search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே முட்டை விற்பனை செய்ய முடிவு
    X

    சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே முட்டை விற்பனை செய்ய முடிவு

    • நாமக்கல் மண்டலத்தில் சுமார் 8 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
    • தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்ப டுகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 8 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்ப டுகின்றன. கடந்த 1 மாதத்திற்கு மேலாக முட்டை விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், கோழிப்பண்ணைத் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு பண்ணையா ளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) சார்பில் முட்டைக் கோழி பண்ணை யாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மண்டல என்.இ.சி.சி. துணைத் தலைவர் சிங்கராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மத்திய செயற்குழு உறுப்பினர் வாங்கிலி சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

    வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மண்டல அலுவலகத்தில், பண்ணையாளர்களிடம் கருத்துக்கணிப்பு வாக்குப் பதிவு நடத்தி அதன் அடிப்படையில் முட்டை விலையை நிர்ணயம் செய்வ தென்று முடிவு செய்யப்பட்டது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணை யாளர்களும், என்.இ.சி.சி. அறிவிக்கும் விலைக்கு, கோழி முட்டை வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள வியாபாரிகளுக்கு மட்டுமே, முட்டைகளை விற்பனை செய்வதென்று முடிவெடுக்கப்பட்டது.

    கோழி வியாபாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தி, முதிர்வு கோழிகளை லாபகரமான முறையில் விற்பனை செய்வது குறித்து முடிவெடுக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. பண்ணையாளர்கள் அனைவரும் வரும் காலங்களில் இணைந்து செயல்பட்டால் மட்டுமே கோழிப்பண்ணை தொழிலை லாபகரமாக நடத்த முடியும், எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவ

    தென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் திரளான கோழிப்பண்ணை யாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×