search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.23 லட்சம் மோசடி- ஏஜெண்டு நிறுவன உரிமையாளர் மீது வழக்கு
    X

    வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.23 லட்சம் மோசடி- ஏஜெண்டு நிறுவன உரிமையாளர் மீது வழக்கு

    • டேனியல் செல்வராஜ் அனுப்பிய போலி கடிதம் குறித்து மணிகண்டன் கேட்டபோது, அவரை தகாத வார்த்தையில் கூறி மிரட்டியுள்ளார்.
    • மணிகண்டன் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    தருமபுரி:

    திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் டேனியல் செல்வராஜ் (வயது 25).

    இவர் தருமபுரியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும் தனியார் ஏஜெண்டு நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். இது குறித்து அவர் சமூக வலைத்தளங்களில் விளம்பரமும் செய்துள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், பெண்டர அள்ளி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இந்த விளம்பரத்தை நம்பி டேனியல் செல்வராஜுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    அப்போது டேனியல் செல்வராஜ் மாலத்தீவில் 100 பேருக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.இதற்கு முன் பணமாக ரூ. 1 லட்சமும், மீதி பணம் விசா வந்தவுடன் ரூ.2 லட்சம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய மணிகண்டன் பல்வேறு நபர்களிடம் இருந்து பணத்தை வாங்கி டேனியல் செல்வராஜூ வங்கி கணக்கிற்கு ரூ.19 லட்சம் வரை அனுப்பியுள்ளார்.

    இதே போல் மதுரையை சேர்ந்த பிரகாஷ் என்பவரும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பியுள்ளார். மேலும் நடராஜ் என்பவரும் ரூ.1.5 லட்சம் அனுப்பியுள்ளார். இவர் மொத்தமாக பல்வேறு நபர்களிடம் இருந்து ரூ.23 லட்சம் வரை வாங்கியதாக தெரிகிறது.

    பின்னர் இவர் நிறுவன கடிதம், மற்றும் விசா அனைத்தையும் இவர்களுக்கு அனுப்பி உள்ளார். அப்போது சோதனை செய்து பார்த்ததில் இவை அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது.

    டேனியல் செல்வராஜ் அனுப்பிய போலி கடிதம் குறித்து மணிகண்டன் கேட்டபோது, அவரை தகாத வார்த்தையில் கூறி மிரட்டியுள்ளார்.

    இது குறித்து மணிகண்டன் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×