search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Money Cheating"

    • போனில் பேசிய நபர் மாணவியின் ஆண் நண்பரை போலவே குரலை மாற்றி பேசி ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
    • மாணவிக்கு தெரிந்த நபர்கள் யாரும் இதுபோன்று பேசி ஏமாற்றினார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு நேற்று செல்போன் அழைப்பு வந்தது. போனில் பேசிய நபர் மாணவியின் ஆண் நண்பர் போலவே பேசினார்.

    அப்போது அவர் தனக்கு அவசரமாக மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுவதாகவும், உடனடியாக ரூ. 50 ஆயிரம் பணம் அனுப்பமுடியுமா? என்றும் கேட்டுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய மாணவி ஆண் நண்பர் கூறிய எண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் இது தொடர்பாக தனது நண்பரை தொடர்பு கொண்டு மாணவி கேட்டபோதுதான் மோசடி நபர் ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.

    போனில் பேசிய நபர் மாணவியின் ஆண் நண்பரை போலவே குரலை மாற்றி பேசி ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோசடி நபர் தொழில்நுட்ப ரீதியாக மாணவியின் ஆண் நண்பரின் குரலை தெரிந்து கொண்டு வெளி மாநிலத்தில் இருந்து ஏமாற்றினாரா? என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

    அதே நேரத்தில் மாணவிக்கு தெரிந்த நபர்கள் யாரும் இதுபோன்று பேசி ஏமாற்றினார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • தாய்மாமாவின் பேச்சை நம்பிய சித்ரா, கணவரின் உறவினர்கள் மேலும் 4 பேரிடம் கூறியுள்ளார்.
    • பரமேஸ்வரன், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மதிவாணன் என்ற ராஜேந்திரன், அவரது மனைவி சுகாஷிணி ஆகிய 3 பேர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    கிள்ளியூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள நாட்டுவள்ளி பகுதியை சேர்ந்தவர் சுஜின், முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சித்ரா (வயது 39). இவரது தாய் மாமா பரமேஸ்வரன் (60). திருப்பூரையடுத்த மண்ணரை பகுதியை சேர்ந்த இவர் நீலகிரி மாவட்டத்தில் மின்சார வாரியத்தில் வேலை பார்க்கிறார்.

    சித்ரா, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி விட்டு வேலைக்காக காத்திருக்கிறார். இதனை அறிந்த அவரது மாமா பரமேசுவரன், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் பணம் வாங்கியுள்ளார். மேலும் பல வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், வேறு நபர்கள் இருந்தால் அவர்களுக்கும் வேலை வாங்கி கொடுக்கலாம் என பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

    தாய்மாமாவின் பேச்சை நம்பிய சித்ரா, கணவரின் உறவினர்கள் மேலும் 4 பேரிடம் கூறியுள்ளார். அவர்களிடமும் வேலைக்கு பணம் பெற்று பரமேஸ்வரனுக்கு அனுப்பியுள்ளார். இந்த வகையில் மொத்தம் ரூ. 29 லட்சம், பரமேஸ்வரனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் வருடங்களாகியும் அவர் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

    இதையடுத்து சித்ரா, பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது பரமேசுவரன் ஆத்திரம் அடைந்து சித்ராவை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சித்ரா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் குளச்சல் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் விசாரனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் அரசு வேலை வாங்கி கொடுப்பதாக ஏமாற்றி பணம் வாங்கியது உறுதியானது. அதன் அடிப்படையில் பரமேஸ்வரன், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மதிவாணன் என்ற ராஜேந்திரன், அவரது மனைவி சுகாஷிணி ஆகிய 3 பேர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த மோசடி வழக்கில் முக்கிய நபரான பரமேஸ்வரன் நாளை (31-ந்தேதி) பணி ஓய்வுபெற உள்ளார். இந்த நிலையில் தற்போது வழக்கு பதிவாகியுள்ளது.

