search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nadigar Sangam"

    திரைப்படங்களில் ரசிகர்களை மகிழ்வித்த ரங்கம்மாள் பாட்டி, வறுமை காரணமாக மெரினா கடற்கரையில் ‘கர்சீப்’ விற்று பிழைப்பை நடத்தி வருகிறார். #Rangammal #RangammalPatti
    தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர், கே.ஆர்.ரங்கம்மாள் (வயது 75). 

    சென்னை வடபழனி குமரன்காலனியில் வசித்து வருகிறார். மூதாட்டியான இவரது காமெடி ரசிக்கும்படி இருக்கும். குறிப்பாக வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்துள்ள காமெடிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவரை ‘சூ பாட்டி’ என்றும் அழைக்கின்றனர். 

    இவ்வாறாக காமெடி வேடங்களில் நடித்து வந்த பாட்டி, இன்று பட வாய்ப்புகள் இல்லாமல் வறுமையில் வாடுகிறார். தவமிருந்து 9 பிள்ளைகள் பெற்றிருந்தும், வயிற்று பிழைப்புக்காக சென்னை மெரினா கடற்கரையில் கர்சீப் விற்று காலத்தை ஓட்டுகிறார். கடற்கரைக்கு வருவோர் இவரை அடையாளம் கண்டுகொண்டு அவருடன் ‘செல்பி’ எடுத்து செல்கின்றனர். உற்சாகமாக போஸ் கொடுக்கும் ரங்கம்மாள், தன்னிடம் ஏதாவது பொருள் வாங்கி செல்லுமாறும் வேண்டுகோள் வைக்கிறார்.


     
    தனது நிலை குறித்து ரங்கம்மாள் உருக்கமாக கூறியதாவது:-

    நான் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறேன். பல நடிகைகளுக்கு ‘டூப்’ ஆகவும் நடித்திருக்கிறேன். தமிழ் தவிர மலையாளம், இந்தி படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறேன்.

    500 படங்களுக்கு மேல் நடித்து நான் சம்பாதித்த பணத்தை எனது பிள்ளைகளுக்கே செலவழித்துவிட்டேன். தள்ளாத வயதில் நான் நடிக்க தயாராக இருந்தாலும் சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பெற்ற பிள்ளைகளும் கைவிட்ட நிலையில், சாப்பாட்டுக்கே வழியின்றி க‌ஷ்டப்படுகிறேன்.

    அதனாலேயே மெரினா கடற்கரைக்கு வந்து கர்சீப் மற்றும் கைவினை பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். இதன்மூலம் எனக்கு சொற்ப வருமானமே கிடைக்கிறது. அது எனக்கு போதுமானதாக இல்லை. எனவே எனக்கு தமிழக அரசோ அல்லது நடிகர் சங்கமோ உதவிக்கரம் நீட்டினால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Rangammal #RangammalPatti

    கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் வழங்கிய நடிகர் சங்கத்திற்கு கேரள முதல்வர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். #NadigarSangam
    சமீபத்தில் கேரள மாநிலத்தில் வெள்ள பெருக்காலும் மண் சரிவினாலும் கடும் சேதம் ஏற்பட்டு மக்கள் பெரும் துயரத்தையும் உயிரிழப்புகளையும் சந்தித்தனர். இதிலிருந்து மக்களை மீட்டு அம்மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர நிதி உதவி அளிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். 

    அதன் அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையை நேரடியாக அனுப்பிவைக்குமாறு நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அனைத்து திரைத்துறையினரிடமும் வேண்டுகோள் வைத்தார். 

    முதல் கட்டமாக நடிகர் சங்கம் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தது. இதனை தொடர்ந்து நடிகர் நடிகைகள் மற்றும் திரைத்துறையினர் அனைவரும் பெரும் தொகைகள் நிதி உதவியாக அளித்து வருகின்றனர். நடிகர் சாங்த்தின் ஒத்துழைப்புக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து கேரளா முதல்வர் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

    மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க அரசு எல்லா நடவடிக்கைகளையும் வேகமாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    நடிகர் சங்கம் சார்பில் நடக்கும் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துக் கொண்ட விஷால், நடிகர் சங்க கட்டிடத்தில் கருணாநிதியின் பேனாவை வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். #KalaignarKarunanidhi #Vishal
    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் நடந்து வருகிறது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டுள்ளார்.

