search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Collector Alert"

  • பட்டாசு தயாரிப்பில் விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  விருதுநகர்

  விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  தமிழகத்தில் சமீப காலமாக பட்டாசு தொழிற் சாலைகளில் ஆங்காங்கே வெடிவிபத்துகள் ஏற்பட்டு அதிக எண்ணிக்கையில் உயிர்பலிகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் குறுகிய காலத்தில் உற்பத்தியை அதிகப்படுத்த பணியை விரைவாக மேற்கொள்வதாலும், அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதாலும், பாது காப்பான செய்முறைகள் அறியாத புதிய நபர்களை பணிக்கமர்த்தி பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப் படுவதே காரணம் எனத் தெரிய வருகிறது.

  சமீபகால உயிரிழப்பு களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மாநில மற்றும் மாவட்ட அளவிலான பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. விபத்துகளை ஆராய்ந்தும், இதர பாதுகாப்பு கூறுகளை மாநில, மாவட்ட அளவி லான பாதுகாப்பு குழுக்கள், முன்னெடுத்து அவ்வப் போது பரிந்துரைக்கும் விதிமுறைகளை பட்டாசு உற்பத்தி யாளர்கள், விற்பனை நிலையங்கள், குடோன் உரிமையாளர்கள் தவறாது பின்பற்றி செயல்படுத்த வேண்டும்.

  அரசு வகுத்த சட்ட விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டு தல்களை பின்பற்றாத நிறுவனங்கள் எதுவும் சிறப்புக்குழு அலுவலர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளின் போது அறியப்பட்டால் உற்பத்திக்கு தடை, நிறுவனங்களை மூடுதல் போன்ற கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  எனவே தொழிற்சாலை நிர்வாகங்கள், விற்பனை மையங்கள் பாதுகாப்பு விதிமுறைகளையும், உரிய விதிகளின்படி அனும திக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே உற்பத்தி மேற்கொள்வதை பின்பற்ற வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • நடவடிக்கைகள் மேறகொண்டு வருகின்றனர்.
  • 29- ந்தேதி ஆய்வு மேற்கொண்டனர்.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரின் அறிவுறுத்தலின்படி, உணவு பாதுகாப்பு துறையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு தனியார் உண வகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் உண வின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதோடு, தரமற்ற உணவு பொருட்களை அழித்து தொடர்புடைய உணவ கங்கள் மீது நடவடிக்கைகள் மேறகொண்டு வருகின்றனர். அதன்படி சின்ன சேலத்தில் உள்ள தனியார் உணவகத்தில் உணவு பாது காப்பு துறை அலுவலர்கள் 29- ந் தேதி ஆய்வு மேற் கொண்டனர். அப்போது அரசின் முத்திரையிடப் பட்ட, அரசால் அங்கன்வாடி குழந்தை களுக்கு வழங்கக் கூடிய 2 அட்டை முட்டைகள் உணவகங்களில் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.

  இதனை தொடர்ந்து அந்த தனியார் உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களால் அபராதம் விதித்தனர். மேலும் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் உணவகத்தில் வேலை செய்யும் சபரி கடலூர் மாவட்டம் மங்களூர், ஒரங்கூர் மற்றும் குடிகாடு பகுதியில் இருந்து உணவ கத்திற்கு முட்டை வாங்கி வந்தது விசாரனை மூலம் உறுதி செய்யப்பட்டது. அரசின் விதிமுறைகளை மீறி முட்டை பயன்படுத்தி யதற்காக, அந்த உணவ கத்திற்கு, மாவட்ட கலெக்ட ரின் அறிவுரையின் படி, வருவாய் துறையினர் மூலம் சீல்வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 1,160 அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

  அங்கன்வாடி மையம் மற்றும் சத்துணவுகளில் தமிழக அரசு குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கக் கூடிய முட்டை களை விற்பனை செய்தாலோ அல்லது வெளியிடங்களுக்கு எடுத்துச் சென்றாலோ, தனியார் உணவு நிறு வனங்கள் வாங்கி பயன்படுத்தினாலும் அவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

  • மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  • கடைகளை உடனடியாக சீல் வைக்கப்பட்டு வர்த்தகம் நிறுத்தப்படும்.