    • 3 மாத காலத்திற்குள் வட்டியுடன் தனசேகரனுக்கு பணத்தை திருப்பி தருவதாக எழுதி கொடுத்துவிட்டு சென்றனர்.
    • 5 மாதங்கள் ஆகியும் இதுவரை அவர்கள் சொன்னபடி பணத்தை திருப்பி தரவில்லை.

    போரூர்:

    சென்னை வளசரவாக்கம், திருவள்ளூர் சாலையை சேர்ந்தவர் தனசேகரன் (வயது69) கூலி தொழிலாளி. இவருக்கு பூர்வீக சொத்து ஒன்றின் பாகப்பிரிவினை மூலம் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.20 லட்சம் பணம் கிடைத்தது. இதையறிந்த அதே பகுதியை சேர்ந்த தனசேகரனின் உறவுக்காரப் பெண் பாரதி மற்றும் அவரது தோழி வனிதா இருவரும் "மாதந்தோறும் 3 சதவீதம் வட்டி தருகிறோம்" என்று ஆசை வார்த்தை கூறி தனசேகரனிடம் இருந்து ரூ.20 லட்சம் பணத்தை பெற்று சென்றனர்.

    ஆனால் வட்டியும் தராமல் வாங்கிய பணத்தையும் திருப்பி தராமல் பாரதி மற்றும் வனிதா இருவரும் தொடர்ந்து காலம் தாழ்த்தி தனசேகரனை ஏமாற்றி வந்தனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து பண மோசடியில் ஈடுபட்ட பாரதி மற்றும் அவரது தோழி வனிதா இருவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும் என்று கூறி கடந்த டிசம்பர் மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் தனசேகரன் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக பாரதி மற்றும் வனிதா இருவரிடமும் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 மாத காலத்திற்குள் வட்டியுடன் தனசேகரனுக்கு பணத்தை திருப்பி தருவதாக எழுதி கொடுத்துவிட்டு சென்றனர். ஆனால் 5 மாதங்கள் ஆகியும் இதுவரை அவர்கள் சொன்னபடி பணத்தை திருப்பி தரவில்லை. இதையடுத்து தனசேகரன் மீண்டும் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பண மோசடியில் ஈடுபட்ட பெண் பாரதி வளசரவாக்கம் மாநகராட்சி மண்டலத்திற்கு உட்பட்ட 152வது வார்டு கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடன் தொல்லையால் மனமுடைந்த பிரசாத் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தொங்கினார்.
    • குடியாத்தம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் காட்பாடியை தலைமை இடமாகக் கொண்டு பிரபல தனியார் நிறுவனம் இயங்கி வந்தது.

    தமிழகம் முழுவதும் இதில் ஏஜெண்டுகள் மூலம் பணம் வசூலிக்கப்பட்டது. ரூ.ஒரு லட்சத்திற்கு மாதந்தோறும் ரூ.7000 வரை வட்டி தருவதாக நிதி நிறுவனம் அறிவித்தது.

    இதனை நம்பி ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை செலுத்தினர். நிதி நிறுவன அதிபர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனால் ஏஜெண்டுகள் மற்றும் பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் பணம் திரும்ப கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் கல்லேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 39) என்ஜினியரான இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவருடைய மனைவி தனலட்சுமி மற்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் தங்கி இருந்தார்.

    இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் மூலம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.26 லட்சம் கடன் வாங்கி முதலீடு செய்தார்.

    நிதி நிறுவனம் மூடப்பட்ட பிறகு இவருக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் பிரசாத்துக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தர ஆரம்பித்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு பிரசாத் வந்தார்.

    இன்று காலை கடன் தொல்லையால் மனமுடைந்த பிரசாத் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தொங்கினார்.

    இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    குடியாத்தம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்வதற்கு முன்பாக பிரசாத் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    அதில் நான் தனியார் நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் வாங்கி பணம் செலுத்தினேன். நான் பணம் செலுத்திய ஏஜெண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

    கடன் நெருக்கடி காரணமாக நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு தனியார் நிறுவனம் நிதி நிறுவனம் தான் காரணம். இதன் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பல்வேறு தவணைகளாக அந்த வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சத்து 87 ஆயிரம் அனுப்பினார்.
    • செலுத்திய தொகைக்கான லாபத்தொகையோ அல்லது செலுத்திய பணத்தையோ திருப்பி கொடுக்கவில்லை.

