search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohammed Shami"

    குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை முகம்மது சமி பெற்றுள்ளார். #MohammedShami
    நேப்பியர்:

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. இதன்படி முதலில் பந்து வீசிய இந்திய அணி அபார பந்து வீச்சு மூலம் நியூசிலாந்து அணியை திணறடித்தது.

    நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சமி ஆட்டமிழக்கச் செய்தார். நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் விக்கெட், முகம்மது சமிக்கு 100-வது விக்கெட்டாக அமைந்தது.



    இதன் மூலம், குறைந்த போட்டியில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையை முகம்மது சமி பெற்றுள்ளார். தனது 56-வது ஒருநாள் போட்டியில் முகம்மது சமி 100-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். முன்னதாக, 59 ஒருநாள் போட்டிகளில் இர்பான் பதான், 100 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது. ஜாகீர் கான் 65 போட்டிகளில் 100 விக்கெட்டை எட்டியிருந்தார். #MohammedShami
    இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான உனத்கட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8.4 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. #IPLAuction
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. வேகப்பந்து வீச்சாளர்களை ஏலம் விடும்போது அனைத்து அணிகளும் போட்டி போட்டு அவர்களை ஏலம் எடுக்க விரும்பின. இடது கை வேகப்பந்து வீச்சாளர் உனத்கட்டை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக அளவில் விரும்பியது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 5.8 கோடி ரூபாய் வரை விருப்பம் தெரிவித்தது. ஆனால் அதற்குமேல் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் போட்டியிட்டன. இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8.4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இன்றைய ஏலத்தில் இதுதான் அதிகபட்ச தொகையாக இருக்க வாய்ப்புள்ளது.

    ஆஸ்திரேலியா தொடரில் அசத்தி வரும் முகமது ஷமியை வாங்கவும் சென்னை சூப்பர் கிங்ஸ் விருப்பம் தெரிவித்தது. ஆனால், இறுதியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4.8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. வருண் ஆரோனை 2.40 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.
    ரஞ்சி கோப்பை தொடருக்கான 3-வது போட்டியை ஸ்கிப் செய்யுங்கள் என்று இஷாந்த் சர்மா மற்றும் அஸ்வினிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. #BCCI #AUSvIND
    இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. நாளைமறுநாள் (21-ந்தேதி) டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. அதன்பின் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வெல்ல அதிக அளவில் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் வீரர்கள் யாரும் எந்தவிதத்திலும் காயம் அடைந்து விடக்கூடாது என்பதில் பிசிசிஐ கவனமாக இருந்து வருகிறது.

    தற்போது இந்தியாவின் முன்னணி முதல்தர போட்டியான ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது போட்டி நாளை தொடங்குகிறது. ஏற்கனவே டி20 அணி ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், டெஸ்ட் அணி 24-ந்தேதி புறப்படுகிறது. ரஞ்சி போட்டி 23-ந்தேதிதான் முடியும். இதனால் வீரர்களுக்கு ஓய்வு இருக்காது.

    ஆகவே, டெஸ்ட் போட்டியில் புத்துணர்ச்சியுடன் விளையாட ரஞ்சி போட்டியை ஸ்கிப் செய்யும்படி இஷாந்த் சர்மா, அஸ்வினிடம் பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.

    முகமது ஷமி மட்டும் ரஞ்சி டிராபியில் பந்து வீச ஸ்பெஷல் அனுமதி பெற்றுள்ளார். ஆனால் 15 ஓவர்கள் வீசி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசியம் ஏற்பட்டால் கூடுதல் ஒன்றிரண்டு ஓவர்கள் வீசி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    வீடியோக்களை பார்த்து ஆஸ்திரேலியா தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். #AUSvIND
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்பவர் முகமது ஷமி. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்திய போதிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா 1-4 எனத் தொடரை இழந்தது.