  கடலூர்:

  கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:

  தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான்மசாலா போன்ற பொருட்கள் புற்று நோயை உண்டாக்குவதால் அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்து புகையிலை பொருட்களை விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், கடைகளை உடனடியாக சீல் வைக்கப்பட்டு வர்த்தகம் நிறுத்தப்படும். உணவகங்களில் அதிகப்படியான செயற்கை நிறமிகள் கலக்கப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாம்பழம், அன்னாச்சி, பப்பாளி, வாழைப்பழம் மற்றும் சப்போட்டா போன்ற பழ வகைகளை செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ அல்லது செயற்கை வேதிப் பொருட்களை தெளித்தோ (எத்திப்பான், எத்திலின்) பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோரின் கடையை சீல் வைத்து 3 மாத காலம் வரை வர்த்தகத்தை நிறுத்திவைக்க சட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

  • கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
  • புகார் இருந்தால் 04562 - 252705 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  விருதுநகர்

  விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

  விருதுநகர் மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவை யான உரங்கள் யூரியா 3279 மெ.டன்னும், டி.ஏ.பி. 884 மெ.டன்னும், பொட்டாஷ் 264 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 1714 மெ.டன்னும், எஸ்எஸ்பி 263 மெ.டன்னும் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

  விவசாயிகள் தழைச்சத்து மட்டுமே உள்ள யூரியா உரத்தினை மட்டும் பயிர்க ளுக்கு பயன்படுத்தாமல், பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்து உரங்கள், நன்றாக மகசூல் பெறுவதற்கு தேவையான மணிச்சத்து உரங்கள், பயிர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெற தேவையான சாம்பல் சத்து உரங்களை மேலும், இந்த 3 சத்துக்களும் கலந்த காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தி பயன்பெற அறிவுறுத்தப்படுகிறது.

  மேலும் இம்மூன்று சத்துக்களும் பயிர்களுக்கு சமச்சீராக கிடைக்கும் வகையில் விவசாயிகள் உரமிட அறிவுறுத்தப்படு கிறது. அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட விற்பனை விலையிலேயே உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுபாட்டு சட்டம் 1985-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  விவசாயிகளிடம் ஆதார் எண் பெற்று, விற்பனை முனைய கருவியில் கைரேகை பதிவு செய்தும், ரசீது வழங்கியும், சாகுபடி செய்யப்படும் பயிருக்கு தேவைப்படும் உரங்களை மட்டுமே உர விற்பனை யாளர்கள் வழங்க வேண்டும்.

  மானிய உரங்கள் விற்பனை செய்யும் போது சில உர விற்பனையாளர்கள், விவசாயிகளின் விருப்பதிற்கு மாறாக இதர இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதால் விவசாயி களுக்கு கூடுதல் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது.

  விவசாயிகள் கேட்கும் உரங்கள் மட்டுமே வழங்க வேண்டும். உரங்களின் விலை, இருப்பு விபரங்கள் விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகையில் தினமும் குறிப்பிட வேண்டும்.

  பிற மாநிலம் மற்றும் பிற மாவட்ட விவசாயிகளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் உரங்கள் வழங்கக் கூடாது. உரக்கட்டுப்பாட்டு சட்டத் திற்குட்பட்டு விற்பனை செய்ய வேண்டும். விதிமீறல் கள் கண்டறியப்படும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது டன் விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

  உரங்கள் மற்றும் உர விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால் 04562 - 252705 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

  • ஆசிரியர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
  • மதிய உணவு தரமாக உள்ளதா என ஆய்வு

  ஆரணி:

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மருசூர் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 156 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை உட்பட 6 ஆசிரியர் ஆசிரியை பணிபுரிந்து வருகின்றனர்.

  திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தச்சூர், வேலப்பாடி, அரையாளம், ஆரணி டவுன், உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

  அப்போது மருசூர் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது 3ம் வகுப்பறைக்குச் சென்ற முருகேஷ் 6-வது வாய்ப்பாடு தெரியுமா என்று கேட்டார். அதற்கு மாணவ மாணவிகள் அனைவரும் தெரியாது என்று கையை உயர்த்தி பதிலளித்தனர். இதனால் கலெக்டர் அதிர்ச்சியடைந்தார்.