    கோவை:

    கோவை கள்ளிமடையை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 30). இவருடைய செல்போனுக்கு டெலிகிராமில் இருந்து ஒரு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை செய்தால் நல்ல ஊதியம் கிடைக்கும் எனவும், அதில் உள்ள லிங்கை அழுத்தவும் என்று கூறப்பட்டு இருந்தது.

    உடனே அவர் அந்த லிங்கை அழுத்தி உள்ளே சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு பேசியதுடன், டெலிகிராமில் குரூப் தொடங்கப்பட்டு உள்ளது, அதில் உங்கள் எண்ணையும் இணைத்து உள்ளோம். உங்களுக்கு ஆன்லைனில் நல்ல வேலை இருக்கிறது. உங்களுக்கு கொடுக்கப்படும் வேலை தொடர்பாக அந்த குரூப்பிலேயே தகவல் அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

    மேலும் அதை வைத்து நீங்கள் வேலை செய்தால் அதிகளவில் பணம் சம்பாதிக்கலாம் என்றும், அதற்காக நீங்கள் அவ்வப்போது பணமும் செலுத்த வேண்டும் என்றும் கூறி இருந்தது. இதனை நம்பிய அவர் பல்வேறு தவணைகளாக அந்த வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சத்து 87 ஆயிரம் அனுப்பினார். ஆனால் அவர்கள் கூறியபடி அவருக்கு செலுத்திய தொகைக்கான லாபத்தொகையோ அல்லது செலுத்திய பணத்தையோ திருப்பி கொடுக்கவில்லை.

    இதுகுறித்து அந்த குழுவில் அவர் கேட்டபோது, மேலும் அதிக பணம் அனுப்புமாறு கூறியுள்ளது. அப்போதுதான் அவருக்கு அந்த நிறுவனம் போலி என்பதும், தனக்கு ஆன்லைனில் தகுந்த வேலை கொடுப்பதாக கூறி நூதன முறையில் பணம் பெற்று ஏமாற்றியதும் தெரியவந்தது. இது தொடர்பாக பிரியங்கா, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கூடுதலாக பணம் முதலீடு செய்தால்தான் பணம் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
    • தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வேதபிரகாஷ் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் சிரியாரா கிராமத்தை சேர்ந்தவர் வேதபிரகாஷ் (வயது 26).

    புதுவை பிரியதர்ஷினி நகரில் தங்கி, ஜிப்மரில் முதுகலை மருத்துவம் படித்து வருகிறார்.

    இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.

    அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம். யூடிப் சேனல்களை லைக் செய்தால் ரூ.150 கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய அவர் அந்த யூடிப் சேனலை லைக் செய்து போட்டோ எடுத்து அனுப்பினார். அவர் வங்கி கணக்கில் ரூ.150 செலுத்தப்பட்டது.

    இதன்பின் கிரிப்டோ கரன்சி, பிட்காயின் டாஸ்க் முடித்தால் அதிக பணம் கிடைக்கும் என்ற செய்தி வந்தது.

    இதை நம்பி சோதனை முறையில் ரூ.ஆயிரம் செலுத்தினார்.

    டாஸ்க் முடிந்தவுடன் பிட்காயின் வேலட்டில் ரூ.ஆயிரத்து 300 வந்தது. அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றினார். இதைத்தொடர்ந்து ரூ.3 ஆயிரம் செலுத்தினார். அதற்கான தொகையும் காண்பித்தது.

    இதனால் அந்த தளத்தை முழுமையாக நம்பிய வேதபிரகாஷ் ரூ.26.30 லட்சம் பணத்தை முதலீடு செய்தார். அப்போது அவரது கணக்கில் ரூ.36.34 லட்சம் பணம் இருந்தது. இந்த பணத்தை தனது வங்கி கணக்குக்கு மாற்ற முயன்றார்.