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இங்கிலாந்து ஆடுகளத்தை போன்று ஆஸ்திரேலியா ஆடுகளத்தில் அதிக அளவில் ஸ்விங் இருக்காது. ஆனால் பவுன்சர், ரிவர்ஸ் ஸ்விங் இருக்கும்.

    இதனால் முகமது ஷமி, உமேஷ் யாதவ், இசாந்த ஷர்மா ஆகியோர் முக்கிய பங்காற்றுவார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பந்து வீச, வீடியோக்களை பார்த்து தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.



    ஆஸ்திரேலியா தொடர் குறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘வேகப்பந்து வீச்சுக்குழு இங்கிலாந்தில் சிறப்பாக பந்து வீசினோம். ஏராளமான வீடியோக்களை பார்த்து ஆஸ்திரேலியா தொடருக்காக தயாராகிக் கொண்டிருக்கிறோம். எதிரணி மிகவும் வலுவாக உள்ளதால், முடிந்த வகையில் தொடர் முழுவதும் கவனம் செலுத்துவதுதான் திட்டம். சரியான லைன் மற்றும் லெந்த் ஆகியவற்றில் துல்லியமாக பந்து வீச முயற்சி செய்வோம்.

    எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம். வெற்றி அல்லது தோல்வி அதிர்ஷ்டத்தை சார்ந்தது. 100 சதவீத பங்களிப்பை வெளிப்படுத்துவோம். ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் விளையாடவில்லை என்றால், ஆஸ்திரேலியா அணி உண்மையிலேயே பலவீனமான அணியாகத்தான் இருக்கும். ஆனால், நம்முடைய திட்டத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்’’ என்றார்.
    சிறப்பாக பந்து வீசிய போதிலும் சில நேரங்களில் விக்கெட்டுக்கள் வீழ்த்த அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது என முகமது ஷமி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 122 ஓவர்கள் விளையாடி 332 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. 2-வது இன்னிங்சில் 112.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    முதல் இன்னிங்சில் முகமது ஷமி 30 ஓவர்கள் வீசினார். 7 மெய்டன்களுடன் 72 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனால் விக்கெட் ஏதும் வீழ்த்த முடியவில்லை. முகமது ஷமி சிறப்பாக பந்து வீசினார். இன்-ஸ்விங், அவுட்-ஸ்விங், ரிவர்ஸ்-ஸ்விங் என இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார். பந்து எட்ஜ் ஆகியது. ஸ்டம்பிற்கு மேலாக சென்றது. ஆனால் விக்கெட் மட்டும் விழவில்லை.



    2-வது இன்னிங்சில் 25 ஓவர்கள் வீசி 3 மெய்டனுடன் 110 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இந்த டெஸ்டில் 55 ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தினார்கள்.

    இந்நிலையில் ‘‘சிறப்பாக பந்து வீசினாலும் சில நேரங்களில் விக்கெட் வீழ்த்த அதிர்ஷ்டமும் தேவை. குறிப்பாக புதுப்பந்தில் குறிப்பிடத்தக்கது. பந்து வீச்சாளரின் முக்கிய இலக்கு சரியான இடத்தில் பந்தை தொடர்ந்து பிட்ச் செய்வதுதான். ஆனால் விக்கெட்டுக்களை அறுவடை செய்வதில் அதிர்ஷ்டமும் தேவையாக உள்ளது’’ என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
    245 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 46 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 273 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாளில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 271 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டூவர்ட் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து புஜாரா களம் இறங்கினார்.



    புஜாராவை 5 ரன்னிலும், ஷிகர் தவானை 17 ரன்னிலும் வெளியேற்றினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இதனால் இந்தியா 22 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்தியா 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் அடித்துள்ளது. விராட் கோலி 10 ரன்னுடனும், ரகானே 13 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 199 ரன்கள் தேவை.
    சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து சாம் குர்ரான் (78) மொயீன் அலி ஆகியோரின் ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    அதன்பின் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. புஜாரா 132 ரன்கள் அடித்து கடைசி வரை நிற்கவும், விராட் கோலி 46 ரன்கள் அடிக்கவும் இந்தியா முதல் இன்னிங்சில் 273 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 27 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜோ ரூட் (48), ஜென்னிங்ஸ் (36), பென் ஸ்டோக்ஸ் (30), பட்லர் (69) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. சாம் குர்ரான் 37 ரன்கள் எடுத்து களத்தில் நின்றிருந்தார். ரஷித் அடில் ஆட்டமிழந்ததும் 3-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.