    இதில் விஷால் பேசும்போது, ‘புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டடத்தில் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை வைக்க வேண்டும். அது அடுத்த தலைமுறை கலைஞர்களுக்கு கருணாநிதியின் புகழை எடுத்துச் செல்லும்’ என்றார்.

    நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது, ‘பராசக்தி படம் மட்டும் வராமல் இருந்தால், தமிழ் சினிமா 20 ஆண்டுகள் பின்நோக்கி சென்றிருக்கும்’ என்றார். 
    கேரளாவில் கனமழை காரணமாக பல இன்னல்களை சந்தித்து வருபவர்களுக்கு, முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நடிகர் சங்கம் முதல் கட்டமாக வழங்க முடிவு செய்துள்ளார்கள்.
    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38-வது செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் இன்று (12.08 .2018) காலை நடிகர் சங்க புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர். 

    இந்த கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டது. 



    மேலும் சமீபத்தில் இயற்கை சீற்றத்தால் பேரழிவு சந்தித்து வரும் கேரள மக்களுக்கு நடிகர் சங்கம் மூலம் முதல் கட்டமாக ஐந்து லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    மூத்த நாடக நடிகர் ஜெயராம் சென்னை காலமானார். அவரது உடலுக்கு நடிகர் சங்க உறுப்பினர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் மூத்த நாடக நடிகருமான ஏ. ஜெயராமன் (84) நேற்று 7.8.2018 இரவு சென்னையில் காலமானார். ஐம்பது ஆண்டுக்கும் மேல் நாடக நடிகராக வாழ்க்கை பயணம் நடத்திய இவர் தேவி நாடக சபா மற்றும் ஆர்.எஸ்.மனோகரின் நேஷனல் தியேட்டரில் நடிகராக பணியாற்றிய கலைஞர் ஆவார். 

    அவருக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர், துணை தலைவர் கருணாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கோவை சரளா, சங்கீதா, பசுபதி, விக்னேஷ், ஹேமச்சந்திரன் ஸ்ரீமன், ஏ.எல்.உதயா ஆகியோர் தேனாம்பேட்டையிலுள்ள அவரது இல்லத்துக்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.


    காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி மறைவு நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,

    முன்னாள் தமிழக முதல்வரும் தமிழ் கலை - இலக்கிய பிதாமகனும் நடிகர் சங்கத்தின் மூத்த ஆயூட்கால உறுப்பினருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் மறைந்த துயர செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம், வேதனை அடைகிறோம். திரைக்கதை-வசன  ஆசிரியராக சினிமா பிரவேசம் நடத்தி அதன் பிறகு அரசியலுக்கு வந்து தமிழகத்தின் முதல்வராக மூன்று முறை மக்களுக்கு தொண்டாற்றியவர். ஒரு எழுத்தாளராக சினிமாவில் அவரைப்போல் சாதித்தவர் எவரும் இல்லை. சினிமாவில் அவரது வசனங்கள் ஹீரோக்களுக்கு இணையாக பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது, அது மட்டுமல்லாமல் அவர் இயற்றிய சினிமா வசனங்கள் காலங்களை வென்று வாழ்பவை. அவரது திரைக்கதைகள் ஹீரோக்களையும் உருவாக்கியது.

    தான் முதல்வராக இருக்கும் போது தமிழ் சினிமாவின் நலனுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தினார். கலை உலகிலும் திரை உலகிலும் அரசியலிலும் அவரது அர்ப்பணிப்பு என்றும் நிலைப்பவை. அவர் இயற்றிய குறளோவியம், சங்கத்தமிழ், பூம்புகார், நெஞ்சுக்குநீதி, தொல்காப்பிய பூங்கா போன்ற நூல்கள் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷங்கள். அவரது இழப்பு தமிழகத்துக்கும் திரை உலகிற்கும் மாபெரும் பேரிழப்பாகும். அன்னாரது மறைவால் துக்கத்தில் வாடும் குடும்பத்தினர் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு அன்னாரது ஆத்மா சாந்தியடையவும் இறைவனை பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    தென்னிந்திய நடிகர் சங்க தலைவர், துணை தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தமிழக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். #NadigarSangam
    தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கோவை சரளா, பசுபதி ஆகியோர்கள் இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர்களை நேரில் சந்தித்தனர். 

    நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணி மண்டபம் அமைத்து சிறப்பித்ததோடு அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடவும் அரசாணை வெளியிட்டு தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்தமைக்கும், அரசு பொருட்காட்சிகளில் அரசின் கொள்கைகளை விளக்கும் நாடக குழுக்களுக்கு வழங்கி வரும் சன்மானதொகை ருபாய் 2௦௦௦-யில் இருந்து ருபாய் 5௦௦௦-ஆக உயர்த்தி அரசாணை பிறப்பித்தமைக்கும் நன்றி தெரிவித்தனர்.

    பொருட்காட்சி நிகழ்ச்சிகளில் தற்போது நாடகக் குழுக்களுக்கு குறைந்தது 10 நபர்கள் நாடகத்திற்கு சென்றால் மட்டுமே அரசுப்பேருந்தில் பயண கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதை, அதற்கும் குறைவான நபர்கள் நாடகத்திற்கு சென்றாலும் கூட இது பொருந்தும் என்று மாற்றி தாங்கள் அரசாணை வெளியிடவேண்டும்.

    அரசு மூலம் வழங்கும் சன்மானத் தொகையை நாடக கலைஞர்களின் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தவேண்டும்.

    நாடக நடிகர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்த பேருந்தில் செல்லும்போது அவர்களுடைய இசைக்கருவிகள் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு இசைக்கருவிகள் மற்றும் நிகழ்ச்சிக்கான உடைமைகளை அரசுப்பேருந்தில் எடுத்துச்செல்ல முன்னுரிமை வழங்க வேண்டும்.

    நாடக நடிகர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் மிகவும் குறைந்த வருமானத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்கள். எனவே அவர்களுக்கு நிகழ்ச்சி நடத்த செல்லுவதற்கு அரசு பேருந்தில் வருடாந்திர இலவச பயண சலுகை வழங்குமாறும்.

    60 வயதிற்கு மேல் உள்ள திரைப்பட, நாடக கலைஞர்கள் தொழில் வாய்ப்பு கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு மாதந்திர ஓய்வூதிய உதவித்தொகை வழங்கவேண்டும்.

    தமிழ் திரைப்பட நூற்றாண்டு மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் ஆண்டில் நூறாண்டு கடந்த தமிழ் திரைப்பட கலைஞர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு திட்டமாக மாதந்திர ஓய்வூதிய தொகை வழங்கிட வேண்டும். 

    ஆகிய கோரிக்கைகளையும் நடிகர் சங்க நிர்வாகிகள் இந்த சந்திப்பின் பொழுது முதல்வரிடம் முன்வைத்தனர். முதல்வர் அவர்களும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தெரிவித்திருக்கிறார். 
    நடிகர் சிவாஜி கணேசனின் 17-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி அடையாறில் அமைந்திருக்கும் அவரது நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. #SivajiGanesan
    சென்னை:

    நடிகர் சிவாஜி கணேசனின் 17-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி அடையாறில் அமைந்திருக்கும் அவரது நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு, நடிகர் சங்க தலைவர் நாசர், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், விக்ரம் பிரபு, நடிகர் மனோபாலா ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    விழாவில் நடிகர் பிரபு பேசும்போது கூறியதாவது:-

    ‘நடிகர் சங்கம் சார்பாக அப்பாவுக்கு மரியாதை செலுத்தினார்கள். அவர்களை பார்க்கும்போது எங்களுக்கு எங்கள் தந்தை நினைவு வருகிறது. அவர்களுக்கு எங்களை பார்க்கும்போது எங்கள் தந்தை நினைவுக்கு வருகிறார்.

