என் மலர்

  சினிமா

  கேரள கனமழை - முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கும் நடிகர் சங்கம்
  X

  கேரள கனமழை - முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கும் நடிகர் சங்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளாவில் கனமழை காரணமாக பல இன்னல்களை சந்தித்து வருபவர்களுக்கு, முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நடிகர் சங்கம் முதல் கட்டமாக வழங்க முடிவு செய்துள்ளார்கள்.
  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38-வது செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் இன்று (12.08 .2018) காலை நடிகர் சங்க புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர். 

  இந்த கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டது.   மேலும் சமீபத்தில் இயற்கை சீற்றத்தால் பேரழிவு சந்தித்து வரும் கேரள மக்களுக்கு நடிகர் சங்கம் மூலம் முதல் கட்டமாக ஐந்து லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  Next Story
  ×