப்பில் அரசின் புதிய ஆணைப்படி பழைய மற்றும் புகைப்படம் இல்லாமல் இருக்கும் சாதி சான்றிதழை புகைப்படத்துடன் கூடிய சான்றிதழாக வருகிற 16-ந்தேதிக்குள் மாற்றி கொள்ள வேண்டும் என்று தகவல் பரவி வருகிறது.

    இதுபோன்ற எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற போலியான தகவல்களை பரப்பும் இ-சேவை மையங்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மலை கிராமங்களில் இளம் வயது திருமணம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்துள்ளது.
    • உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக உருவாக்க முடியும்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா தொட்டமஞ்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது. ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா திட்ட விளக்கவுரையாற்றினார். தளி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    இதில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள, நல உதவிகள் பெறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக எடுத்து கூறினார்கள்.

    முகாமில் கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசியதாவது:-

    தொட்டமஞ்சி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களிட மிருந்து கடந்த வாரம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களுக்கு தீர்வு காணும் விதமாக தகுதியான 273 மனுக்களுக்கு இன்று ரூ.9 இலட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த மலைகிராம பகுதியில் கல்வியறிவு 57 சதவிகிதமாக உள்ளதால் தங்களுடைய குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் தளி பகுதியில் அரசு கலைக்கல்லூரி மற்றும் தொழிற்நுட்ப கல்லூரிகளை தொடங்கி வைத்துள்ளார்.

    மேலும், பெண்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே, பொதுமக்கள் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் இதுபோன்ற திட்டங்கள் மூலம் தங்களது குழந்தைகளுக்கு கல்வியறிவு அளித்து சமுதாயத்தில் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும்.

    மேலும், இம்மலை கிராமங்களில் இளம் வயது திருமணம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்துள்ளது. இக்குழந்தை திருமணத்தை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை திருமணம் செய்வோர் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதனால் கல்வி இடைநிற்றலை தடுக்க முடியும். உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த முகாமில் 273 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 58 ஆயிரத்து 816 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகள் சார்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    இதில் தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உதவி இயக்குநர் (நில அளவை) சேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கனகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் நாகரத்தினம், விமல்ரவிக்குமார், தாசில்தார் அனிதா, துணை தாசில்தார்கள் சந்திரன், முருகன், கணேசன், வருவாய் ஆய்வாளர்கள் ரேணுகா, ரமேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆசிரியர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
    • மதிய உணவு தரமாக உள்ளதா என ஆய்வு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மருசூர் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 156 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை உட்பட 6 ஆசிரியர் ஆசிரியை பணிபுரிந்து வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தச்சூர், வேலப்பாடி, அரையாளம், ஆரணி டவுன், உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மருசூர் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது 3ம் வகுப்பறைக்குச் சென்ற முருகேஷ் 6-வது வாய்ப்பாடு தெரியுமா என்று கேட்டார். அதற்கு மாணவ மாணவிகள் அனைவரும் தெரியாது என்று கையை உயர்த்தி பதிலளித்தனர். இதனால் கலெக்டர் அதிர்ச்சியடைந்தார்.

    இதனையொடுத்து வகுப்பறைக்கு சென்ற கலெக்டர் 10-ம் வாய்ப்பாடு தெரியுமா என்று கேட்டதற்கு மாணவ மாணவிகள் தெரியாது என்று பதில் அளித்தனர். இதைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களை அழைத்து மாணவர்களுக்கு ஏற்றாற் போல் பாடத்தை நடத்தி புரிய வைக்க வேண்டும் என்று கலெக்டர் கண்டித்தார்.

    அடுத்த முறை நான் பள்ளிக்கு வரும் போது மாணவ மாணவிகள் அனைவரும் 1-ம் வாய்ப்பாடு முதல் 12-ம் வாய்ப்பாடு வரை மாணவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

    சத்துணவு கூடத்திற்கு சென்று மாணவ மாணவிகளுக்கு வழங்கபட்டு வரும் மதிய உணவை தரமாக உள்ளதா என உணவை உண்டு ஆய்வு செய்தார். 