    நாசர் என் தந்தையை அண்ணன் என்று அழைப்பார். நியாயமாக பார்த்தால் சித்தப்பா என்று அழைக்க வேண்டும். சிவாஜி எல்லோர் வீடுகளிலும் அப்பாவாக, தாத்தாவாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

    உங்கள் அனைவரையும் பார்க்கும்போது என் தந்தையே நேரில் வந்தது போல் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றிகள்’ என்று கூறினார்.


    நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது ‘நேற்று இன்று என்று இல்லை எப்போதுமே சிவாஜி நம்முடன் ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அவர் போட்ட தடத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். அவர் பயணித்த அளவுக்கு நாங்கள் பயணிக்க முடியாது. சினிமா நடிகர்கள் மட்டும் அல்ல நாடக நடிகர்கள் சார்பாகவும் சிவாஜி பிறந்த தினத்தை அரசு நிகழ்ச்சியாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சிவாஜி விமர்சனத்துக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்டவர். கலைக்காகவே வாழ்ந்தவர்’

    இவ்வறு அவர் கூறினார்.  #NadigarThilagam #SivajiGanesan
    மலையாள நடிகர் சங்கத்தில் நடிகர் திலீப் மீண்டும் சேர்த்தது குறித்து தலைவர் மோகன்லால் விளக்கம் அளித்துள்ளார். #Mohanlal #NadigarSangam
    மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. சங்க தலைவராக மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    மேலும் இந்த கூட்டத்தில் நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டதால் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்த நடிகர் திலீப் மீண்டும் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    திலீப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகைகள் ரம்யா நம்பீசன், பாவனா, ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் ஆகியோர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தனர். அரசியல் கட்சியினரும் திலீப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நடிகர் சங்கத்தில் மீண்டும் இணைய விரும்பவில்லை என்று திலீப் கூறியபிறகும் இந்த பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.

    நடிகர் சங்க புதிய தலைவரான மோகன்லால் தற்போது படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ளார். திலீப் விவகாரம் தொடர்பாக இதுவரை அவர் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்துவந்தார். தற்போது இந்த பிரச்சினை தொடர்பாக மோகன்லால் விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நடிகர் சங்கமான ‘அம்மா’ நடிகர், நடிகைகள் நலனில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இந்த சங்கத்தில் 485 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 137 பேர் நடிகைகளாகும். ஏராளமான நடிகர்கள் சொந்தமாக வீடு இல்லாமல் உள்ளனர். பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை நடிகர் சங்கம் செய்து வருகிறது.

    எங்கள் சங்கத்தை சேர்ந்த நடிகை ஒருவர் பாதிக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக செயல்பட்டும் அன்று முதல் இன்று வரை அவருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறோம். பெண்களுக்கு எதிராக நடிகர் சங்கம் ஒருபோதும் செயல்படவில்லை.

    தற்போது சிலரின் தூண்டுதல் காரணமாக சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. மேலும் நடிகர் சங்கத்தை ‘மாபியா’ போன்ற கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்வது ஏன்? என்று தெரியவில்லை. நடிகர் சங்கத்தில் திலீப்பை சேர்ப்பது என்பது சங்கத்தை சேர்ந்த பெரும்பான்மை யானவர்களின் விருப்பமாக இருந்ததால் அந்த தீர்மானம் கூட்டத்தில் கொண்டுவரப் பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக ராஜினாமா செய்துள்ள நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும்.

    இது எங்கள் குடும்பம் சம்பந்தப்பட்டது. இதில் வெளியில் உள்ள மற்றவர்கள் தலையிட என்ன தேவை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நடிகைகள் ரிமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீதா மோகன்தாஸ் ஆகியோர் வெளியேறியுள்ளனர். #NadigarSangam #Amma
    கேரள மாநில மலையாள நடிகர்கள் சங்க அம்மாவின் தலைவராக நடிகரும், எம்.பி.யுமான இன்னசென்ட் இருந்து வந்தார். 17 ஆண்டுகளுக்கும் மேலாக சங்கத்தின் தலைவராக இருந்த இன்னசென்ட் உடல் நலக்குறைவு காரணமாக பதவியிலிருந்து விலகினார். 

