search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Doctor Arrested"

    • தொழில் அதிபர் ரமேஷ் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு ரூ.1 கோடியே 24 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தார்.
    • கணவன்-மனைவி இருவரையும் நேரில் சந்தித்து பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்து விட்டனர்.

    கோவை:

    கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). தொழில் அதிபரான இவர் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலமாக என்ன தொழில் செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என

    தேடினார்.

    இதனை பார்த்த சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பல் டாக்டர் தம்பதியான அரவிந்தன் (35). இவரது மனைவி துர்கா பிரியா (33). இவர்கள் தொழில் அதிபர் ரமேசை தொடர்பு கொண்டனர். அவர்கள் சென்னை கோடம்பாக்கத்தில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வருவதாக கூறினர். தற்போது துருக்கி நாட்டில் இருந்து ஆப்பிள் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருவதாக கூறினர். நீங்கள் எங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஆப்பிள் இறக்குமதி செய்து தருவதாகவும், இதன் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறினர். மேலும் தற்போது துருக்கி நாட்டில் இருந்து ஒரு கண்டெய்னரில் ஆப்பிள் வருவதாகவும் நீங்கள் ரூ.1 கோடியே 24 லட்சத்து 60 ஆயிரம் பணம் செலுத்தினால் ரூ.2 கோடி லாபம் சம்பாதிக்கலாம் என கூறினர்.

    இதனை உண்மை என நம்பிய தொழில் அதிபர் ரமேஷ் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு ரூ.1 கோடியே 24 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தார். ஆனால் பணம் அனுப்பி நீண்ட நாட்கள் ஆகியும் அவர்கள் கூறியபடி ஆப்பிள் வந்து சேரவில்லை. இது குறித்து ரமேஷ் கேட்ட போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து அவர் சென்னைக்கு சென்று கணவன்-மனைவி இருவரையும் நேரில் சந்தித்து பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழில் அதிபர் ரமேஷ் கோவை மாநகர குற்றப்பிரிவில் பல் டாக்டர் தம்பதிகளான அரவிந்தன், துர்கா பிரியா ஆகியோர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கோவை தொழில் அதிபரிடம் ஆப்பிள் அனுப்புவதாக கூறி ரூ.1 கோடியே 24 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை மோசடி செய்த பல் டாக்டர் அரவிந்தனை கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் மோசடி பணத்தில் தயாரிப்பாளராக இருந்து சினிமா படம் எடுத்து செலவு செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள டாக்டர் துர்கா பிரியாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×