    • உரங்களுடன் இணை பொருட்கள் வாங்க வற்புறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
    • கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் யூரியா 1991 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 841 மெட்ரிக் டன், பொட்டாஷ் 574 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 2,028 மெட்ரிக் டன் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உரங்கள் அரசு நிர்ணயம் செய்த விலையிலேயே தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உரங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலையில் பிஓஎஸ் எந்திரங்கள் மூலமாக பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்களை விவசாயிகளின் ஆதார் எண்ணை பதிவு செய்து விற்க வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்களை தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும். விவசாயிகள் உரங்கள் வாங்கும் போது உரிய ரசீது பெற வேண்டும்.

    மேலும் இருப்பு விபரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். உரங்களுடன் நேனோ யூரியா போன்ற இணை பொருட்களை விவசாயி களுக்கு கட்டாயப்படுத்தி வழங்கக்கூடாது.

    உரிய ஆவணமின்றி உர விற்பனையில் ஈடுபடக்கூடாது. இதனை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேலூர் கலெக்டர் எச்சரிக்கை
    • கரும்பை எடுத்து செல்பவர்கள் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டம் அம்முண்டி கிராமத்தில் அமைந்துள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு அரைவை பருவத்திற்கு 5990 ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 2021-22ம் ஆண்டில் அரைவை செய்த அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் கரும்பு கிரயத்தொகை நிலுவை ஏதும் இல்லாமல் தமிழக அரசின் கரும்பை நிதி உதவியோடு வழங்கப்பட்டுள்ளது.

    பதிவு செய்யப்பட்ட ஆலை துணை விதிக ளுக்கு புறம்பாக எடுத்துச் செல்ல சில இடைத்தரகர்கள் மற்றும் வெல்லம் காய்ச்சம் ஆலை உரிமையாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இது சட்டபடி குற்றமாகும். இதனால் ஆலைக்கு பெருத்த நட்டம் ஏற்படுவதுடன் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பை முறைகேடான வகையில் வெளிச்சந்தையிலோ அல்லது வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கோ விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கும் ஆலை நிர்வாகத்திற்கும் புகார்கள் வருகின்றன.

    முறை கேடுகளில் ஈடுபடும் சங்கத்தினர்கள், இடைத்தரகர்கள் மற்றும் வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் மீது கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆலைப்பகுதிக்கு உட்பட்ட பதிவு மற்றும் பதிவு செய்யாத கரும்பை எடுத்து செல்பவர்கள் உரிய கோட்ட கரும்பு அலுவலரிடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும். அதன்பிறகே தங்களது கரும்பை வாகனங்களில் ஏற்றி செல்ல வேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்களை போலீசார் மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பேக்கரி கடைகளில் இனிப்பு மற்றும் கார வகை தின்பண்ட பொட்டலங்களில் காலாவதியாகும் தேதி நுகா்வோருக்கு எளிதில் தெரியும் வகையில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
    • காலாவதியான உணவு வகைகளை பயன்படுத்துதலை தடுத்தல் உள்ளிட்டவை தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வழங்கல் துறை சாா்பில், நுகா்வோா் குறைதீா் கூட்டம் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது.

    இதில், உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் தரம், பயன்பாடு, தரத்தில் குறைபாடுகள் போக்குதல், காலாவதியான உணவு வகைகளை பயன்படுத்துதலை தடுத்தல் உள்ளிட்டவை தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் பேசியதாவது:-

    பேக்கரி கடைகளில் இனிப்பு மற்றும் கார வகை தின்பண்ட பொட்டலங்களில் காலாவதியாகும் தேதி நுகா்வோருக்கு எளிதில் தெரியும் வகையில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு தேதி குறிப்பிடாத கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். நுகா்வோா் வழங்கும் புகாா் மனுவினை முறையாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் கூட்டுறவுத் துறைகளின் இ-சேவை மையங்களில் அரசால் நிா்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் மட்டும் வசூ லிக்கப்பட்டு வருகிறது. புகாா் மனுக்களின் மீது அபராதம் மற்றும் இயக்கத் தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டப் பேரவை எம்.எல்.ஏ. ஈஸ்வரன், மாவட்ட வழங்கல் அலுவலா் ரமேஷ், துறை சாா்ந்த அலுவலா்கள், நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    ×