  இதனையொடுத்து வகுப்பறைக்கு சென்ற கலெக்டர் 10-ம் வாய்ப்பாடு தெரியுமா என்று கேட்டதற்கு மாணவ மாணவிகள் தெரியாது என்று பதில் அளித்தனர். இதைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார்.

  பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களை அழைத்து மாணவர்களுக்கு ஏற்றாற் போல் பாடத்தை நடத்தி புரிய வைக்க வேண்டும் என்று கலெக்டர் கண்டித்தார்.

  அடுத்த முறை நான் பள்ளிக்கு வரும் போது மாணவ மாணவிகள் அனைவரும் 1-ம் வாய்ப்பாடு முதல் 12-ம் வாய்ப்பாடு வரை மாணவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

  சத்துணவு கூடத்திற்கு சென்று மாணவ மாணவிகளுக்கு வழங்கபட்டு வரும் மதிய உணவை தரமாக உள்ளதா என உணவை உண்டு ஆய்வு செய்தார். 

  • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை
  • வாடிவாசல் முதல் சேருமிடம் வரை ஓடும்பாதை அதிகபட்சமாக 100 மீட்டர் வரையே இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்

  வேலூர்:

  எருது விடும் விழாவில் காளைகளை ஒரு சுற்றுக்கு மேல் ஓடவிட்டால் காளையின் உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று வேலூர் கலெக்டர் குமார வேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழா அரசாணையில் அனு மதிக்கப்பட்ட நாள், இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

  காளை ஓடும்பாதைவாடிவாசல் முதல் சேருமிடம் வரை நீளம் அதிகபட்சமாக 100 மீட்டர் வரையே இருக்க வேண்டும். காளைகள் ஓடு தளம் இலகுவாகவும், அகலமாகவும் இருக்க வேண்டும். கண்டிப்பாக இரட்டை தடுப்பான்கள் அமைக்கப்பட வேண்டும்.

  ஓடு தளத்தில் அதிகபட்சமாக 25 தன்னார்வலர்கள் மட்டுமே அவர்களுக்கென சிறப்பான முறையில் தயார் செய்யப்பட்ட உடைகளுடன் சுழற்சி முறையில் அனுமதிக் கப்பட வேண்டும்.

  பொதுமக்கள் யாரும் ஓடு தளத்துக்குள் செல்ல அனுமதியில்லை. காளைகள் சேருமிடம் விசாலமாக இருக்க வேண்டும்.

  வாடிவாசல், விழா அரங்கம் ஆகியவற்றை முழுமையாக கண்காணிக்க கண்காணிப்பு கேமரா அல்லது வெப் கேமரா வசதியை ஏற்படுத்த வேண்டும். விழா நடை பெறும் இடத்திலிருந்து 5 கி.மீ. சுற்றளவில் உள்ள கிணறுகளை விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக மூட வேண்டும்.

  ஒரு காளை ஒரு சுற்று மட்டுமே அனுமதிக்கப்படும். அடுத்த சுற் றுக்கு ஓடவிட்டால் காளையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் ரூ.5,000 அப ராதமும் விதிக்கப்படும்.

  விழா முடிந்ததும் காளைக ளுக்கு கட்டாயமாக போதிய ஓய்வு அளித்தும், மருத்துவ பரி சோதனை மேற்கொண்ட பிறகே கொண்டு செல்ல வேண்டும்.

  அரசு பிறப்பித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விழாக் குழுவினரால் கடைப்பி டிக்கப்படுவது அரசு அலுவலர்க ளால் உறுதி செய்யப்பட்ட பிறகே, எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்கப்படும்.

  விதிமுறைகளை மீறும்பட்சத் தில் எருது விடும் விழா நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

  • உரங்களுடன் இணை பொருட்கள் வாங்க வற்புறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
  • கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  விருதுநகர்

  விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  விருதுநகர் மாவட்டத்தில் யூரியா 1991 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 841 மெட்ரிக் டன், பொட்டாஷ் 574 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 2,028 மெட்ரிக் டன் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  உரங்கள் அரசு நிர்ணயம் செய்த விலையிலேயே தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உரங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலையில் பிஓஎஸ் எந்திரங்கள் மூலமாக பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்களை விவசாயிகளின் ஆதார் எண்ணை பதிவு செய்து விற்க வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்களை தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும். விவசாயிகள் உரங்கள் வாங்கும் போது உரிய ரசீது பெற வேண்டும்.

