search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் பகுதி நேர வேலை எனக்கூறி கர்நாடக மருத்துவ மாணவரிடம் ரூ.26 லட்சம் மோசடி
    X

    புதுவையில் பகுதி நேர வேலை எனக்கூறி கர்நாடக மருத்துவ மாணவரிடம் ரூ.26 லட்சம் மோசடி

    • கூடுதலாக பணம் முதலீடு செய்தால்தான் பணம் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
    • தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வேதபிரகாஷ் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் சிரியாரா கிராமத்தை சேர்ந்தவர் வேதபிரகாஷ் (வயது 26).

    புதுவை பிரியதர்ஷினி நகரில் தங்கி, ஜிப்மரில் முதுகலை மருத்துவம் படித்து வருகிறார்.

    இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.

    அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம். யூடிப் சேனல்களை லைக் செய்தால் ரூ.150 கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய அவர் அந்த யூடிப் சேனலை லைக் செய்து போட்டோ எடுத்து அனுப்பினார். அவர் வங்கி கணக்கில் ரூ.150 செலுத்தப்பட்டது.

    இதன்பின் கிரிப்டோ கரன்சி, பிட்காயின் டாஸ்க் முடித்தால் அதிக பணம் கிடைக்கும் என்ற செய்தி வந்தது.

    இதை நம்பி சோதனை முறையில் ரூ.ஆயிரம் செலுத்தினார்.

    டாஸ்க் முடிந்தவுடன் பிட்காயின் வேலட்டில் ரூ.ஆயிரத்து 300 வந்தது. அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றினார். இதைத்தொடர்ந்து ரூ.3 ஆயிரம் செலுத்தினார். அதற்கான தொகையும் காண்பித்தது.

    இதனால் அந்த தளத்தை முழுமையாக நம்பிய வேதபிரகாஷ் ரூ.26.30 லட்சம் பணத்தை முதலீடு செய்தார். அப்போது அவரது கணக்கில் ரூ.36.34 லட்சம் பணம் இருந்தது. இந்த பணத்தை தனது வங்கி கணக்குக்கு மாற்ற முயன்றார்.

    மேலும் கூடுதலாக பணம் முதலீடு செய்தால்தான் பணம் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வேதபிரகாஷ் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×