    முகமது ஷமி

    இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் பந்தை ஸ்டூவர்ட் சந்தித்தார். முகமது ஷமி பந்து வீசினார். பிராட் முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் களம் இறங்கினார். 97-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் சாம் குர்ரான் இரண்டு ரன்கள் எடுக்க முயற்சிக்கையில் ரன்அவுட் ஆனார். இதனால் இங்கிலாந்து 96.1 ஓவரில் 271 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. சாம் குர்ரான் 46 ரன்கள் எடுத்தார்.

    முதல் இன்னிங்சில் 27 ரன்கள் பின்தங்கியிருந்ததால், இங்கிலாந்து 244 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி சார்பில் முகமதுஷமி அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சை பார்த்து ஏராளமான விஷயங்களை கற்று இருக்கிறேன் என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதாம்ப்டனில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்றைய பயிற்சிக்கு பிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி அளித்த பேட்டியில், ‘‘இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்  ஜேம்ஸ் ஆண்டர்சனின் (இதுவரை 557 விக்கெட் வீழ்த்தியுள்ளார்) பந்து வீச்சை உன்னிப்பாக கவனித்து, அதில் இருந்து நிறைய கற்று இருக்கிறேன்.



    ஆண்டர்சன் அதிகமான வேகத்தில் பந்து வீசுவதில்லை. ஆனாலும் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்துகிறார், இது எப்படி என்பதை எப்போதும் கவனிப்பது உண்டு. அவர் பந்தை எந்த மாதிரி பிட்ச் செய்து, எந்த அளவுக்கு எழுப்புகிறார் என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். வித்தியாசமான சீதோஷ்ண நிலையில் வித்தியாசமாக பந்து வீசக்கூடிய ஒரு பவுலர் ஆண்டர்சன்’’ என்றார்.
    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சுக்குழு 19 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. இதில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த டெஸ்டில் இந்தியா பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகிய பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. அஸ்வினைத் தவிர மற்ற நான்கு பேரும் வேகப்பந்து வீச்சாளர்கள்.



    இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் வீழ்த்தினார். அவரது பந்து ஓரளவிற்கு டர்ன் ஆகியது. இதனால் அஸ்வின் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    துரதிருஷ்டவசமாக அவருக்கு காயம் ஏற்பட்டது. இருந்தாலும் 2-வது இன்னிங்சில் சிறப்பாக பந்து வீச்சாளர். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 38.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. இதனால் அஸ்வின் பந்து வீசவில்லை. ஹர்திக் பாண்டியா ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இஷாந்த் ஷர்மா, பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.



    இதனால் முதல் இன்னிங்சில் வேகப்பந்து வீச்சாளர்களே 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள். 2-வது இன்னிங்சில் பும்ரா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா, ஷமி, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    ஒட்டுமொத்தமாக வேகப்பந்து வீச்சாளர்கள் 19 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். இதன்மூலம் ஒரே டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட் வீழ்த்திய 2-வது போட்டி இதுவாகும். இதற்கு முன் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற போட்டியில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக வேகப்பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்கள்.



