என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
நெய்வேலியில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு
- ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
- போதைப் பொருள் விழிப்புணர்வு நாடகத்தை ஒருங்கிணைத்து மாணவர்களின் மூலம் நாட்டிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கடலூர்:
சர்வதேச போதை பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்.ஆர்.கே. பள்ளியின் தாளாளர் சுந்தரவடிவேல் மற்றும் நிர்வாக இயக்குநர் திருநாவுக்கரசு ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி முதல்வர் கஸ்தூரி துணை முதல்வர் பிரித்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அதனுடன் தமிழாசிரியை பானுமதி போதைப் பொருள் விழிப்புணர்வு நாடகத்தை ஒருங்கிணைத்து மாணவர்களின் மூலம் நாட்டிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆசிரியை ரேணுகா பயிற்சியில் 6ம் வகுப்பு மாணவன் ஜெய்சரண் போதைப் பொருள் விழிப்புணர்வு உரையை அழகாக எடுத்துக் கூறினார்.
Next Story