  மேலும் இருப்பு விபரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். உரங்களுடன் நேனோ யூரியா போன்ற இணை பொருட்களை விவசாயி களுக்கு கட்டாயப்படுத்தி வழங்கக்கூடாது.

  உரிய ஆவணமின்றி உர விற்பனையில் ஈடுபடக்கூடாது. இதனை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • வேலூர் கலெக்டர் எச்சரிக்கை
  • கரும்பை எடுத்து செல்பவர்கள் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும்

  வேலூர்:

  வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  வேலூர் மாவட்டம் அம்முண்டி கிராமத்தில் அமைந்துள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு அரைவை பருவத்திற்கு 5990 ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மேலும் 2021-22ம் ஆண்டில் அரைவை செய்த அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் கரும்பு கிரயத்தொகை நிலுவை ஏதும் இல்லாமல் தமிழக அரசின் கரும்பை நிதி உதவியோடு வழங்கப்பட்டுள்ளது.

  பதிவு செய்யப்பட்ட ஆலை துணை விதிக ளுக்கு புறம்பாக எடுத்துச் செல்ல சில இடைத்தரகர்கள் மற்றும் வெல்லம் காய்ச்சம் ஆலை உரிமையாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இது சட்டபடி குற்றமாகும். இதனால் ஆலைக்கு பெருத்த நட்டம் ஏற்படுவதுடன் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

  சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பை முறைகேடான வகையில் வெளிச்சந்தையிலோ அல்லது வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கோ விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கும் ஆலை நிர்வாகத்திற்கும் புகார்கள் வருகின்றன.

  முறை கேடுகளில் ஈடுபடும் சங்கத்தினர்கள், இடைத்தரகர்கள் மற்றும் வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் மீது கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  ஆலைப்பகுதிக்கு உட்பட்ட பதிவு மற்றும் பதிவு செய்யாத கரும்பை எடுத்து செல்பவர்கள் உரிய கோட்ட கரும்பு அலுவலரிடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும். அதன்பிறகே தங்களது கரும்பை வாகனங்களில் ஏற்றி செல்ல வேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்களை போலீசார் மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • பேக்கரி கடைகளில் இனிப்பு மற்றும் கார வகை தின்பண்ட பொட்டலங்களில் காலாவதியாகும் தேதி நுகா்வோருக்கு எளிதில் தெரியும் வகையில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
  • காலாவதியான உணவு வகைகளை பயன்படுத்துதலை தடுத்தல் உள்ளிட்டவை தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

  நாமக்கல்:

  நாமக்கல் மாவட்ட வழங்கல் துறை சாா்பில், நுகா்வோா் குறைதீா் கூட்டம் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது.

  இதில், உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் தரம், பயன்பாடு, தரத்தில் குறைபாடுகள் போக்குதல், காலாவதியான உணவு வகைகளை பயன்படுத்துதலை தடுத்தல் உள்ளிட்டவை தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

  கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் பேசியதாவது:-

  பேக்கரி கடைகளில் இனிப்பு மற்றும் கார வகை தின்பண்ட பொட்டலங்களில் காலாவதியாகும் தேதி நுகா்வோருக்கு எளிதில் தெரியும் வகையில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு தேதி குறிப்பிடாத கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். நுகா்வோா் வழங்கும் புகாா் மனுவினை முறையாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் கூட்டுறவுத் துறைகளின் இ-சேவை மையங்களில் அரசால் நிா்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் மட்டும் வசூ லிக்கப்பட்டு வருகிறது. புகாா் மனுக்களின் மீது அபராதம் மற்றும் இயக்கத் தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டப் பேரவை எம்.எல்.ஏ. ஈஸ்வரன், மாவட்ட வழங்கல் அலுவலா் ரமேஷ், துறை சாா்ந்த அலுவலா்கள், நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

  • உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன் படி சட்ட நடவடிக்கை
  • கூட்டுறவு கடன் சங்கங்களின் உரிமங்கள் ரத்து

  சேலம்:

  சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லரை விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மற்றும் உரங்களுடன் சேர்த்து பிற பொருள்களை கட்டாயப்படுத்தி விவசாயி களுக்கு வழங்கும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன் படி சட்ட நடவடிக்கை தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.