    1996-ல் டர்பனில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 18 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்கள். 1997-ல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராகவும், 2001-ல் கண்டியில் 18 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளனர்.
    முகமது சமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள அவரது மனைவி, ஜீவனாம்சமாக மாதம் 10 லட்ச ரூபாய் கோரிய மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. #MohammadShami #HasinJahan
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது சமி. இவர் மாடல் அழகியும், கொல்கத்தா அணியின் உற்சாகமளிக்கும் நடனகலைஞரான ஹசின் ஜஹான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

    சில மாதங்களுக்கு முன்பு, ஹசின் ஜஹான், தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னை கொடுமை செய்து கொலை செய்ய முயற்சிப்பதாகவும் புகார் அளித்து இருந்தார். அதோடு, முகமது சமி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    இதையடுத்து, முகமது சமி, வருடத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பெருவதாகவும், அதனால் தனக்கும் தன் மகளுக்கும் மாதம் 10 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் எனவும் ஹசின் ஜஹான் கோரியிருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த அலிபோர் மாவட்ட நீதிமன்றம், ஹசின் ஜஹானின் மனுவை தள்ளுபடி செய்தது.

    மேலும், மாதந்தோறும் அவர்களது மகளின் பராமரிப்புக்காக மட்டும் 80 ஆயிரம் ரூபாய் பணம் அளிக்க வேண்டும் என முகமது சமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MohammadShami #HasinJahan
    கிரிக்கெட் மீதான தீராத ஆர்வம்தான் வெளியில் உள்ள பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவியது என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று தொடங்கியது. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களின் நேர்த்தியான பந்து வீச்சால் இங்கிலாந்து முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்தது. வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி ரிவர்ஸ் ஸ்விங்கில் அசத்தினார். அவர் 19 ஒவரில் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    முகமது ஷமி ஐபிஎல் தொடருக்கு முன் மனைவி கொடுத்த புகாரால் சிக்கலுக்குள்ளானார். ஐபிஎல் தொடர் முழுவதுமாக அவரால் பங்கேற்க இயலவில்லை. கார் விபத்தில் இருந்து தப்பினார். அதன்பின் ஆப்கானிஸ்தான் டெஸ்டிற்கான யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்தார்.

    தனது தீவிர முயற்சியால் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பிடித்தார். எட்ஜ்பாஸ்டனில் சிறப்பாக பந்து வீசிய ஷமி, கிரிக்கெட்டி மீதான ஆர்வம்தான் வெளியில் உள்ள பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவுகிறது என்றார்.

    இதுகுறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்கா தொடருக்குப்பின், குடும்ப விவகாரம் உள்பட பல பிரச்சனைகள் ஏற்பட்டன. கிரிக்கெட்டிற்கும் குடும்ப பிரச்சினைக்கும் இடையிலான போட்டியில் அதிக அளவில் போராடினேன். கிரிக்கெட்டை நான் விரும்பியதால், அதற்கு முக்கியத்துவம் கொடுத்தேன்.



    என்னுடைய வேலையில் சிறப்பான கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்பினேன். அதன்பின் வாழக்கையில் என்னது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று திடமாக இருந்தேன். கடினமான எந்தவொரு பிரச்சினையை சந்தித்தாலும் முதலில் கிரிக்கெட் விளையாட வேண்டும். இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்பினேன். என்னுடைய முயற்சிக்கு சரியான பலன் தற்போது கிடைத்துள்ளது.

    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் முதல் நாளில் இரண்டு விக்கெட்டும், இன்று ஒரு விக்கெட்டும் என முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    இன்றைய 2-வது நாளில் 10 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #ENGvIND #Ashwin #Shami
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று தொடங்கியது. முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 88 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் 42 ரன்களும், ஜோ ரூட் 80 ரன்களும், பேர்ஸ்டோவ் 70 ரன்களும் அடித்தனர்.

    சாம் குர்ரான் 24 ரன்னுடனும், ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரை அஸ்வின் வீசினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் எதிர்கொண்டார். இந்த ஓவரில் ஆண்டசர்ன் இரண்டு ரன்கள் சேர்த்தார்.



    அடுத்த ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் சாம் குர்ரான் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 89.4 ஓவர்கள் விளையாடி 287 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இன்று 10 பந்துகள் சந்தித்த இங்கிலாந்து இரண்டு ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டை இழந்தது.

    இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி 3 விக்கெட்டுக்களும் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து ஆல்அவுட் ஆனதைத் தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    ×