    மேலும் கூடுதலாக பணம் முதலீடு செய்தால்தான் பணம் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வேதபிரகாஷ் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டேனியல் செல்வராஜ் அனுப்பிய போலி கடிதம் குறித்து மணிகண்டன் கேட்டபோது, அவரை தகாத வார்த்தையில் கூறி மிரட்டியுள்ளார்.
    • மணிகண்டன் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    தருமபுரி:

    திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் டேனியல் செல்வராஜ் (வயது 25).

    இவர் தருமபுரியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும் தனியார் ஏஜெண்டு நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். இது குறித்து அவர் சமூக வலைத்தளங்களில் விளம்பரமும் செய்துள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், பெண்டர அள்ளி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இந்த விளம்பரத்தை நம்பி டேனியல் செல்வராஜுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    அப்போது டேனியல் செல்வராஜ் மாலத்தீவில் 100 பேருக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.இதற்கு முன் பணமாக ரூ. 1 லட்சமும், மீதி பணம் விசா வந்தவுடன் ரூ.2 லட்சம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய மணிகண்டன் பல்வேறு நபர்களிடம் இருந்து பணத்தை வாங்கி டேனியல் செல்வராஜூ வங்கி கணக்கிற்கு ரூ.19 லட்சம் வரை அனுப்பியுள்ளார்.

    இதே போல் மதுரையை சேர்ந்த பிரகாஷ் என்பவரும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பியுள்ளார். மேலும் நடராஜ் என்பவரும் ரூ.1.5 லட்சம் அனுப்பியுள்ளார். இவர் மொத்தமாக பல்வேறு நபர்களிடம் இருந்து ரூ.23 லட்சம் வரை வாங்கியதாக தெரிகிறது.

    பின்னர் இவர் நிறுவன கடிதம், மற்றும் விசா அனைத்தையும் இவர்களுக்கு அனுப்பி உள்ளார். அப்போது சோதனை செய்து பார்த்ததில் இவை அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது.

    டேனியல் செல்வராஜ் அனுப்பிய போலி கடிதம் குறித்து மணிகண்டன் கேட்டபோது, அவரை தகாத வார்த்தையில் கூறி மிரட்டியுள்ளார்.

    இது குறித்து மணிகண்டன் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அருண் பிரசாந்த் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஆனந்த கிருஷ்ணனிடம் இருந்து ரூ.13 லட்சம் வாங்கியுள்ளார்.
    • தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள பட்லுர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. பள்ளி தலைமை ஆசிரியர். இவருடைய மகன் ஆனந்த கிருஷ்ணன். இவர் பி.இ மெக்கானிக்கல் முடித்த நிலையில் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அருண் பிரசாந்த் (வயது45). இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஆனந்த கிருஷ்ணனிடம் இருந்து ரூ.13 லட்சம் வாங்கியுள்ளார்.

    ஆனால் அரசு வேலை இதுவரை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது. வேலை வாங்கி தராத நிலையில் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

    இது குறித்து தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்திற்குள் சத்தியசாய் ரூ.21 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
    • கையாடல் விபரம் யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதால் உடன் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் சிலருக்கும் அவ்வப்போது பணம் கொடுத்து சரி கட்டி உள்ளார்.

    போரூர்:

    சாலிகிராமம், குமரன் காலனி, 2-வது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். தொழில் அதிபரான இவர் பிரபல கலர் லேப் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    கடந்த மாதம் 28-ந் தேதி இவரது வீட்டில் ரூ1½ கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் மற்றும் ரொக்க பணம் ரூ.13½ லட்சம் கொள்ளை போனது.

    இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்து என்பவரை விருகம்பாக்கம் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை-பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சந்தோஷ்குமாரின் கலர்லேப் நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை முதலில் போலீசார் அழைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது கோடம்பாக்கம் கிளையில் கணக்காளராக பணிபுரிந்து வந்த சத்தியசாய் (31) என்பவர் விசாரணைக்கு வராமல் தனது செல்போனை "சுவிச் ஆப்" செய்து விட்டு திடீரென தலைமறைவாகி விட்டார்.

