search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selling eggs"

    • நடவடிக்கைகள் மேறகொண்டு வருகின்றனர்.
    • 29- ந்தேதி ஆய்வு மேற்கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரின் அறிவுறுத்தலின்படி, உணவு பாதுகாப்பு துறையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு தனியார் உண வகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் உண வின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதோடு, தரமற்ற உணவு பொருட்களை அழித்து தொடர்புடைய உணவ கங்கள் மீது நடவடிக்கைகள் மேறகொண்டு வருகின்றனர். அதன்படி சின்ன சேலத்தில் உள்ள தனியார் உணவகத்தில் உணவு பாது காப்பு துறை அலுவலர்கள் 29- ந் தேதி ஆய்வு மேற் கொண்டனர். அப்போது அரசின் முத்திரையிடப் பட்ட, அரசால் அங்கன்வாடி குழந்தை களுக்கு வழங்கக் கூடிய 2 அட்டை முட்டைகள் உணவகங்களில் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த தனியார் உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களால் அபராதம் விதித்தனர். மேலும் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் உணவகத்தில் வேலை செய்யும் சபரி கடலூர் மாவட்டம் மங்களூர், ஒரங்கூர் மற்றும் குடிகாடு பகுதியில் இருந்து உணவ கத்திற்கு முட்டை வாங்கி வந்தது விசாரனை மூலம் உறுதி செய்யப்பட்டது. அரசின் விதிமுறைகளை மீறி முட்டை பயன்படுத்தி யதற்காக, அந்த உணவ கத்திற்கு, மாவட்ட கலெக்ட ரின் அறிவுரையின் படி, வருவாய் துறையினர் மூலம் சீல்வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 1,160 அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

    அங்கன்வாடி மையம் மற்றும் சத்துணவுகளில் தமிழக அரசு குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கக் கூடிய முட்டை களை விற்பனை செய்தாலோ அல்லது வெளியிடங்களுக்கு எடுத்துச் சென்றாலோ, தனியார் உணவு நிறு வனங்கள் வாங்கி பயன்படுத்தினாலும் அவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • நாமக்கல் மண்டலத்தில் சுமார் 8 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
    • தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்ப டுகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 8 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்ப டுகின்றன. கடந்த 1 மாதத்திற்கு மேலாக முட்டை விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், கோழிப்பண்ணைத் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு பண்ணையா ளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) சார்பில் முட்டைக் கோழி பண்ணை யாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மண்டல என்.இ.சி.சி. துணைத் தலைவர் சிங்கராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மத்திய செயற்குழு உறுப்பினர் வாங்கிலி சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

    வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மண்டல அலுவலகத்தில், பண்ணையாளர்களிடம் கருத்துக்கணிப்பு வாக்குப் பதிவு நடத்தி அதன் அடிப்படையில் முட்டை விலையை நிர்ணயம் செய்வ தென்று முடிவு செய்யப்பட்டது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணை யாளர்களும், என்.இ.சி.சி. அறிவிக்கும் விலைக்கு, கோழி முட்டை வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள வியாபாரிகளுக்கு மட்டுமே, முட்டைகளை விற்பனை செய்வதென்று முடிவெடுக்கப்பட்டது.

    கோழி வியாபாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தி, முதிர்வு கோழிகளை லாபகரமான முறையில் விற்பனை செய்வது குறித்து முடிவெடுக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. பண்ணையாளர்கள் அனைவரும் வரும் காலங்களில் இணைந்து செயல்பட்டால் மட்டுமே கோழிப்பண்ணை தொழிலை லாபகரமாக நடத்த முடியும், எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவ

    தென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் திரளான கோழிப்பண்ணை யாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 1100 பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் மூலம் தினமும் 4.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.
    • நெஸ்பேக் அறிவிக்கும் மைனஸ் விலைக்கு மேல் விற்க வேண்டாம் என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

    நாமக்கல்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 1100 பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் மூலம் தினமும் 4.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டை, தமிழக சத்துணவு திட்டம், உள்ளூர், கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு, முட்டை கொள்முதல் விலையை வாரத்தில் ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களுக்கு நிர்ணயம் செய்கிறது. அதேபோல் நாமக்கல் முட்டை விலை நிர்ணய ஆலோசனை குழு கொள்முதல் விலையிலிருந்து குறைத்து விற்பனை செய்ய பண்ணையாளர்களுக்கு பரிந்துரை செய்கிறது.

    அவற்றில் இருந்து மேலும் குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் என பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் நெஸ்பேக் அறிவிக்கும் மைனஸ் விலைக்கு மேல் விற்க வேண்டாம் என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:-

    பார்வாலா உள்பட வட மாநிலங்களில், அனைத்து மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் பெரும்பாலான பண்ணைகளில் முட்டை இருப்பு இல்லை. இதனால் நெஸ்பேக் அறிவிக்கும் மைனஸ் 40 காசுக்கு மேல் யாரும் முட்டையை விற்க வேண்டாம். வரும் 7-ந் தேதி கார்த்திகை தீபம் திருநாளுக்கு பிறகு முட்டை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு பண்ணையாளர்கள் ஒருமித்த கருத்தோடு நெஸ் பேக் அறிவிக்கும் விலைக்கு மட்டுமே முட்டை விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
    • முட்டை விற்பனை சீராக இருப்பதாலும் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் மருத்துவர் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

    பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததாலும், முட்டை விற்பனை சீராக இருப்பதாலும் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முட்டை விலையில் மாற்றம் செய்யாமல் ரூ.5.50-ல் நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

    பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.120-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.117-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

    ×