search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-கலெக்டர் எச்சரிக்கை
    X

    விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-கலெக்டர் எச்சரிக்கை

    • பட்டாசு தயாரிப்பில் விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் சமீப காலமாக பட்டாசு தொழிற் சாலைகளில் ஆங்காங்கே வெடிவிபத்துகள் ஏற்பட்டு அதிக எண்ணிக்கையில் உயிர்பலிகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் குறுகிய காலத்தில் உற்பத்தியை அதிகப்படுத்த பணியை விரைவாக மேற்கொள்வதாலும், அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதாலும், பாது காப்பான செய்முறைகள் அறியாத புதிய நபர்களை பணிக்கமர்த்தி பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப் படுவதே காரணம் எனத் தெரிய வருகிறது.

    சமீபகால உயிரிழப்பு களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மாநில மற்றும் மாவட்ட அளவிலான பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. விபத்துகளை ஆராய்ந்தும், இதர பாதுகாப்பு கூறுகளை மாநில, மாவட்ட அளவி லான பாதுகாப்பு குழுக்கள், முன்னெடுத்து அவ்வப் போது பரிந்துரைக்கும் விதிமுறைகளை பட்டாசு உற்பத்தி யாளர்கள், விற்பனை நிலையங்கள், குடோன் உரிமையாளர்கள் தவறாது பின்பற்றி செயல்படுத்த வேண்டும்.

    அரசு வகுத்த சட்ட விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டு தல்களை பின்பற்றாத நிறுவனங்கள் எதுவும் சிறப்புக்குழு அலுவலர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளின் போது அறியப்பட்டால் உற்பத்திக்கு தடை, நிறுவனங்களை மூடுதல் போன்ற கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    எனவே தொழிற்சாலை நிர்வாகங்கள், விற்பனை மையங்கள் பாதுகாப்பு விதிமுறைகளையும், உரிய விதிகளின்படி அனும திக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே உற்பத்தி மேற்கொள்வதை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×