    இதனால் சந்தேகமடைந்த தொழில் அதிபர் சந்தோஷ் குமார், அந்த கிளையின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தார். அப்போது ஊழியர் சத்தியசாய், ரூ.21 லட்சத்தை கையாடல் செய்து இருப்பது தெரிந்தது.

    வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்திற்குள் அவர் ரூ.21 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    உதவி கமிஷனர் பாரதி ராஜா, இன்ஸ்பெக்டர் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் வீராசாமி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் கோயம்புத்தூரில் பதுங்கி இருந்த சத்யசாயை கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.50ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள், பறிமுதல் செய்யப்பட்டது.

    சத்யசாயிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சத்யசாய் கலர் லேப்புக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து தனது "கூகுள் பே" மற்றும் "போன் பே" மூலமாக பணத்தை பெற்று நூதனமான முறையில் மோசடி செய்துள்ளார்.

    மேலும் கையாடல் விபரம் யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதால் உடன் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் சிலருக்கும் அவ்வப்போது பணம் கொடுத்து சரி கட்டி உள்ளார்.

    இந்த நிலையில் உரிமையாளர் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கு தொடர்பாக போலீசார் ஊழியர்களை ஒவ்வொருவராக அழைத்து விசாரணை நடத்தி வருவதை அறிந்த சத்யசாய் தனது மோசடி விபரம் அம்பலமாகிவிடும் என பயந்து தலைமறைவானார்.

    இதனால் அவர் தானாக போலீசில் சிக்கிக் கொண்டார். அவர் ஏற்கனவே தேனியில் ரூ.6 லட்சம் மோசடி செய்த வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்கு சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சத்யசாய் 4 இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து உள்ளார். ஓரினசேர்க்கையில் அதிக ஈடுபாடு கொண்ட அவர், வளசரவாக்கம் பகுதியில் உள்ள "மசாஜ் சென்டர்" ஒன்றிற்கு சென்ற போது அங்கு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் சத்யசாய் அடிக்கடி நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்து உள்ளது. கைதான சத்யசாய் மீது போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    • தொழில் அதிபர் ரமேஷ் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு ரூ.1 கோடியே 24 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தார்.
    • கணவன்-மனைவி இருவரையும் நேரில் சந்தித்து பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்து விட்டனர்.

    கோவை:

    கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). தொழில் அதிபரான இவர் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலமாக என்ன தொழில் செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என

    தேடினார்.

    இதனை பார்த்த சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பல் டாக்டர் தம்பதியான அரவிந்தன் (35). இவரது மனைவி துர்கா பிரியா (33). இவர்கள் தொழில் அதிபர் ரமேசை தொடர்பு கொண்டனர். அவர்கள் சென்னை கோடம்பாக்கத்தில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வருவதாக கூறினர். தற்போது துருக்கி நாட்டில் இருந்து ஆப்பிள் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருவதாக கூறினர். நீங்கள் எங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஆப்பிள் இறக்குமதி செய்து தருவதாகவும், இதன் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறினர். மேலும் தற்போது துருக்கி நாட்டில் இருந்து ஒரு கண்டெய்னரில் ஆப்பிள் வருவதாகவும் நீங்கள் ரூ.1 கோடியே 24 லட்சத்து 60 ஆயிரம் பணம் செலுத்தினால் ரூ.2 கோடி லாபம் சம்பாதிக்கலாம் என கூறினர்.