    இதையடுத்து மலையாள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நடிகை ஒருவர் கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்றதால், நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் திலீப் சங்க உறுப்பினராக சேர்க்கப்பட்டு உள்ளார்.

    திலீப் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து நடிகை ரீமா கல்லிங்கல் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்தார். நடிகர் சங்கம் உணர்சியற்றதாக இருப்பதாக கூறினார். இதை தொடர்ந்து ரம்யா நம்பீசன், கீதா மோகன்தாஸ் உள்ளிட்ட நான்கு நடிகைகள் சங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.



    கேரளாவில் சினிமாவில் பெண்கள் கூட்டாளி என்ற அமைப்பு சில நடிகைகளால் நடத்தபட்டு வருகிறது. அதில் அவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த அமைப்பு அதிராக பூர்வ பேஸ்புக்கில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
    சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நடிகர் விஷால் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். #Vishal
     சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட ராட்சத அலையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இன்று மேலும் 50 வீடுகள் ராட்சத அலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

    கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நடிகர் விஷால் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ‘கடந்த சில நாட்களாகவே பகலில் அமைதியாக இருக்கும் கடல் இரவு நேரங்களில் சீற்றத்துடன் காணப்படுகிறது என்று சென்னை கடலோர மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர்.

    தற்போது கடல் சீற்றத்தால் சீனிவாசபுரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு அடைந்திருப்பது வேதனையை தருகிறது. இது தொடர்ச்சியாக நடக்கிறது. இந்த சம்பவம் பெரிய செய்தியான பின்னரும் கூட எந்த அதிகாரியும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்பது அதைவிட வேதனை.

    தமிழக அரசு இந்த வி‌ஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை உடனே எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    திரைத்துறையினர் மீது பாலியல் புகார் கூறிவரும் நடிகை ஸ்ரீரெட்டி, நடிகர் சங்க உறுப்பினர் கேட்டு மீண்டும் போராட்டம் நடத்தி வருகிறார். #SriReddy #SriLeaks
    தெலுங்கு பட உலகில் நடிக்க வரும் பெண்களை சிலர் படுக்கைக்கு அழைப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் விவரங்களையும் வெளியிட்டு அதிர வைத்தார். தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை முன்பு அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார்.

    ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பினரும் களம் இறங்கினர். அதைத்தொடர்ந்து ஸ்ரீரெட்டி தெலுங்கு படங்களில் நடிக்க, தெலுங்கு நடிகர் சங்கம் தடை விதித்தது. மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதால், அவர் மீதான தடை நீக்கப்பட்டது.

    இந்த நிலையில், நடிகர் நானி மீதும், ஸ்ரீரெட்டி ‘செக்ஸ்’ புகார் கூறினார். “நானி பெரிய கதாநாயகன் ஆவதற்கு முன்பே எனக்கு தெரியும். அடிக்கடி என் வீட்டுக்கு வருவார். நான் பெரிய படத்தில் நடிக்கும்போது, உனக்கு கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்றார். உடல் ரீதியாக என்னை அவர் பயன்படுத்திக் கொண்டார். இப்படி ஆசை காட்டி, இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் நானி கெடுத்து விட்டார் என்றும் கூறினார்.

    இதனால் ஸ்ரீரெட்டிக்கும், நானிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது. “ஸ்ரீரெட்டி புகாரில் உண்மை இல்லை என்றும் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், அவதூறு வழக்கு தொடர்வேன் என்றும் ஸ்ரீரெட்டிக்கு நானி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

    இந்த நிலையில், தெலுங்கு நடிகர் சங்கம் தனக்கு உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும் என்று கோரி, ஸ்ரீரெட்டி மீண்டும் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்.

    இதுவரை அவருக்கு உறுப்பினர் அட்டை கொடுக்காமல், தெலுங்கு நடிகர் சங்கம் நிறுத்தி வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #SriReddy
    ×