    இதனை உண்மை என நம்பிய தொழில் அதிபர் ரமேஷ் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு ரூ.1 கோடியே 24 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தார். ஆனால் பணம் அனுப்பி நீண்ட நாட்கள் ஆகியும் அவர்கள் கூறியபடி ஆப்பிள் வந்து சேரவில்லை. இது குறித்து ரமேஷ் கேட்ட போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து அவர் சென்னைக்கு சென்று கணவன்-மனைவி இருவரையும் நேரில் சந்தித்து பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழில் அதிபர் ரமேஷ் கோவை மாநகர குற்றப்பிரிவில் பல் டாக்டர் தம்பதிகளான அரவிந்தன், துர்கா பிரியா ஆகியோர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கோவை தொழில் அதிபரிடம் ஆப்பிள் அனுப்புவதாக கூறி ரூ.1 கோடியே 24 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை மோசடி செய்த பல் டாக்டர் அரவிந்தனை கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் மோசடி பணத்தில் தயாரிப்பாளராக இருந்து சினிமா படம் எடுத்து செலவு செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள டாக்டர் துர்கா பிரியாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • பாதிக்கப்பட்ட மார்கரேட் ஜெனிபர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
    • திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் உத்தரவின் பேரில் துவாக்குடி போலீசார் நேற்று இரவு வீரமலையை கைது செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண் பிரசாத். இவரது மனைவி மார்கரேட் ஜெனிபர். இவர் நர்சிங் படிப்பு முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 2021 ஆண்டில், அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலை வாங்கி தருவதாக சொல்லி கிருஷ்ண சமுத்திரத்தை சேர்ந்த லாசர், தேனீர் பட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க. திருவெறும்பு தெற்கு ஒன்றிய பொருளாளர் (எடப்பாடி அணி) வீரமலை, சூரியூரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி சுப்பிரமணி ஆகியோர் மார்கரேட் ஜெனிபரிடம் ரூ.4 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளனர். கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதற்கும் அவர்கள் கொடுக்க மறுத்துள்ளனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட மார்கரேட் ஜெனிபர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து லாசரை கைது செய்தனர்.

    இதில் தொடர்புடைய சுப்ரமணியும், வீரமலையும் கைதாகாமல் முன் ஜாமீனுக்கு முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில் நீதிமன்றத்தில் அவர்களின் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இருந்த போதிலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்பட்டது. இந்த நிலையில் மார்கெட் ஜெனிபர், திருச்சி ஐஜி, டிஐஜி, எஸ்.பி, மற்றும் திருவெறும்பூர் டி.எஸ்.பி. ஆகியோரிடம் மீண்டும் புகார் மனுகொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் உத்தரவின் பேரில் துவாக்குடி போலீசார் நேற்று இரவு வீரமலையை கைது செய்தனர். வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருவெறும்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் வழக்கில் தொடர்புடைய மற்றொரு அ.தி.மு.க. நிர்வாகியான சுப்பிரமணியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கடந்த 2020-21-ம் ஆண்டு அசோக்குமார் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 1 லட்சம் நூல்கண்டுகளை ராமமூர்த்தியிடம் கொடுத்து அதனை துணியாக மாற்றி தருமாறு கொடுத்துள்ளார்.
    திருப்பூர்:

    கரூரை சேர்ந்தவர் அசோக்குமார். நூல் வியாபாரம் செய்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த அ.தி.மு.க. நகர செயலாளரும், மில் உரிமையாளருமான ராமமூர்த்தியிடம் நூல்களை கொடுத்து அதனை துணியாக மாற்றி வாங்கி வந்தார். கடந்த 12 வருடங்களாக அவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த 2020-21-ம் ஆண்டு அசோக்குமார் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 1 லட்சம் நூல்கண்டுகளை ராமமூர்த்தியிடம் கொடுத்து அதனை துணியாக மாற்றி தருமாறு கொடுத்துள்ளார். ஆனால் அதனை வாங்கிய ராமமூர்த்தி துணியாக மாற்றி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து ரூ.1.25 கோடி பணத்தை திருப்பி தருமாறு அசோக்குமார் ராமமூர்த்தியிடம் கேட்டுள்ளார். ஆனால் ராமமூர்த்தி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இது குறித்து அசோக்குமார் திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ராமமூர்த்தியை இன்று கைது செய்தனர்.
    ×